அலெக்சு கேரி

அலெக்சு கேரி (Alex Tyson Carey, பிறப்பு: 27 ஆகத்து 1991) என்பவர் ஆத்திரேலிய பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர், தற்போது ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக தேர்வு, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்.[2] இவர் 2010 இல் மேற்கு சிட்னி ஜயண்ட்சு அணியின் தலைவராக விளையாடி, பின்னர் 2012 இல் ஆத்திரேலியக் கால்பந்தாட்ட அணியில் சேர்ந்தார். பின்னர் இவர் அவ்வணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தெற்கு ஆத்திரேலியாவுக்குத் திரும்பி, அங்கு உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.

அலெக்சு கேரி
Alex Carey
2021 இல் கேரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்சு டைசன் கேரி
பிறப்பு27 ஆகத்து 1991 (1991-08-27) (அகவை 32)
லொக்சுட்டன், தெற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்கெஸ்[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பங்குகுச்சக்காப்பாளர்-துடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 461)8 திசம்பர் 2021 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு7 சூன் 2023 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 223)19 சனவரி 2018 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப22 மார்ச் 2023 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்4
இ20ப அறிமுகம் (தொப்பி 89)3 பெப்ரவரி 2018 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப9 ஆகத்து 2021 எ. வங்காளதேசம்
இ20ப சட்டை எண்4
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13–இன்றுதெற்கு ஆத்திரேலியா
2016/17–இன்றுஅடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்
2019சசெக்சு
2020டெல்லி கேபிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே. ஒரு மு.த ப.அ
ஆட்டங்கள் 19 64 68 111
ஓட்டங்கள் 689 1,667 3,359 3292
மட்டையாட்ட சராசரி 31.31 35.46 33.59 36.17
100கள்/50கள் 1/3 1/7 6/18 3/19
அதியுயர் ஓட்டம் 111 106 143 128*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
60/2 73/8 241/6 121/11
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, 7 சூன் 2023

கேரி 2013 இல் உயர்-தர துடுப்பாட்டக்காரராக விளையாடினார், ஆனாலும் அதில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து, இலக்குக் காப்பாளராக விளையாடி வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. Sellar, Lachlan (11 September 2017). "The rise and rise of Alex Carey". South Australian Cricket Association. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  2. "Alex Tyson Carey". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சு_கேரி&oldid=3735334" இலிருந்து மீள்விக்கப்பட்டது