ஜெஃப்ரி ஆர்ச்சர்

ஜெஃப்ரி ஹோவார்ட் ஆர்ச்சர், வெஸ்டன் சூப்பர் மேர் பெருங்குடி மகனார் ஆர்ச்சர் , (1940வது வருடம் ஏப்ரல் மாதம் 15ம் நாள் பிறந்த), ஒரு ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி.

The Lord Archer of Weston-super-Mare
Lord Archer.jpg
Louth (Lincolnshire) தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
டிசம்பர் 8 1969 – அக்டோபர் 10 1974
முன்னவர் சிரில் ஒஸ்பெர்ன்
பின்வந்தவர் மைகேல் ப்ரோதெர்டன்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 ஏப்ரல் 1940 (1940-04-15) (அகவை 82)
லண்டன்
தேசியம் ஆங்கிலேயர்
அரசியல் கட்சி Conservative Party
வாழ்க்கை துணைவர்(கள்) மேரி ஆர்ச்சர்
பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஆர்ச்சர்
படித்த கல்வி நிறுவனங்கள் Brasenose College, Oxford
பணி அரசியல்வாதி, எழுத்தாளர்
இணையம் ஜெஃப்ரி ஆர்ச்சர்
ஜெஃப்ரி ஆர்ச்சர்
தொழில் novelist, short story writer, playwright
எழுதிய காலம் 1976–தற்போது
இலக்கிய வகை Thriller, drama
http://www.jeffreyarcher.co.uk/

அவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புக்களில் இருந்தவர்; மேலும் 1992வது வருடம் மேலவையின் வாழ்நாள் உறுப்பினர் ஆனார். ஒரு வழக்கில் நீதியைத் திசை திருப்ப முயன்றமைக்காக தண்டனையும் அதையடுத்து சிறையீடும் அளிக்கப்பட்ட பின்பு, பற்பல் சர்ச்சைகள் நிரம்பிய அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுந்தது. அவர் சூரிய ஒளிச் சக்தியில் விசேஷமாக ஆய்வு புரியும் விஞ்ஞானியான மேரி ஆர்ச்சர் என்பவரை மணந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்தொகு

ஜெஃப்ரி ஆர்ச்சர் லண்டன் மாநகர மகப்பேறு மருத்துவ மனையில் பிறந்தார். அவரது குடும்பம் கடற்கரையை ஒட்டியுள்ள சாமர்செட் என்னும் பகுதியின் வெஸ்டன்-சூப்பர்-மேர் என்னுமிடத்திற்குக் குடி சென்றபோது அவர் பிறந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தன. இந்த இடத்தில்தான் அவர் தனது ஆரம்ப கால வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார். ஆர்ச்சர் பிறக்கையில் அவரது தந்தையான வில்லியமின் வயது அறுபத்து நான்கு. ஆர்ச்சருக்கு பதினைந்து வயதாக இருக்கையில் அவரது தந்தை இறந்தார். 1951வது வருடம், சாமர் செட்டில் உள்ள வெலிங்டன் பள்ளியில் (பொதுப்பள்ளியான வெலிங்டன் கல்லூரியுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது; ஆர்ச்சரின் ஆரம்ப கால நூல்களின் வழியாக அவர் வாழ்க்கை வரலாறை அறிய முயன்றால் இது சாத்தியமே.) ஆர்ச்சர் கல்வி உதவி நிதி வென்றார். இந்தக் காலகட்டததில் அவரது அன்னை லோலா வெஸ்ட்-சூப்பர்-மேர் பகுதியின் உள்ளூர் பத்திரிகையில் "ஓவர் தி டீகப்ஸ்" என்னும் பத்தியில், அவரது மகன் செய்த சாகசங்களைப் பற்றி, 'டுப்பென்ஸ்' என்னும் ஒரு சிறு கட்டுரையை எழுதினார். இதன் விளைவாக, வெலிங்டன் பள்ளியில் ஆர்ச்சர் மிகுந்த கேலிக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளானார்.[1]

ஆங்கில இலக்கியம், கலை மற்றும் சரித்திரம் ஆகியவற்றில் ஓ-நிலைகள் என்னும் அளவில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஆர்ச்சர் பள்ளியிலிருந்து நீங்கி,ராணுவம் மற்றும் காவல் துறைகளில் பயிற்சி பெறுவதையும் உள்ளிட்டுப் பல விதமான தொழில்களில் ஈடுபடலானார்.

இது சில மாதங்களே நீடித்தது. ஆனால், ஒரு உடற்பயிற்சி ஆசிரியராக அவர் சிறந்து விளங்கினார். முதலில் ஹாம்ப்ஷையர் நகரின் விகார்'ஸ் ஹில் பள்ளியிலும், பின்னர் கெண்ட்டில் உள்ள மிகுந்த கௌரவத்துக்குரியதான டோவர் கல்லூரியிலும் அவர் இப்பணி புரிந்தார். ஒரு ஆசிரியராக, அவர் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்; மேலும் பிறரை ஊக்குவிக்கும் திறனை அவர் மிகுந்த அளவில் பெற்றிருந்ததாகவும் சிலரால் கூறப்பட்டது.

