ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி

ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி (The Andhra cricket team ) என்பது ஆந்திரப் பிரதேசம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவர். ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி அரங்கமாகும். ஆனால் சில போட்டிகள் விசயவாடாவிலுள்ள அனந்தபூரில் நடைபெற்றது.[2]

ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஹனுமா விஹாரி
பயிற்றுநர்மண்டி தேசாய்[1]
உரிமையாளர்ஆந்திரத் துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1930
உள்ளக அரங்கம்மருத்துவர். ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி அரங்கம் (இருக்கைகள்30,000);
ஒய். எஸ். ராஜாசெட்டி அரங்கம், கடப்பா (இருக்கைகள்5,000)
வரலாறு
இரஞ்சிக் கோப்பை வெற்றிகள்0
இராணி கோப்பை வெற்றிகள்0
விஜய் அசாரேகோப்பை வெற்றிகள்0
சையது முஸ்டாக் அலி கோப்பை வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:ACA

முன்னோட்டம்

தொகு

ரஞ்சிக் கோப்பை துவங்கிய 1953-54 ஆம் ஆண்டு முதல் அந்தத் தொடரில் இந்த அணி விளையாடி வருகிறது. 1961-62 ஆம் ஆண்டில் ரஞ்சிக்கோப்பை நடைபெறாத ஆண்டைத் தவிர. அக்டோபர் 2016இன் கணக்கின்படி இந்த அணி 297 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 42 வெற்றி, 127 தோல்விகள் மற்றும் 128 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.[3] மேலும் 114 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 30 வெற்றிகள், 83 தோல்விகள் மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு பெறாமலும் உள்ளது.[4]

சான்றுகள்

தொகு
  1. "Welcome to Andhra Cricket Association". Andhracricketassociation.in. Archived from the original on 2018-07-20. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  2. "Andhra Pradesh cricket team". Sports Pundit. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
  3. "Andhra's first-class playing record". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016. {{cite web}}: Unknown parameter |subscription= ignored (help)
  4. "Andhra's List A playing record". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016. {{cite web}}: Unknown parameter |subscription= ignored (help)