பத்ரி சேசாத்ரி

பத்ரி சேசாத்ரி (பிறப்பு: ஜூன் 30, 1970) தமிழகப் பதிப்பாளரும், அரசியல் விமர்சகரும் ஆவார்.[1] இவர் இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ என்ற பிரபலமான விளையாட்டுத் தளத்தின் நிறுவனர்களுள் ஒருவராவார்.[2][3] இவர் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனரும், தொல்லியல் ஆர்வலரும், கணினித் தமிழ் முன்னோடியும் ஆவார்.

பத்ரி சேசாத்ரி
சனவரி 2011இல் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழாவில் நூல் வெளியீட்டின்போது
சனவரி 2011இல் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழாவில் நூல் வெளியீட்டின்போது
பிறப்புபத்ரி சேசாத்ரி
(1970-06-30)30 சூன் 1970
கும்பகோணம், தமிழ்நாடு
தொழில்எழுத்தாளர், வலைப்பதிவாளர், பதிப்பாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்ஐஐடி,சென்னை
கோர்னெல் பல்கலைக்கழகம்
கருப்பொருள்அரசியல், அறிவியல், மற்றும் பொருளியல்
இணையதளம்
பத்ரி சேஷாத்ரியின் வலைப்பதிவு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கும்பகோணத்தில் பிறந்த பத்ரி சேசாத்ரி நாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து 1991 இல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 இல் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கிரிக்கின்போ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவத்தின் கிரிக்கெட் விளையாட்டுக்கான இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ இணையத்தளத்தை ஆரம்பித்தார். அதன் நிறுவன இயக்குநராகச் சில காலம் இருந்துவந்தார்.[4]. 2004 ஆம் ஆண்டில் நியூ ஒரைசன் மீடியா[5] என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார். சின்புரோசாப்ட் என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் ஆர்கே என்ற பணியாளர் மேலாண் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[6][7] தனது பதிப்பகத்தின் சார்பாக என் எச் எம் ரைட்டர் மற்றும் எழுத்துரு மாற்றி போன்ற இலவச மென்பொருட்களினைத் தயாரித்து வெளியிட்டார்.[8] பபாசி எனப்படும் பதிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும், உத்தமம் என்ற தொழில்நுட்ப மன்றத்தின் பல்வேறு பொறுப்புகளிலும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[9][10] தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை என்ற தொல்லியல் அறக்கட்டளையின் மூலம் தொல்லியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.[11][12] கிழக்கு டுடே என்ற இணைய இதழினை நடத்திவருகிறார்.[13]

எழுத்தாளர்

தொகு

சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அம்ருதா பத்திரிகையில் தொடர்ந்து அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

தமிழ்ப் புத்தகங்கள்

தொகு
  • உலகம் எப்படி தோன்றியது?
  • உயிர்கள் எப்படி தோன்றின?
  • நான் எஞ்சினியர் ஆவேன்
  • கணித மேதை ராமானுஜன்
  • ஐன்ஸ்டைன்
  • 123: இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம்
  • ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
  • ஆர்யபடரின் கணிதம்

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

தொகு

ஆங்கிலப் புத்தகங்கள்

தொகு
  • The Universe
  • Life

அரசியல் விமர்சகர்

தொகு

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பான நண்பேன்டா என்ற வாராந்திர விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். பல்வேறு தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகராகக் கலந்துகொள்கிறார். சமூக வலைத்தளத்தில் அண்ணா பற்றிய கருத்திற்காக 2022 அக்டோபரில் த.இ.க. ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.[14] 2023 ஜூலை மாதத்தில் யூடியூப் ஊடகமொன்றில் மணிப்பூர் வன்முறைகள் குறித்த கருத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.[15][16]1 ஆகஸ்டு 2023 அன்று குன்னம் நீதிமன்றம் பத்ரி சேசாத்திரிக்கு பிணை வழங்கி விடுதலை செய்தது.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. "Badri Seshadri's Lessons From the Outsider". Archived from the original on 2011-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.
  2. "Badri Seshadri's Lessons From the Outsider". forbesindia. https://www.forbesindia.com/article/zen-garden/badri-seshadris-lessons-from-the-outsider/26022/1. பார்த்த நாள்: 30 July 2023. 
  3. "A bot called Cricinfo". espncricinfo. https://www.espncricinfo.com/story/badri-seshadri-looks-back-at-the-origins-and-evolution-of-cricinfo-part-one-674431. பார்த்த நாள்: 30 July 2023. 
  4. "CricInfo Co-founder Badri Seshadri explores 'new horizons'". Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.
  5. Education gateway to economic growth: Badri Seshadri, Co-founder, New Horizon Media
  6. "தன்விவரக் குறிப்பு". சின்புரோசாப்ட். பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  7. "தன்விவரக்குறிப்பு". ஆர்கே. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  8. "நியூ ஹொரைசன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரி". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  9. "அச்சுத்தொழிலுக்கு இளைஞர்கள் வரும் வகையில் திட்டங்கள் "பபாசி'யின் புதிய தலைவர் யோசனை". தினமலர். https://www.dinamalar.com/district_detail.asp?id=809755. பார்த்த நாள்: 30 July 2023. 
  10. "INFITT Executive Committee 2008 - 09". உத்தமம். பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  11. "Tamil Heritage Trust". Tamil Heritage Trust. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  12. "On the temple trail: Heritage lovers see architecture as art". dtnext. https://www.dtnext.in/city/2018/08/30/on-the-temple-trail-heritage-lovers-see-architecture-as-art. பார்த்த நாள்: 30 July 2023. 
  13. "எங்களைப் பற்றி". கிழக்கு டுடே. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  14. "அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட் - பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம் - என்ன நடந்தது?". பிபிசி. https://www.bbc.com/tamil/india-63326503. பார்த்த நாள்: 30 July 2023. 
  15. "Political commentator and publisher Badri Seshadri arrested for criticising CJI, Supreme Court over Manipur violence". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/political-commentator-and-publisher-badri-seshadri-arrested-for-critcising-cji-supreme-court-over-manipur-violence/article67134449.ece. பார்த்த நாள்: 30 July 2023. 
  16. "Publisher Badri Seshadri arrested on charges of promoting communal enmity after remarks on CJI". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jul/29/renowned-publisher-badri-seshadri-arrested-in-tamil-nadu-for-remarks-against-judiciary-2599855.html. பார்த்த நாள்: 30 July 2023. 
  17. Political commentator, publisher Badri Seshadri granted bail

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_சேசாத்ரி&oldid=3767029" இலிருந்து மீள்விக்கப்பட்டது