செழியன் ஹரிநிசாந்த்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

செழியன் ஹரிநிசாந்த் (Chezhian Harinishanth பிறப்பு: ஆகஸ்ட் 16 , 1996) இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 2018-19 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலி இருபது20 போட்டித் தொடர்களில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக கலந்து கொண்டார்.[1] 2019-20ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே தொடருக்காக செப்டம்பர் 24இல் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[2] 2019-20ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பைத் தொடருக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3]

செழியன் ஹரிநிசாந்த்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு16 ஆகத்து 1996 (1996-08-16) (அகவை 28)
உதகமண்டலம், தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை
பங்குமட்டையாட்டம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–தற்போது வரைதமிழ்நாடு துடுப்பாட்ட அணி
மூலம்: Cricinfo, பெப்ரவரி 21, 2019

2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் 41எனும் மட்டையாட்ட சராசரியோடு 246 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[4] இவர் 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Feb 21 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  2. "Elite, Group C, Vijay Hazare Trophy at Jaipur, Sep 24 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  3. "Elite, Group B, Ranji Trophy at Indore, Dec 25-28 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
  4. "match stats". ESPNcricinfo.com|url=https://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=13822&team=2184&type=tournament%7Caccess-date=15 March 2021|website=Cricinfo}}
  5. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செழியன்_ஹரிநிசாந்த்&oldid=3915010" இலிருந்து மீள்விக்கப்பட்டது