இரிச்சி ரிச்சார்ட்சன்

சர் ரிச்சார்ட் பெஞ்சமின் ரிச்சார்ட்சன் (Sir Richard Benjamin Richardson, பிறப்பு: 12 சனவரி 1962) என்பவர் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் தேசியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் ஒரு சிறப்பான மட்டையாட்ட வீரரும், சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர். 1992-இல், இவர் அவ்வாண்டின் விசுடன் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். ரிச்சர்ட்சன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அணிந்திருந்த பரந்த விளிம்பு கொண்ட அரக்கு நிறத் தொப்பிக்காகப் பிரபலமானார், இருப்பினும் அவரது பிற்கால வாழ்க்கையில், அவர் தலைக்கவசம் அணியத் தொடங்கினார்.[1][2]

இரிச்சி ரிச்சார்டான்
Richie Richardson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சர் ரிச்சார்ட் பெஞ்சமின் ரிச்சார்ட்சன்
பிறப்பு12 சனவரி 1962 (1962-01-12) (அகவை 62)
ஐந்து தீவுகள், அன்டிகுவாவும் பர்பியுடாவும்
உயரம்183 cm (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 180)24 நவம்பர் 1983 எ. இந்தியா
கடைசித் தேர்வு24 ஆகத்து 1995 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 41)17 திசம்பர் 1983 எ. இந்தியா
கடைசி ஒநாப14 மார்ச் 1996 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1981–1996லீவார்டு தீவுகள்
1993–1994யோர்க்சயர்
1996/97வடக்கு திரான்சுவால்
1997/98வின்ட்வார்டு தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 86 224 234 313
ஓட்டங்கள் 5,949 6,248 14,618 8,458
மட்டையாட்ட சராசரி 44.39 33.41 40.71 31.67
100கள்/50கள் 16/27 5/44 37/68 6/59
அதியுயர் ஓட்டம் 194 122 194 122
வீசிய பந்துகள் 66 58 914 88
வீழ்த்தல்கள் 0 1 13 2
பந்துவீச்சு சராசரி 46.00 33.92 42.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 5/40 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
90/– 75/– 207/– 94/–
மூலம்: கிரிக்கெட்.ஆர்க்கைவ், 19 அக்டோபர் 2010

ரிச்சர்ட்சன், லீவர்டு தீவுகள் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார், அத்துடன் யார்க்சயர் கவுண்டி, வடக்கு திரான்சுவால் துடுப்பாட்ட அணிகளுக்கும் தலைமைதாங்கி விளையாடினார்.[3][4] ரிச்சர்ட்சன் 2011 சனவரியில், மேற்கிந்திய தீவுகளின் மேலாளராக ஐந்தாண்டு காலத்திற்கு பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) போட்டிகளுக்கு ஆட்ட நடுவராகப் பணியாற்றுகிறார்.[5][5]

தொடக்க வாழ்க்கை

தொகு

ரிச்சார்ட்சன் அண்டிக்குவாவில் ஐந்து தீவுகள் என்ற கிராமத்தில் பிறந்தார். தனது துடுப்பாட்ட வாழ்க்கையை லீவர்டு தீவுகள் துடுப்பாட்ட அணியில் 1982 இல் தொடக்க மட்டையாளராகத் தொடங்கினார்.

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

தொகு

ரிச்சார்ட்சன் 86 தேர்வு ஆட்டங்களில் 1995 வரை விளையாடி 16 சதங்களுடன் 5,949 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய அணிக்கு எதிராக மிகவும் வெற்றிகரமாக விளையாடினார். அவர்களுக்கு எதிராக 9 சதங்களை அடித்தார், மேலும் 1989 இல் கயானாவில் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்களை அடித்தார். 3 உலகக்க்கிண்ணத் தொடர்கள் உட்பட 224 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992-இல், விசுடன் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[2][6]

 
ரிச்சி ரிச்சர்ட்சனின் துடுப்பாட்ட செயல்திறன் வரைபடம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Richens, Matt (2013-12-06). "Fire still burning for Windies great Richardson". Stuff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
  2. 2.0 2.1 "CRICKETER OF THE YEAR 1992 Richie Richardson". Cricinfo. விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
  3. Hilary Beckles (1998). The Development of West Indies Cricket, Vol. 2: The Age of Nationalism. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780745314624.
  4. Devers, Sean (5 January 2007). "Rich history, Guyana ( British Guiana ) participated in first regional game". www.landofsixpeoples.com. Kaiteur News. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
  5. 5.0 5.1 "Richie Richardson appointed to Elite Panel of ICC Match Referees". icc-cricket.com. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2015.
  6. "Richie Richardson". Wisden (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர்
1991/92–1995
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சி_ரிச்சார்ட்சன்&oldid=3990788" இலிருந்து மீள்விக்கப்பட்டது