ஆக்ஸ்ஃபோர்ட்தொகு

ஆக்ஸ்ஃபோர்ட் பிரசெனோஸ் கல்லூரியில் ஒரு வருட காலத்திற்கான ஒரு சான்றிதழ் கல்வியைப் பெற அவருக்கு இடம் கிடைத்தது; ஆயினும், அவர் அங்கு மூன்று வருடங்கள் தங்கி ஆக்ஸ்ஃபோர்ட் கல்வித்துறையின் கற்பித்தல் பிரிவில் கல்வித் தகுதி பெற்றார். ஆர்ச்சர் தமது கல்வித் தகுதிகளைப் பற்றிப் பொய்யான ஆதாரங்களைக் கொடுத்ததாகக் கூறப்படுவதுண்டு; உதாரணமாக, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறுகையில் அவர் அமெரிக்க நிறுவனம் என்று குறிப்பிட்டது உண்மையில் ஒரு உடற்பயிற்சிக் கழகம்தான்.[1][2] அவர் தமது பட்டப்படிப்பை முழுமையாக முடித்தாரா என்னும் கேள்வியை (அவர் அவ்வாறு முடிக்கவில்லை) என்பதை அவரது வலைத்தளம் மிகக் கவனமாக விலக்கி விடுகிறது; அவர் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்னும் மாயையைத் தொடர அவ்வப்போது அவரது ஆக்ஸ்ஃபோர்ட் 'முதல்வர்' என்னும் ஒரு குறிப்பு மட்டும் அளிக்கப்படுகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் இருந்த கால கட்டத்தில் அவர் மின்னல் வேக ஓட்டம், தடை ஓட்டம் போன்ற திடல் தள விளையாட்டுக்களில் சிறந்து விளங்கினார். அவர் திடல் தள விளையாட்டுக்களில் மேல் நிலை அடைந்து ஒருமுறை இங்கிலாந்திற்காக ஒடும் வாய்ப்புப் பெற்றார்; மேலும் மற்றொரு முறை கிரேட் பிரிட்டனுக்காகவும் போட்டியிட்டார். தி பீட்டில்ஸ் ஆதரவுடன் அறக்கொடைக்கான நிதி திரட்டும் ஒரு சேவையில் ஈடுபட்டு, அப்போது அவ்வளவாக அறியப்படாமல் இருந்த ஆக்ஸ்ஃபாம் என்னும் அறக்கட்டளைக்காக நிதி திரட்டுவதில் அவர் பெயர் பெற்றார். பிராசனோஸ் கல்லூரியின் மூத்த மாணவர்களின் பொது அறைக்கு வருமாறு அவர் விடுத்த அழைப்பை அந்த இசைக்குழு ஏற்றுக் கொண்டது. அங்கே அவர்கள் இசை நிகழ்ச்சி ஏதும் அளிக்காவிடினும், ஆர்ச்சர் மற்றும் கல்லூரியின் பெரும்புள்ளிகளுடன் அவர்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மெர்ட்டன் மாணவராக இருந்த விமர்சகர் ஷெரிடன் மோர்லே அந்தச் சம்பவத்தை நினைவு கூர்கிறார்:

At the interval I went to the toilet, and there beside me was Ringo Starr. He asked if I knew this Jeffrey Archer bloke. I said everyone in Oxford was trying to work out who he was. Ringo said: 'He strikes me as a nice enough fella, but he's the kind of bloke who would bottle your piss and sell it.'[3]

இந்தக் கால கட்டத்தில்தான் அவர் தனது மனைவி மேரியைச் சந்தித்தார். அவர்கள் 1996வது வருடம் ஜூலை மாதம் மணம் புரிந்து கொண்டனர்.

துவக்க காலத் தொழில் வாழ்க்கைதொகு

ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து நீங்கியதற்குப் பிறகு அவர் தேசிய பிறந்த நாள் அறக்கட்டளை என்னும் ஒரு மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக, அறக்கட்டளைக்கு நிதி திரட்டுனராகப் பணியாற்றுவதைத் தொடரலானார். அவர் அரசியலிலும் ஈடுபடலானார். 1967-1970 வருடங்களில் அவர் கன்சர்வேடிவ் கட்சியின் கிரேட்டர் லண்டன் கௌன்சில் உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆர்ச்சர் பணியாற்றிய நிறுவனங்களில் ஒன்றான யுனைடட் கிங்டம் அசோசியேஷன், செலவீனங்கள் தொடர்பான அவரது நிதிக் கோரிக்கைகளில் முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இதன் விபரங்கள் அச்சு ஊடகத்தில் ஏறுமாறாக வெளியாயின. இந்தக் குற்றச் சாட்டுகளைப் பிறப்பித்தவர் என்று குற்றம சாட்டி, யுஎன்ஏவின் தலைவரான முன்னாள் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்ஃப்ரி பெர்க்லேவுக்கு எதிராக, ஆர்ச்சர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, நீதி மன்றத்திற்கு வெளியே இந்த வழக்கு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. ஆர்ச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல என்று கன்சர்வேடிவ் தலைமை அலுவலகத்திடம் பெர்க்லே வற்புறுத்தினார்; ஆயினும் லௌத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது, தேர்வுக் குழு அனைத்து ஐயங்களையும் புறந்தள்ளி விட்டது.[1]

1969வது வருடம், ஆரோ எண்டர்பிரைசஸ் என்னும் நிதி திரட்டும் நிறுவனம் ஒன்றை ஆர்ச்சர் சொந்தமாக நிறுவினார். அதே வருடம் அவர் மேஃபேர் என்னும் இடத்தில் தி ஆர்ச்சர் காலரி என்னும் ஒரு கலைக் கண்காட்சியையும் திறந்தார். இந்தக் கலைக் கண்காட்சி லியோன் அண்டர்வுட் என்னும் பெரும் புகழ் பெற்ற சிற்பி மற்றும் ஓவியரின் கலை வடிவங்கள் உள்ளிட்ட பல நவீன கலைப் படைப்புக்களைப் பிரத்தியேகமாகப் பெற்றிருந்தது. இந்தக் கண்காட்சி இறுதியில் நஷ்டத்தில் முடிந்தது; இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆர்ச்சர் அதை விற்று விட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்தொகு

ஆர்ச்சர் தமது இருபத்து ஒன்பதாவது வயதில், 1969வது வருடம் டிசம்பர் 4ம் தேதி லௌத்தில் உள்ள லிங்கன்ஷையர் தொகுதிக்காக நடந்த இடைத் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி) பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வுக் குழுவின் இளைய உறுப்பினர்களில் பெரும்பாலானோரைத் தன் வசமாக்கிக் கொண்ட ஆர்ச்சர் இதற்கான தேர்வில் இயான் கௌவை தோற்கடித்தார். பிரசாரத்திற்காக ஆர்ச்சர் கையாண்டது நீல நிற அம்புடன் ஒளி வீசும் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறங்களைக் கொண்டிருந்தது; கட்சியின் தேசிய அளவிலான நிறங்களிலிருந்து இவை மாறுபட்டிருப்பினும், லிங்கன்ஷையரின் அரசியல் கட்சிகள் பகுதி சார்ந்த நிறங்களைக் கை விடவில்லை.

லௌத் தொகுதியில் மூன்று முக்கியமான இடங்கள் இருந்தன: அவை, லௌத், க்ளீதோர்பெஸ் மற்றும் இம்மிங்ஹாம் என்பனவையாகும். ஆர்ச்சர், தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமது தொகுதியில் பெரும்பான்மையாக உழைக்கும் வர்க்கமே இருந்த இம்மிங்ஹாம் கன்சர்வேடிவ் சங்கத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் ஆர்ச்சர் தமது கட்சியின் கொள்கைகள் சிலவற்றிற்கு எதிராக கலகம் விளைவித்து இடது சாரிப் போக்கினைக் கைக்கொண்டிருந்தார். வயது முதிர்ந்தவர்களுக்கு இலவச தொலைக் காட்சி உரிமம் வழங்க வேண்டும் என்றும் அரும்பொருட் காட்சியகங்களில் கட்டணம் விதிக்கப்படக் கூடாதென்றும் அவர் வற்புறுத்தினார். மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித் தனமானது மற்றும் அருவருப்பானது என்றுரைத்த ஆர்ச்சர் அதனை மீண்டும் கொணர்வதற்கு எதிராக வாக்களித்தார்.

1971வது வருடம், தமது சட்டப்படிப்பு இறுதி நிலைக்காக பணத் தேவை கொண்டிருந்த டேவிட் மெல்லோர் என்பவரை தமது கடிதப் போக்குவரத்தைக் கவனித்துக் கொள்வதற்காக ஆர்ச்சர் நியமித்தார். மெல்லோர் அமைச்சகத்தை அடைவதற்கு அவர் உதவி செய்தார். ஒரு பேட்டியில் ஆர்ச்சர் இவ்வாறு கூறினார்: "நாம் மிகக் கடுமையான உச்ச நிலைகளுக்குத் திரும்பி விட மாட்டோம் என்று நான் நம்புகிறேன்." நீங்கள் மத்திய-வலதுசாரி என்று சொல்லக் கூடிய ஒரு பிரிவில் நான் இருக்கிறேன்; ஆனால் இடது சாரியை எந்த அளவு வெறுத்துள்ளேனோ அதே அளவு வலது சாரியையும் வெறுத்தே வந்துள்ளேன்."[4]

1974வது வருடம், அக்வாபிளாஸ்ட் என்னும் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றின் மோசடி முதலீட்டுத் திட்டதிற்கு அவர் பலியானார். ஆர்ச்சர் தமது முதற் பெரும் செல்வத்தை இழக்க நேரிட்ட ஒரு கடும் வீழ்ச்சியாக இது அமைந்தது.[1] உடனடியான ஒரு திவாலா நிலைமையை எதிர் நோக்கி அஞ்சிய அவர் பாராளுமனற உறுப்பினராகாது, 1974 அக்டோபர் பொதுத் தேர்தல்களிலிருந்து விலகினார். இந்தக் கால கட்டத்தில் ஆர்ச்சர் குடும்பத்தினர் தென் கென்சிங்டன் பகுதியின் பிரத்யேகமான ஒரு வீதியிலிருந்த ஐந்து படுக்கையறைகளைக் கொண்ட ஒரு பெரும் இல்லத்தில் வசித்து வந்தனர். அக்வாபிளாஸ்ட் விவகாரத்தால் அந்த வீட்டை விற்று விட்டு, அதை விட எளிமையான வீடு ஒன்றிற்கு அவர்கள் செல்ல நேர்ந்தது.

1999வது வருடம் லண்டன் மேயர் தேர்தலில் இருந்து தாம் விலகிக் கொள்ளும் வரையில் இம்மிங்ஹாம் பகுதியின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக ஆர்ச்சர் தொடர்ந்து வந்தார். இம்மிங்ஹாம் பகுதி மக்கள் ஆர்ச்சரை அப்பகுதி சார்ந்த ஒரு பிரபலமாகக் கருதுகின்றனர். (இப்பகுதியில் ஆர்ச்சருக்கு குடும்பமோ அல்லது வியாபாரத் தொடர்புகளோ இல்லாதிருந்தபோதும்), அவர் முதன் முறையாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனபோது, இவர்களே அவரைச் சூழ்ந்திருந்தனர் எப்போதாவது அரிதாக அவர் வட லிங்கன்ஷையர் செல்லும்போது அது மிகுந்த அளவில் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

அரசியலும் எழுத்தும்தொகு

நாட் எ பென்னி மோர், நாட் எ பென்னி லெஸ் என்ற அவருடைய முதல் புத்தகம் இலக்கிய முகவர் டெபோரா ஓவன் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் யூஎஸ்சில் பிரசுரமானது; பிறகு, நாளடைவில் 1976வது வருடத்தின் இலையுதிர் காலத்தில் பிரிட்டனிலும் இது பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் உடனடி வெற்றி அடைந்தது; இதன் காரணமாக, அவர் சட்டபூர்வமாக திவாலா என்று அறிவிக்கப்படவே இல்லை என்பதால், ஆர்ச்சரால் தாம் திவாலா ஆகுவதைத் தவிர்க்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் ஒரு தொலைக்காட்சித் தழுவல் 1990வது வருடம் பிபிசியில் ஒளிபரப்பானது; மற்றும், இதன் வானொலி வடிவம் பிபிசி வானொலி 4 என்பதில் 1980களின் துவக்கத்தில் ஒலிபரப்பானது. 1977வது வருடம் அக்வாபிளாஸ்ட் வழக்கில் ஒரு சாட்சியாகத் தாம் இருந்தபோது, ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து மூன்று சூட் ஆடைகளை எடுத்துச் சென்று விட்டதாக ஆர்ச்சர் குற்றம் சாட்டப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டை அவர் பல வருடங்களுக்குத் தொடர்ந்து மறுத்து வந்தார். இருப்பினும் 1990களின் இறுதியில், தாம் அவற்றை எடுத்தது உண்மைதான் என்று ஆர்ச்சர் இறுதியாக ஒப்புக் கொண்டார்; ஆனாலும், கடையை விட்டு வெளிவருகையில் அதைத் தாம் உணரவில்லை என்றும் அவர் கோரினார்.[1] அவருக்கு எதிராக வழக்கு ஒன்றும் தொடரப்படவில்லை.

கேன் அன்ட் ஏபல் அவருடைய மிகச் சிறந்த அளவில் விற்பனையாகும் புத்தகமாக நிரூபணம் ஆனது. இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மிகவும் அதிக அளவில் விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் முதல் இடம் பெற்றது.

1985வது ஆண்டு, இதை தொலைக்காட்சிக்கான ஒரு சிறு தொடர் வடிவத்தில், பீட்டர் ஸ்டாரஸ் மற்றும் சாம் நெயில் ஆகியோரின் நடிப்பில் சிபிஎஸ் உருவாக்கியது. இதைத் தொடர்ந்து 1986வது ஆண்டு, ஃபர்ஸ்ட் அமங் ஈக்வல்ஸ் என்னும் ஆர்ச்சரின் மற்றொரு அதிக விற்பனையாகும் புத்தகத்தின் பத்து-அங்கத் தழுவல் ஒன்றை கிராண்டா டிவி திரையிட்டது; இதில், பிரதமர் ஆகும் ஆவல் கொண்ட மூன்று ஆண்களின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருந்தது. தமது புத்தகங்களை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவதில் கணிசமான காலம் செலவிடுவதாக ஆர்ச்சர் கோருகிறார். அவற்றின் முதற் படிவத்தை எழுதுவதற்காக அவர் வெளி நாட்டுக்குப் போய்விடுகிறார்; ஒரு நேரத்திற்கு இரண்டு மணித்துளி என்னும் அளவில் பிறகு பதினேழு முறைகள் வரையில் அவர் அவற்றைத் திரும்பத் திரும்பத் திருத்தி எழுதிப் படிவம் எடுக்கிறார். அவரது புத்தகங்களைப் படிப்பதற்கு தகுதி கொண்டவையாகச் செய்வதற்கு பிறர் அதனைப் பல முறை தொகுக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்படுவதுண்டு.[5][6]

1979வது ஆண்டு,கிராண்ட்செஸ்டர் ஓல்ட் விகாரேஜ் என்னும் இடத்தில், ரூபர்ட் ப்ரூக் என்னும் கவிஞருடன் தொடர்புடையதாக இருந்த வீடு ஒன்றை ஆர்ச்சர் வாங்கினார். பாராளுமன்ற சபைகளைப் பார்த்தாற்போல அமைந்திருக்கும் தனது லண்டன் நகர் வீட்டில் அவர் ஷெஃபர்ட்'ஸ் பை மற்றும் கிரக் விருந்துகளை பெரும் புள்ளிகளுக்காக ஏற்பாடு செய்து நடத்தலானார்.[1]

ஆர்ச்சரின் தமது புதினங்களின் வாயிலாகப் புகழ் அடைந்ததும், அவரது அரசியல் வாழ்க்கையும் புத்துயிர் பெறலானது; கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை அங்கத்தினர்களிடையே பிரபலமான பேச்சாளராக அவர் அறியப்படலானார். 1985வது ஆண்டு செப்டம்பரில் மார்கரெட் தாட்சர் அவரை கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராக்கினார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவரான நார்மன் டெப்பிட் அவ்வளவாக ரசிக்கவில்லை; வில்லியம் ஒயிட்லா மற்றும் டெட் ஹீத் உள்ளிட்ட மற்ற முக்கிய உறுப்பினர்களுக்கும் இது பிடித்திருக்கவில்லை. ஆர்ச்சர், துணைத் தலைவராகத் தாம் இருந்த காலத்தில் பல முறை ஆராயாது பேசிய பேச்சுக்களினால் தர்மசங்கடம் உருவாகக் காரணமானார். எடுத்துக்காட்டாக, வானொலியில் ஒரு நேரடி பேட்டியின்போது, வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர் உண்மையில் வேலை தேட விருப்பமற்றவர்களே என்று அவர் கூறியதைக் குறிப்பிடலாம்.

இந்தக் கூற்றை ஆர்ச்சர் விடுத்த கால கட்டத்தில் யூகேயில் வேலை இல்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவில் 3.4 மில்லியனாக இருந்தது. பின்னர், தமது வார்த்தைகள் "அவற்றின் சூழலுக்கு வெளியே எடுக்கப்பட்டு விட்டன" என்று கூறி, இந்தக் கூற்றிற்காக மன்னிப்பு வேண்டுமாறு ஆர்ச்சர் வலியுறுத்தப்பட்டார்.

தி நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் செய்தித்தாள், "டோரித் தலைவர் ஆர்ச்சர் விலைமாது ஒருத்திக்குப் பணம் அளிக்கிறார்" என்னும் செய்தி ஒன்றை வெளியிட்டதன் விளைவான மற்றொரு அவதூறின் காரணமாக, 1986வது வருடம் அக்டோபரில் அவர் தமது பதவியைத் துறக்க நேர்ந்தது. மோனிகா கோக்லன் என்னும் விலை மாது வெளி நாடு செல்வதற்காக, விக்டோரியா நிலையத்தில் ஒரு இடைத் தரகரின் மூலமாக ஆர்ச்சர் அவளுக்கு £2000 அளித்தார் என்று இந்தக் கட்டுரை கோரியது.

ஆனால் டெய்லி ஸ்டார் சொன்னதைப் போல, ஆர்ச்சர் கோக்லனுடன் படுத்துறங்கினார் என்று இந்தச் செய்தித் தாள் கூறவில்லை.[1] டெய்லி ஸ்டார் மீது ஆர்ச்சர் வழக்குத் தொடுத்தார்.

மேலவை உறுப்பினர் பதவிதொகு

முன்னதாக நிகழ்ந்த ஒரு நிராகரிப்பிற்குப் பிறகு[7], 1992வது வருடம், சாமர்செட் மாவட்ட வெஸ்டன்-சூப்பர்-மேரின் பெருங்குடி மகனார் ஆர்ச்சர் என்ற முறையில், மேலவையின் வாழ்நாள் உறுப்பினர் என்னும் கௌரவத்தை, பிரதமர் ஜான் மேஜர் அளித்த பரிந்துரைப்பின் பேரில், அரசி அவருக்கு வழங்கினார்.

1993வது வருடத்தில் நிகழ்ந்த கன்சர்வேடிவ் மாநாட்டின்போது, உள்செயலாளர் மைக்கேல் ஹோவார்ட் "வீறு கொண்டெழுந்து செயலாற்ற வேண்டும்" என்று ஆர்ச்சர் தமது உரையில் வலியுறுத்தினார்: "மைக்கேல், மக்கள் கதவைத் திறக்கவே அஞ்சுவதாக கூறுவதைக் கேட்டுக் கேட்டு எனக்கு களைப்பும், அலுப்பும் ஏற்படுகின்றன; அவர்கள் இரவில் வெளியே செல்ல அஞ்சுகிறார்கள்; அவர்களது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் சுதந்திரமாக உலா வந்த பூங்காக்களையும், இணை வீதிகளையும் பயன்படுத்த அவர்கள் இன்று அஞ்சுகிறார்கள்... நாங்கள் உங்களிடம் இதைத்தான் கூறுகிறோம்: வீறு கொண்டெழுந்து செயலாற்றுங்கள்!" இதன் பிறகு அவர் வன்முறை கொண்ட திரைப்படங்களைச் சாடினார்; மேலும், குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை இழைப்பதைத் தடுக்க சிறை விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். "நல்லவராகச் செயல்படுவோர்" எனப்படுபவர்களின் பங்கை விமர்சித்த அவர், எதிர்க்கட்சியின் சட்டம் ஒழுங்கு கோட்பாடுகளை விமர்சித்ததுடன் தனது உரையை முடித்துக் கொண்டார்.[8]. 1994வது வருடம், கேள்வி நேர த்தின்போது, ஒரினச் சேர்க்கைக்கு சம்மதிக்கத் தகுதியான வயதாக, அந்தச் சமயத்தில் 21 வயது என்று இருந்ததற்கு மாறாக, 18 என்றே இருத்தல் வேண்டும் என்று அவர் உரைத்தார். மேலும், மரண தண்டனை அளிப்பதை மீண்டும் தொடங்குவதற்கு ஆர்ச்சர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தும் வந்துள்ளார்.

சர்ச்சைகள்தொகு

டெய்லி ஸ்டார் அவதூறு வழக்குதொகு

1987வது வருடம் ஜூலை மாதம், மோனிகா கோக்லன் என்னும் விலைமாதுடன் ஆர்ச்சர் பாலுறவு கொண்டிருந்தார் என்னும் குற்றச்சாட்டின் மீதான வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. கோக்லனுக்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு குற்றமிழைத்த மனிதரால் கொடுக்கப்பட்டது அல்லவென்றும், மாறாக, மனித நேயத்தின்பாற்பட்ட ஒரு செயல் என்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு £500,000 நஷ்ட ஈடு அளிக்குமாறு தீர்ப்பானது. இந்தப் பணத்தைத் தாம் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளிப்பதாக ஆர்ச்சர் கூறினார். ஆயினும், இந்த வழக்கே, சில வருடங்கள் கழித்து முன்னணி அரசியலில் இருந்து ஆர்ச்சர் விலகுவதில் விளைந்தது.

நீதிபதி (திரு ஜஸ்டிஸ் கால்ஃபீல்ட்), தமது அறங்கூறாய அறிவுறுத்தல்களில் திருமதி ஆர்ச்சர்[9] பற்றிக் கூறியவை மிகுந்த அளவில் பிரமிப்பை உண்டாக்கின: "சாட்சிக் கூண்டில் மேரி ஆர்ச்சர் இருந்தது நினைவில் இருக்கட்டும். அவரை அங்கே கண்ட காட்சியை உங்களால் மறக்கவே முடியாமல் போகலாம். அவரிடம் நளினம் இருக்கிறதா? வாசம் இருக்கிறதா? இந்த வழக்கின் அழுத்தம் இன்றி அவருக்குப் பிரகாசம் இருந்திருக்குமா? அவர் எவ்வாறு மேல் மனு அளிப்பார்? அவருக்கு மகிழ்ச்சியான மணவாழ்வு இருந்திருக்கிறதா? அவரால் அவரது கணவர் ஜெஃப்ரியை சகித்துக் கொள்வது அன்றி, சந்தோஷிக்க இயன்றிருக்கிறதா?" ஜெஃப்ரி ஆர்ச்சரை பற்றி நீதிபதி மேலும் கூறலானார்: "புயலடிப்பதைப் போன்ற ஒரு மாலைப் பொழுதிற்குப் பிறகு, ஒரு செவ்வாய்க் கிழமை காலை ஒரு மணிக்குப் பதினைந்து நிமிட அளவில், ஒரு மட்டமான விடுதியில், ஒரு அன்பில்லாத, உணர்ச்சியற்ற, ரப்பரோடு உடலுறவு கொண்வதைப் போன்ற ஒரு பாலுறவு அவருக்குத் தேவைப்படுகிறதா?"

பத்திரிகையாளர் ஆடம் ராஃபேல் கருத்துப்படி, இந்தக் கால கட்டத்தில் ஜெஃப்ரியும் மேரி ஆர்ச்சரும் உண்மையில் பெரும்பாலும் தனித்தனியாகவே வாழ்ந்து வந்தனர்.

இந்த வழக்கு நிகழ்ந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு டெய்லி ஸ்டார் ஆசிரியரான லாய்ட் டர்னர் அந்தப் பத்திரிகை உரிமையாளர் லார்ட் ஸ்டீவன்ஸ் ஆஃப் ல்ட்கேட்டால் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.[10]

பங்கு வணிகச் செயற்பாடுகள்தொகு

1994வது வருடம் ஜனவரி மாதம், அந்தச் சமயத்தில் ஆங்கிலியா டெலிவிஷன் நிறுவனத்தில் ஒரு இயக்குனராக இருந்த மேரி ஆர்ச்சர், அதன் இயக்குனர் குழுவின் ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அந்தக் கால கட்டத்தில் ஏறத்தாழ நிச்சயமாகி விட்டிருந்த நிகழ்வாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த, மெரிடியன் பிராட்காஸ்டிங்கின் உரிமை பெற்றிருந்த எம்ஏஐ நிறுவனம், ஆங்கிலியா டெலிவிஷனை விலைக்கு வாங்கி எடுத்தாள்வதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.[11] இதற்கு மறுநாள், ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது நண்பர் ப்ரூஸ்க் சைப் என்பவரின் சார்பாக ஆங்கிலியா டெலிவிஷன் நிறுவனத்தின் 50,000 பங்குகளை வாங்கினார்.[10] இதை அடுத்து வெகு விரைவிலேயே, ஆங்கிலியா டெலிவிஷன் உரிமம் எம்ஏஐ நிறுவனத்தால் எடுத்தாளப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, அதன் பங்குகளின் மதிப்பானது பன்மடங்கு உயரவும், தமது நண்பரின் சார்பாக ஆர்ச்சர் அவற்றை £77,219 லாபத்திற்கு விற்றார்.[11] இதற்காக அவர் பங்குத் தரகர்களுடன் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின்படி அவர் அந்தப் பங்குகளை வாங்கும்போது அதற்காகப் பணம் செலுத்தத் தேவையாக இருக்கவில்லை.[10]

இது குறித்துப் பங்குச் சந்தை நிறுவனம், இதில் உள் நபர் வர்த்தகம் இருக்கக் கூடிய சாத்தியம் குறித்த ஒரு விசாரணையைத் தொடங்கியது. மைக்கேல் ஹெசெல்டைன் தலைமையிலான வர்த்தகம் மற்றும் தொழில் துறைப் பிரிவு ஆர்ச்சரின் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என்று அறிவித்தது.[11] இந்தக் குற்றச் சாட்டிலிருந்து தாம் "விடுவிக்கப்பட்டதாக" பின்னர் ஆர்ச்சர் கோரினார். ஆனால் டிடீஐ விசாரணையானது, வழக்குத் தொடரப்பட தேவையான அளவு ஆதாரம் இல்லை என்று மட்டுமே அறிவித்திருந்தது.

காணாமல் போன குர்டிஷ் நிதியுதவிதொகு

2001வது வருடம் ஜூலை மாதம் ஸ்காட்லாண்ட் யார்ட், ஆர்ச்சர் நடத்தி வந்த நிதி திரட்டும் இயக்கமான சிம்பிள் ட்ரூத் என்பதிலிருந்து பல மில்லியன் பவுண்டுகள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் துவங்கியது. அவர் இந்த அறக்கட்டளையை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிறுவியிருந்தார். இதற்காக, ப்ரூஸ்க் சைப் மற்றும் நதிம் ஜாவி என்னும் இரண்டு குர்டிஷ் உதவியாளர்களை அவர் நியமித்திருந்தார்; இவர்களுக்கு அவர் "லெமன் குர்ட் மற்றும் பீன் குர்ட்" என்று செல்லப் பெயரிட்டிருந்தார்.[7]

1991வது ஆண்டு மே மாதம் இராக்கின் குர்டுகளுக்கான உதவிக்காக ஆர்ச்சர் ஒரு அறக்கட்டளை பாப் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரோட் ஸீவர்ட், பால் சைமன், ஸ்டிங் மற்றும் குளோரியா எஸ்டெஃபான் போன்ற பலரும் பங்கேற்று இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்தனர். 1991வது ஆண்டு ஜூன் 19 அன்று £57,042,000 மதிப்பில் ஒரு காசோலையை வைத்திருந்தார். இதில், சிம்பிள் ட்ரூத் இசை நிகழ்ச்சியிலிருந்து சுமார் £3 மில்லியனும், யூகே அரசிடமிருந்து £10 மில்லியனும், மீதம் £43 மில்லியன் வெளிநாட்டு அரசுதவி திட்டப்பணிகளில் இருந்தும் பெறப்பட்டிருந்தன; இசை நிகழ்ச்சிக்கு முன்னர் இதில் பெருவாரியான நிதி பிணை வைக்கப்பட்டு இருந்தது. இந்தப் இயக்கப் பணி ஜான் மேஜர் ஆர்ச்சரை மேலவை உறுப்பினர் நிலைக்குப் பரிந்துரைப்பதில் விளைந்தது.[7]

1992வது வருடம், ஆர்ச்சருக்கு குர்டிஷ் பேரிடர் நிதி இவ்வாறு புகார் ஒன்றை வரைந்தது: "மேற்கத்திய நாடுகளில் குர்டிஷ் அகதிகளின் பெயரால் திரட்டப்பட்ட ஏராளமான நிதியில் சிறிதளவைக் கூட அவர்கள் காணவேயில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்வது தேவை." இராக்கில் இருக்கும் குர்டிஷ் குழுக்கள் £250,000க்கு சற்று அதிகமான அளவில் மட்டுமே நிதியுதவி பெற்றதாகக் கோரின. ஆர்ச்சர் திரட்டியிருந்த £57 மில்லியனில் குர்டிஷ் மக்களுக்கு "உண்மையில் ஒன்றுமே போய்ச் சேரவில்லை" என்று கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் லேடி நிக்கோல்சன் கூறினார்.[12] இதன் பிறகு, ஆர்ச்சர் உண்மை அறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஈராக் சென்றார்; அங்கு அவர் எழுப்பிய "குர்திஸ்தான் வாழ்க" என்னும் கோஷமானது, துரதிர்ஷ்டவசமாக "வேசிமகன், சைத்தான் குர்திஸ்தான்" என்று தவறாக மொழி பெயர்க்கப்பட்டது.[7]

பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம் நியமித்த கேபிஎம்ஜியின் நிதி சார்ந்த ஒரு தணிக்கை, ஆர்ச்சர் நன்கொடைகள் எதையும் கையாளவில்லை என்றும், அவர் கையாடல் செய்திருக்கக்கூடும் என்பது "நிகழ் சாத்தியக் கூறு அற்றது" என்றும் வெளிக் காட்டியது. ஆனால், வெளி நாட்டு அரசுகளிடமிருந்து £31.5 மில்லியன் திரட்டியதாக ஆர்ச்சர் கோரியதற்கான ஆதாரங்களை கேபிஎம்ஜியால் கண்டறிய இயலவில்லை. இந்தத் தணிக்கையிலிருந்து ஒரு "உண்மையறியும் முதல் நிலை மதிப்பீடு" துவக்குவதாகவும் ஆனால் சிம்பிள் ட்ரூத் நிதி[13] பற்றி தாங்கள் விசாரணை நடத்தவில்லை என்றும் காவல்துறை அறிவித்தது.

பொய் வாக்கு மூலம் மற்றும் வீழ்ச்சிதொகு

2000வது ஆண்டு லண்டன் மேயர் தேர்தல் வேட்பாளராக கன்சர்வேடிவ் கட்சியால் ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் பொய்யான வாக்குமூலம் அளித்த ஒரு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து இதிலிருந்து விலகுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.[14]

1999வது வருடம் நவம்பர் மாதம், டெட் ஃபிரான்ஸ் என்னும் ஒரு நண்பரும் (இவர் ஆர்ச்சர் தனக்குப் பணம் தர வேண்டியுள்ளது என்று கோரினார்) மற்றும் ஆர்ச்சரின் முன்னாள் உதவியாளர் ஆங்கெலா பெப்பியாட்டும் 1987வது ஆண்டின் வழக்கு விசாரணையில் ஆர்ச்சர் பொய்யான ஒரு அலிபியைப் புனைந்ததாகக் கோரினர். இதன் காரணமாக, லண்டன் மேயர் தேர்தலில் ஆர்ச்சர் நிற்பது குறித்துக் கவலை தெரிவித்து, அதற்கு அவர் தகுந்தவரா என்னும் ஐயப்பாட்டினை அவர்கள் வெளியிட்டனர்.

ஆர்ச்சரின் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு குறிப்பேட்டை பெப்பியாட் வைத்திருந்தார்; இது 1987வது வருடத்திய விசாரணையில் ஆர்ச்சர் கொடுத்த ஆதாரத்திற்கு முரணாக இருந்தது. இதுவே ஆர்ச்சருக்கு எதிராக வழக்கு உருவாவதற்கு அடிப்படையானது.[15]

1999வது வருடம் நவம்பர் 21 அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் இந்தக் குற்றச் சாட்டுகளைப் பிரசுரித்தது; இதற்கு மறு நாள் ஆர்ச்சர் தமது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார். கன்சர்வேடிவ் தலைவர் வில்லியம் ஹேக் கூறினார்: "ஜெஃப்ரி ஆர்ச்சரின் அரசியல் வாழ்கைக்கு இதுவே அஸ்தமனம். என் கட்சியில் இது போன்ற நடத்தையை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்."[16] அக்டோபர் எட்டாம் தேதிதான், ஆர்ச்சரை அவர் "நேர்மை மற்றும் நாணயம்" கொண்ட ஒரு வேட்பாளர் என்று வர்ணித்திருந்தார். "அவரை நான் முழுமையாக ஆதரிக்கப் போகிறேன்" என்று கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கூறியிருந்தார்.

2000வது வருடம் ஃபிப்ரவரி 4 அன்று, ஆர்ச்சர் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு வெளியேற்றப்பட்டார். 2000வது வருடம் செப்டம்பர் 26 அன்று, 1987 அவதூறு வழக்கில் பொய்யான வாக்கு மூலம் அளித்து நீதியின் பாதையை திசை மாற்றியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.[14]

பொய் வாக்கு மூலத்தின் பேரிலான இந்த விசாரணைக்கு சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் ஆர்ச்சர் தி அக்யூஸ்ட் என்னும் நீதிமன்றப் பின்னணி கொண்ட ஒரு நாடகத்தில் (இதை அவரே எழுதியுமிருந்தார்) நட்சத்திரப் பங்கு கொள்ளத் துவங்கியிருந்தார். இந்த நாடகம் லண்டனில் தியேட்டர் ராயல் ஹேமார்க்கெட்டில் மேடையேற்றபப்ட்டது; இந்த நாடகம், துவக்கம் முதல் இறுதி வரை ஒரு கொலைக்குற்றம் பற்றிய நீதி மன்ற விசாரணையை சித்தரிப்பதாக அமைந்திருந்தது. இதில், நீதி வழங்கும் பொறுப்பை பார்வையாளரிடம் விட்டு விடும் உத்தியை இந்த நாடகம் மேற்கொண்டிருந்தது; ஒவ்வொரு நாடக நிகழ்வின் இறுதியிலும் ஆர்ச்சரின் கதாபாத்திரம் குற்றவாளியா அல்லவா என்று நாடகப் பார்வையாளர்கள் வாக்களித்து வந்தனர். பகல் வேளையில் உண்மையான வழக்கு விசாரணையில் பங்கு பெற்று வந்த ஆர்ச்சர், மாலை வேளைகளில் இந்தப் புனைவு விசாரணையில் நீதியளிக்கப்பட்டு வந்தார்.[17]

உண்மையான விசாரணை 2001வது வருடம் மே 30 அன்று, மோனிகா கோக்லன் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, துவங்கியது. 2001வது வருடம் ஜூலை 19 அன்று, 1987 அவதூறு வழக்கில் பொய்யான வாக்கு மூலம் அளித்து நீதியின் பாதையை திசை மாற்றிய குற்றத்தை இழைத்ததாக ஆர்ச்சர் அறிவிக்கப்பட்டார். திரு ஜஸ்டிஸ் போட்ஸ் அவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்தார். அவரது மனைவி, தாம் 1987 விசாரணையின்போது செய்ததைப் போல இந்த விசாரணையிலும் சாட்சி அளித்த போதும், இந்த வழக்கு விசாரணை முழுவதிலும் ஆர்ச்சர் மௌனமாகவே இருந்தார். நீதியின் பாதையை மாற்றிய குற்றத்தைச் செய்ததாக டெட் ஃபிரான்ஸ் அறியப்படவில்லை. 87 வயதாகியிருந்த ஆர்ச்சரின் தாய், 2001வது வருடம் ஜூலை 11 அன்று மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 21 ஜூலை அன்று ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார்.[18]

ஆர்ச்சர் பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்; ஆயினும், 2001வது வருடம் ஆகஸ்ட் 9 அன்று நார்ஃபோக்கில் உள்ள வேலாண்ட் சிறைச்சாலையின் "சி" பிரிவில் மாற்றப்பட்டார். அவர் "டி" பிரிவு கைதியாவதற்கே தகுதி பெற்றிருப்பினும், இது அவர் பேரிலான முதற் குற்றத் தீர்ப்பு என்பதனாலும், சிம்பிள் ட்ரூத் இயக்கப் பணத்தை அவர் கையாடல் செய்து விட்டதாக பரோனெஸ் எம்மா நிகோல்சன் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பான காவல் துறையின் புலனாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பொது மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாக அறியப்படாததாகவே அவரது நிலை இருந்தது. இறுதியில், 2001வது வருடம் அக்டோபர் மாதம் ஹெச்எம்பி நார்த் சீ காம்ப் என்னும் இடத்தில் அமைந்த ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் இங்கிலாந்தின் லிங்கன் நகரில் உள்ள தியேட்டர் ராயலில் பணியாற்ற அனுப்பப்பட்டு, அவ்வப்போது தமது இல்லத்திற்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டார். அவர், முன்னாள் கல்வித்துறைச் செயலாளர் கில்லியன் ஷெஃபர்ட் என்பவரையும் உள்ளிட்ட, தன் நண்பர்களுடன் விருந்துண்டு இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஊடகங்கள் கோரின; 2002வது வருடம் செப்டம்பர் மாதம் அவர் லிங்கன் சிறைச்சாலைக்கு ஒரு மாத காலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிறையில் இருக்கும்போது, அவர் மூன்று பாகங்கள் கொண்ட, எ ப்ரிஸன் டயரி என்னும் நினைவுக் குறிப்பு வரலாற்றை எழுதினார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில், நடிகர் டொனால்ட் சிங்க்டென்[19] மற்றும் நடிப்புத் திறனாளர் பேரி ஹம்ப்ஷையர் உள்ளிட்ட மிகப் பெரும் புள்ளிகள் பலரும் அவரைச் சந்தித்தனர்.[20][21]

