2023 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டி

2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரின் இறுதிப்போட்டி 2023 சூன் 7 முதல் 11 வரை ஆத்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையே இலண்டனில் ஓவல் அரங்கில் நடைபெற்றது. இது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் இரண்டாவது பதிப்பாகும்.[1] இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஐசிசி தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் ஆத்திரேலியாவின் முதல் வெற்றியாகும். கூடுதலாக, அவர்களுக்கு $1.6 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் இந்திய அணி US$800,000 ரொக்கப் பரிசைப் பெற்றது.[2] இறுதிப்போட்டியில் ஆத்திரேலியாவுக்குக் கிடைத்த வெற்றி ஆத்திரேலியாவை உலகின் முதல் அணியாகவும், இதுவரை அனைத்து வகை ஐசிசி விருதுகளையும் வென்ற ஒரே அணியாகவும் நிலைநிறுத்தப்பட்டது.[3]

2023 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டி
நிகழ்வு2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
ஆத்திரேலியா இந்தியா
ஆத்திரேலியா இந்தியா
469 296
& &
270/8வி 234
ஆத்திரேலியா 209 ஓட்டங்களால் வெற்றி
நாள்7–11 சூன் 2023
இடம்தி ஓவல், இலண்டன்
ஆட்ட நாயகன்திராவிசு கெட் (ஆசி)
நடுவர்கள்
2021
2025 →

பின்னணி

தொகு
 
இறுதிப்போட்டி நடைபெறும் இலண்டன் ஓவல் அரங்கு

2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை தொடக்கக் கட்டத்தில் ஆத்திரேலியாவும் இந்தியாவும் முதல் இரண்டு அணிகளாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. கோவிட்-19 பெருந்தொற்று, மேலும் பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக இரு அணிகளும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், தொடக்க நிலைகளில் வெற்றி சதவீதத்தால் தீர்மானிக்கப்பட்டது.[4]

இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐசிசி ஆண்கள் தேர்வு அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தையும், ஆத்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஆத்திரேலியா உலக தேர்வு இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாடுகிறது. இந்தியா 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.[5] 2022-23 பார்டர்-கவாசுகர் கிண்ணத்திற்காக இந்தியாவும் ஆத்திரேலியாவும் தமக்கிடையே விளையாடியத் கடைசி தேர்வுப் போட்டியாக அமைந்தது. தி ஓவல் அரங்கில் ஆத்திரேலியா 38 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளிலேயே வென்றது, இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றது.[6]

இறுதிப்போட்டிக்கான வழி

தொகு
  ஆத்திரேலியா சுற்று   இந்தியா
எதிராளி முடிவு குழுநிலைப்_போட்டிகள் எதிராளி முடிவு
  இங்கிலாந்து (H) ஆத்திரேலியா 4 – 0 இங்கிலாந்து சுற்று 1   இங்கிலாந்து (A) இந்தியா 2 – 2 இங்கிலாந்து
  பாக்கித்தான் (A) ஆத்திரேலியா 1 – 0 பாக்கித்தான் சுற்று 2   நியூசிலாந்து (H) இந்தியா 1 – 0 நியூசிலாந்து
  இலங்கை (A) ஆத்திரேலியா 1 – 1 இலங்கை சுற்று 3   தென்னாப்பிரிக்கா (A) இந்தியா 1 – 2 தென்னாப்பிரிக்கா
  மேற்கிந்தியத் தீவுகள் (H) ஆத்திரேலியா 2 – 0 மேற்கிந்தியத் தீவுகள் சுற்று 4   இலங்கை (H) இந்தியா 2 – 0 இலங்கை
  தென்னாப்பிரிக்கா (H) ஆத்திரேலியா 2 – 0 தென்னாப்பிரிக்கா சுற்று 5   வங்காளதேசம் (A) இந்தியா 2 – 0 வங்காளதேசம்
  இந்தியா (A) ஆத்திரேலியா 1 – 2 இந்தியா சுற்று 6   ஆத்திரேலியா (H) இந்தியா 2 – 1 ஆத்திரேலியா
தொடக்க நிலை 1-ஆவது இடம்
நிலை அணி வெ தோ போ.பு புள். வீதம்
1   ஆத்திரேலியா 6 4 1 1 228 152 66.67
விளையாடிய தொடர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில்
இறுதி நிலைகள் தொடக்க நிலை 2-ஆம் இடம்
நிலை அணி வெ தோ போ.பு புள். வீதம்
2   இந்தியா 6 4 1 1 216 127 58.80
விளையாடிய தொடர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில்
2023

ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டி

அணிகள்

தொகு
  ஆத்திரேலியா[7]   இந்தியா[8]

ஆட்டம்

தொகு
7–11 சூன் 2023
ஓட்டப்பலகை
469 (121.3 நிறைவுகள்)
திராவிசு கெட் 163 (174)
முகமது சிராஜ் 4/108 (28.3 நிறைவுகள்)
296 (69.4 நிறைவுகள்)
அஜின்கியா ரகானே 89 (129)
பாட் கம்மின்ஸ் 3/83 (20 நிறைவுகள்)
270/8வி (84.3 நிறைவுகள்)
அலெக்சு கேரி 66* (105)
ரவீந்திர ஜடேஜா 3/58 (23 நிறைவுகள்)
234 (63.3 நிறைவுகள்)
விராட் கோலி 49 (78)
நேத்தன் லியோன் 4/41 (15.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 209 ஓட்டங்களால் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரோகித் சர்மா (இந்), பாட் கம்மின்ஸ் (ஆசி) இருவரும் தமது 50-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.[9][10]
  • முகமது சிராஜ் (இந்) தனது 50-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[11]
  • அஜின்கியா ரகானே (இந்) தனது 5000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[12][13]
  • விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 2,000 ஓட்டங்கள் எடுத்த ஐந்தாவது துடுப்பாளர் ஆனார்,[14] மேலும் ஒரு அணிக்கு எதிராக 5,000 பன்னாட்டு ஓட்டங்களை எடுத்த இரண்டாவது துடுப்பாளர் ஆனார்.[15]

ஆட்ட அதிகாரிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Ultimate Test confirmed for 7–11 June at The Oval". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  2. "Australia crowned World Test Champions after comprehensive win in The Ultimate Test". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
  3. "Australia crowned ICC World Test Champions with win over India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
  4. "World Test Championship 2021-23: ICC introduces new points system, teams get game schedule - check details". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
  5. "World Test Championship final: Both the squads". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
  6. "India and Australia out to improve record at The Oval during WTC final". World Test Championship. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
  7. "Hazlewood in as Aussies trim WTC final squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 May 2023.
  8. "India squad for ICC World Test Championship 2023 Final". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  9. "WTC Final 2023: Rohit Sharma, Pat Cummins feature in their 50th Tests at Oval". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  10. "Rohit Sharma, Pat Cummins to reach milestone in WTC final, 50th Test match for both captains". ANI News. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  11. "WTC Final, IND vs AUS: Siraj reaches 50 Test wickets". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
  12. "Ajinkya Rahane completes 5000 runs in Test cricket, becomes 13th Indian to achieve the feat". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.
  13. "WTC Final: Ajinkya Rahane completes 5000 runs in his 83rd Test match". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.
  14. "WTC Final 2023: Virat Kohli becomes 5th India batter to complete 2000 runs in Test cricket vs Australia". India Today. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
  15. "WTC Final 2023: Kohli completes 5000 runs vs Australia, second Indian after Sachin". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.