இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ


இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ (ESPNcricinfo) என்பது துடுப்பாட்டம் தொடர்பான வலைத்தளம் ஆகும். இதில் கட்டுரைகள், போட்டிகளின் நேரடி வர்ணனைகள் மற்றும் 18-ம் நூற்றாண்டு முதல் இன்றுவரையான போட்டிகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது.

இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ
ESPNcricinfo
ESPNCricinfo.png
வலைத்தள வகைவிளையாட்டு இணையதளம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்இஎஸ்பிஎன்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடு15 மார்ச்சு 1993 (1993-03-15)[1][2]
தற்போதைய நிலைசெயற்பாட்டு நிலையில்
உரலிஅதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறுதொகு

1993 மார்ச் 15 ஆம் நாள் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் சைமன் கிங் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் 2002-இல் விஸ்டன் குழுமம் இவ்வலைப்பக்கத்தை தனதாக்கிக் கொண்டது. கடைசியில் 2007-ஆம் ஆண்டு இஎஸ்பிஎன் நிறுவனம் இவ்வலைப்பக்கத்தை வாங்கியது. இவ்வலைப்பதிவை டாக்டர் சைமன் என்பவருடன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த பத்ரி சேசாத்ரி என்பவர் இணைந்து தொடங்கினார். இவர் இவ்வலைப்பக்கத்தின் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார். பின்னர் நியூ ஹரைசன் மீடியா என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் இவ்வலைப்பக்கம் உலகளாவிய பல்வேறு மாணவர்கள் உதவியுடன் நடைபெற்றது.

மேற்கோள்கள்தொகு

  1. Shetty, Rachna. "Timeline | Cricinfo at 20 years". ESPN cricinfo. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ESPNcricinfo at 20 years". ESPN Cricinfo. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு