அம்பாந்தோட்டை
6°7′0″N 81°7′0″E / 6.11667°N 81.11667°E
அம்பாந்தோட்டை | |
மாகாணம் - மாவட்டம் |
- அம்பாந்தோட்டை |
அமைவிடம் | 6°07′00″N 81°07′00″E / 6.1167°N 81.1167°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-15 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
46777 - 11213 |
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.[1][2][3]
புவியியலும் காலநிலையும்
தொகுஅம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ. ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
மக்கள்
தொகுஇது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 46777 | 37839 | 805 | 54 | 2830 | 52 | 5197 |
நகரம் | 11213 | 5642 | 505 | 29 | 1653 | 22 | 3324 |
கிராமம் | 35564 | 32197 | 300 | 25 | 1177 | 30 | 1832 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 46777 | 37769 | 590 | 8092 | 169 | 141 | 16 |
நகரம் | 11213 | 5646 | 395 | 5015 | 86 | 55 | 16 |
கிராமம் | 35564 | 32123 | 195 | 3077 | 83 | 86 | 0 |
கைத்தொழில்
தொகுஅம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கு பிரசித்தமான பிரதேசமாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hambantota". Hambantota District Chamber of Commerce. Archived from the original on 5 April 2018. Retrieved 30 April 2011.
- ↑ "Hambantota District. Hambantota: Sri Lanka's Deep South". Archived from the original on 2016-03-04. Retrieved 2012-07-25.
- ↑ The Asiatic annual register, or, A View of the history of ..., Volume 8, Issue 1, p.74.