கோ. ஸ்ரீ. பரத்
கோனா ஸ்ரீகர் பரத் (பிறப்பு: அக்டோபர் 3, 1993) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆந்திராவிற்காக உள்ளூர்ப் போட்டிகளில் இலக்குக் கவனிப்பாளர், மட்டையாளராக விளையாடுகிறார். பிப்ரவரி 2015 இல், ரஞ்சிக் கோப்பையில் முந்நூறு ஓட்டங்களை அடித்த முதல் இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.பிப்ரவரி 2023 இல், அவர் ஆத்திரேலியாவுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கோனா ஸ்ரீகர் பரத் | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 3 அக்டோபர் 1993 விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1] | |||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர், மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 305) | 9 பெப்ரவரி 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 9 மார்ச்சு 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2012–present | ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||
2015 | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2021 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | |||||||||||||||||||||||||||||||||||
2022 | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 4 ஏப்ரல் 2023 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபரத் விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 3, 1993 இல் நகரின் கப்பல்துறையில் கைவினைஞரான கோனா ஸ்ரீனிவாஸ் ராவ் மற்றும் மங்கா தேவி இணையருக்கு மகனாகப் பிறந்தார். [2] [3] இவர் புனித அலோசியஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மற்றும் டாக்டர் லங்காபள்ளி புல்லய்யா கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றார். [4] [5]
பரத் தனது 11 ஆவது வயதில்[6] ஆந்திர ரஞ்சி அணியுடன் பயிற்சியைத் தொடங்கினார். 2005 இல் விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தியா-பாக்கித்தான் ஒருநாள் போட்டியின் பந்து பொறுக்கும் வீரர்களில் ஒருவராக இருந்தார் [7] 19 வயது முதல் [8] இலக்குக் கவனிப்பாளராக விளையாடி வருகிறார்.
சர்வதேச போட்டிகள்
தொகுநவம்பர் 2019 இல், ரித்திமான் சாகாவிற்குப் பதிலாக, வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பட்டப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். [9] சனவரி 2020 இல், ரிஷப் பந்த் விபத்திற்குள்ளானதை அடுத்து ஆத்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். [10]
சான்றுகள்
தொகு- ↑ K. S. Bharat (28 September 2021). KS Bharat Interview | RCB Bold Diaries IPL 2021. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். Event occurs at 15s.
- ↑ Bhattacharjee, Sumit (23 November 2019). "Vizagites rejoice as Bharat joins the Indian Test squad" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vizagites-rejoice-as-bharat-joins-the-indian-test-squad/article30060992.ece.
- ↑ Karhadkar, Amol (9 பெப்ரவரி 2023). "Special day for Suryakumar, Bharat as families witness Test debut in Nagpur" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/indian/india-vs-australia-1st-test-border-gavaskar-trophy-suryakumar-yadav-ks-bharat-debut-family-cricket/article66489600.ece.
- ↑ Gilai, Harish (9 பெப்ரவரி 2023). "Vizag cheers as city boy K.S. Bharat makes Test debut versus Australia" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/vizag-cheers-as-city-boy-ks-bharat-makes-test-debut-versus-australia/article66490088.ece.
- ↑ "City lad selected in Duleep Trophy team". The New Indian Express. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2016/aug/21/City-lad-selected-in-Duleep-Trophy-team-1511457.html.
- ↑ "From an 11-year-old training with Ranji Trophy team to completing MBA, KS Bharat is result of a long grind". The Times of India. 10 பெப்ரவரி 2023. https://timesofindia.indiatimes.com/sports/cricket/australia-in-india/from-an-11-year-old-training-with-ranji-trophy-team-to-completing-mba-ks-bharat-is-result-of-a-long-grind/articleshow/97792568.cms.
- ↑ "Keeper of faith: From ball boy to India A regular, KS Bharat quietly stakes his claim". The Indian Express. 8 October 2019. https://indianexpress.com/article/sports/cricket/india-a-cricketer-ks-bharat-quietly-stakes-his-claim-6058588/.
- ↑ "KS Bharat: the keeper knocking on destiny's door". ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/ks-bharat-the-keeper-knocking-on-destiny-s-door-1158950.
- ↑ "Rishabh Pant released to play Mushtaq Ali, KS Bharat to join as Wriddhiman Saha cover". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
- ↑ "KS Bharat called up to ODI squad as cover for Rishabh Pant". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.