2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2021-23 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்திய உலகத் தேர்வு துடுப்பாட்ட வகையின் இரண்டாம் பதிப்பு ஆகும்.[1][2][3] இப்போட்டிகள் 2021 ஆகத்து 4 இல் தொடங்கியது,[4] இறுதிப்போட்டி 2023 சூன் 7–11 நாட்களில் இலண்டன், தி ஓவல் அரங்கில் ஆத்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.[5]
நாட்கள் | ஆகத்து 4, 2021 – மார்ச்சு 31, 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடக்கநிலை, இறுதி |
வாகையாளர் | ஆத்திரேலியா (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9 |
மொத்த போட்டிகள் | 70 |
அதிக ஓட்டங்கள் | ஜோ ரூட் (1915) |
அதிக வீழ்த்தல்கள் | நேத்தன் லியோன் (88) |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை |
நியூசிலாந்து நடப்பு வாகையாளர் ஆகும்.[6][7] 2021-23 இன் இறுதிப்போட்டி சூன் 2023 இல் இலண்டனில் நடத்தப்படும் என ஐசிசி 2022 செப்டம்பரில் அறிவித்தது.[8][9] இறுதிப்போட்டியில் ஆத்திரேலியா 209 ஓட்டங்களால் இந்தியாவை வென்று, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையைப் பெற்றது.[10]
போட்டி முறை
தொகு69 போட்டிகள் கொண்ட இத்தொடரில், அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை (Series) விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும், பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடுகின்றது.
புள்ளிகள் வழங்கும் முறை
தொகுஒவ்வொரு போட்டியிலும், அணிகள் 12 புள்ளிகளுக்காக போட்டியிடும் . ஒரு போட்டியை வெல்லும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் சமனாகும் (Tie) பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடியும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வியைத் தழுவும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. புள்ளிப்பட்டியலில் அணிகள், போட்டியிட்ட புள்ளிகளில், பெற்ற புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.[11]
போட்டி முடிவு | கிடைக்கும் புள்ளிகள் | போட்டியிட்ட புள்ளிகள் | புள்ளிகள் சதவீதம் |
---|---|---|---|
வெற்றி | 12 | 12 | 100 |
சமன் (Tie) | 6 | 12 | 50 |
டிரா (Draw) | 4 | 12 | 33.33 |
தோல்வி | 0 | 12 | 0 |
அணிகள்
தொகுதொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்[12]:
அட்டவணை
தொகுபின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.
அணி | போட்டிகள் | மோதாத அணிகள் | ||
---|---|---|---|---|
மொத்தம் | சொந்த நாட்டில் | வெளி நாடுகளில் | ||
ஆஸ்திரேலியா | 18 | 10 | 8 | வங்காளதேசம், நியூசிலாந்து |
வங்காளதேசம் | 12 | 6 | 6 | ஆஸ்திரேலியா, இங்கிலாந்து |
இங்கிலாந்து | 22 | 11 | 11 | வங்காளதேசம், இலங்கை |
இந்தியா | 19 | 9 | 10 | பாக்கிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் |
நியூசிலாந்து | 13 | 6 | 7 | ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் |
பாக்கிஸ்தான் | 13 | 7 | 6 | இந்தியா, தென்னாப்பிரிக்கா |
தென்னாப்பிரிக்கா | 15 | 7 | 8 | இலங்கை, பாக்கிஸ்தான் |
இலங்கை | 13 | 6 | 7 | இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா |
மேற்கிந்தியத் தீவுகள் | 13 | 7 | 6 | இந்தியா, நியூசிலாந்து |
குழுநிலைப் போட்டிகள்
தொகுபுள்ளிப்பட்டியல்
தொகுநிலை | அணி | ஆட்டங்கள் | க. | போ.பு. | பு. | வீ. | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
போ | வெ | தோ | ச | ||||||
1 | ஆத்திரேலியா | 19 | 11 | 3 | 5 | 0 | 228 | 152 | 66.7 |
2 | இந்தியா | 18 | 10 | 5 | 3 | 5[a] | 216 | 127 | 58.8 |
3 | தென்னாப்பிரிக்கா | 15 | 8 | 6 | 1 | 0 | 180 | 100 | 55.6 |
4 | இங்கிலாந்து | 22 | 10 | 8 | 4 | 12[b] | 264 | 124 | 47 |
5 | இலங்கை | 12 | 5 | 6 | 1 | 0 | 144 | 64 | 44.44 |
6 | நியூசிலாந்து | 13 | 4 | 6 | 3 | 0 | 156 | 60 | 38.46 |
7 | பாக்கித்தான் | 14 | 4 | 6 | 4 | 0 | 168 | 64 | 38.1 |
8 | மேற்கிந்தியத் தீவுகள் | 13 | 4 | 7 | 2 | 2[c] | 156 | 54 | 34.6 |
9 | வங்காளதேசம் | 12 | 1 | 10 | 1 | 0 | 144 | 16 | 11.1 |
Source: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை,[13][14] இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[15] இறுதி இற்றை: 20 மார்ச் 2023 |
- முதலிரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.
- புள்ளிகள் குறைப்பு:
- ↑
- 2021 ஆகத்து 4 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் தேர்வில் இந்தியா மெதுவாக விளையாடியதில், 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
- 2021 திசம்பர் 26 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் தேர்வில் இந்தியா மெதுவாக விளையாடியதில், 1 புள்ளி குறைக்கப்பட்டது.
- 2022 சூலை 5 அன்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது தேர்வில் இந்தியா மெதுவாக விளையாடியதில், 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
- ↑
- 2021 ஆகத்து 4 அன்று இந்தியாவுக்கு எதிரான முதல் தேர்வில் இங்கிலாந்து மெதுவாக விளையாடியதில், 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
- 2021 திசம்பர் 11 அன்று ஆத்திரேலியாவுக்கு எதிரான முதல் தேர்வில் இங்கிலாந்து மெதுவாக விளையாடியதில், 8 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
- 2022 சூன் 14 அன்று நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது தேர்வில் இங்கிலாந்து மெதுவாக விளையாடியதில், 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
- ↑
- 2022 மார்ச் 8 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் தேர்வில் மேற்கிந்தியத் தீவுகள் மெதுவாக விளையாடியதில், 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What lies ahead of the nine teams in the next World Test Championship cycle?". ESPNCricinfo. Archived from the original on 26 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ "World Test Championship : Everything you need to know". cricket.com.au (in ஆங்கிலம்). 12 August 2021. Archived from the original on 12 August 2021. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
- ↑ "Takeaways: Are Pakistan (Beggar) dark horses for the 2023 World Test Championship?". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
- ↑ "ICC confirms details of next World Test Championship". International Cricket Council. Archived from the original on 14 July 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "The Ultimate Test confirmed for 7–11 June at The Oval". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
- ↑ "World Test Championship final: New Zealand beat India on sixth day to become world champions, while India are the defending runners.". BBC Sport இம் மூலத்தில் இருந்து 23 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210623180755/https://www.bbc.co.uk/sport/cricket/57581441.
- ↑ "Kiwi kings stun India to win World Test Championship". Cricket Australia. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
- ↑ "Host venues for World Test Championship 2023 and 2025 Finals confirmed". International Cricket Council. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
- ↑ "The Oval and Lord's to host 2023 and 2025 WTC Finals". ESPNcricinfo. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
- ↑ "Australia crowned ICC World Test Champions with win over India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
- ↑ "Everything you need to know about World Test Championship 2021-23". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ "Everything you need to know about World Test Championship 2021-23". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ "ICC World Test Championship 2021–2023 Standings". International Cricket Council. Archived from the original on 1 August 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
- ↑ "World Test Championship: How your team can reach the final". International Cricket Council. Archived from the original on 19 December 2022. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
- ↑ "ICC World Test Championship 2021–2023 Table". ESPN Cricinfo. Archived from the original on 3 December 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.