2002வது வருடம் அக்டோபரில், 1987வது வருடம் தாம் பெற்றிருந்த தொகையான £500,000த்துடன் வழக்குச் செலவு மற்றும் வட்டியாக £1.3 மில்லியனைச் சேர்த்து, டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு ஆர்ச்சர் திரும்பச் செலுத்தினார்.[22] அந்த மாதமே அவர் மேரிலெபோன் கிரிக்கெட் சங்கத்திலிருந்து ஏழு வருடங்களுக்கு அவர் விலக்கி வைக்கப்பட்டார்.[23]

2003வது வருடம் ஜூலை 21 அன்று அவர் தமது தண்டனைக் காலத்தில் பாதிப் பகுதியைக் கழித்த பிறகு, சஃபோக்,ஹெச்எம்பி பேவிலிருந்து உரிமத்துடன் விடுவிக்கப்பட்டார்.[24]

ஆர்ச்சரின் நண்பர்களில் பெரும்பாலானோர் அவருக்கு விசுவாசமாகவே இருந்தனர். 2004வது வருடம் அக்டோபர் 7 அன்று, செயிண்ட் மார்ட்டின்-இன்-தி-ஃபீல்ட்ஸ் நாரிஸ் மெக்ரிட்டர் நினைவு அஞ்சலியில் அவரும் லேடி ஆர்ச்சரும் விருந்தினராக வந்திருந்தனர். இதில் கன்சர்வேடிவ் மண்டே கிளப்பின் முன்னாள் தலைவரான கிரெகோரி லாடர் ஃப்ராஸ்ட் மற்றும் லேடி தாட்சர் ஆகியோருக்கு முன்பாக அதே பலகையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். லேடி தாட்சர் லேடி ஆர்ச்சரை ஆரத் தழுவிக் கொண்டார்.

2006வது வருடம் ஃபிப்ரவரி 26 அன்று, ஆன்ட்ரூ மார் அளித்த சண்டே ஏஎம் நிகழ்ச்சியில், முன்னணி அரசியலுக்கு மீண்டும் வருவதில் தமக்கு விருப்பமேதும் இல்லை என்று ஆர்ச்சர் தெரிவித்தார்; அதற்கு மாறாகத் தமது எழுத்துப் பணியையே தாம் தொடரப் போவதாகவும் அவர் அறிவித்தார்.[25] எம்மானுவேல் கல்லூரி அரசியல் சங்கம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிருஸ்துவின் அரசியல் சங்கம் ஆகியவற்றில் பேசும்போதும் அவர் இதை உறுதி செய்தார்.

ஈக்வடோரியல் கினியாவில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிதொகு

2004வது வருடம் ஈகவடோரியல் கினியா அரசு அதற்கெதிராக நிகழ்த்தப்பட்டுத் தோல்வியுற்ற 2004வது ஆண்டு அரசு கவிழ்ப்பு முயற்சிக்கான நிதியுதவி செய்தவர்களில் ஆர்ச்சரும் ஒருவர் என்று குற்றம் சாட்டி, அதற்கான ஆதாரங்களாக வங்கி விபரங்கள் மற்றும் தொலைபேசிப் பதிவுகளைக் காட்டியது.[26]

புனைகதைகளில் ஆர்ச்சர்தொகு

ஜெஃப்ரி ஆர்ச்சர்:உண்மை (2002)[27] என்னும் பிபிசி நாடகம் ஒன்றில், ஆர்ச்சர் ஒரு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட உளவாளி, பிரிட்டன் மற்றும் மனித இனத்தைக் காக்க வந்தவர் மற்றும் "மொத்தமாகப் பார்த்தால் ரொம்ப நல்லவர்தான்" என்று டேமியன் லூயிஸ் என்னும் நடிகரால் நையாண்டியாகச் சித்தரிக்கப்பட்டார். இது கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

இதன் கதாசிரியரான கை ஜெங்கின் இவ்வாறு கூறினார்: "என்னுடைய ஜெஃப்ரி ஆர்ச்சர் கடந்த 30 வருடங்களில் அடிக்கடி பிரிட்டனைக் காப்பாற்றியவர்." அவர் தாம் சந்திக்கும் பெண்கள், ஆண்கள், நாய்கள் அனைவருக்கும் மிகப் பிரியமானவர் ஆகிவிடுகிறார் - அவர் ஒரு மிக மேம்பட்ட கதாநாயகர்."

பௌல் எலியட் எழுதிய தேர் ஈஸ் நோ பிளேஸ் லைக் ஹோம் என்னும் நகைச்சுவை நாடகத்தில், நடிக நடிகையருக்கான ஒரு ஒய்வில்லத்தில் வசிப்பவர்கள் அந்த ஓய்வில்லம் மூடப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், அந்த ஓய்வில்லத்தைத் தொடர்ந்து நடத்தப் பணயத் தொகைக்காக ஆர்ச்சரைக் கடத்துவதாகச் சித்தரிக்கப்பட்டது.

பிரைவேட் ஐ என்னும் நையாண்டிப் பத்திரிகை ஆர்ச்சரை 'ஜெஃப்ரி ஆர்ச்சோல்' என்றும் 'பிரபு ஆர்ச்சோல்' என்றும் குறிப்பிட்டு, அவரை ஒரு பொய்யர் மற்றும் கட்டுக்கதைக்காரர் என்று சித்தரிக்கிறது. அவ்வப்போது, 'ஜெராமி போமேன்' என்னும் கதாநாயகன் தன்னைப் பற்றியே மிகையாகப் புனைவதாக ஆர்ச்சரின் புனை கதைகளின் கேலி வடிவங்களை இது வெளியிட்டு வந்துள்ளது.

பிர்ட்ஜெட் ஜோன்ஸ்'ஸ் டயரி என்னும் புனைவின் ஒரு சிறு பகுதியில் ஆர்ச்சர் தம்மையே சித்தரித்துள்ளார் இதில் வேடிக்கை என்னவென்றால், பிர்ட்ஜெட் எப்போதுமே தவறாகவே சொல்கிறார்; அவர் 'தமது கால கட்டத்தின் மிகச் சிறந்த புத்தகம்' என்று கூறி பல பிரபல (அந்த வேடிக்கையைப் பொறுத்தவரை சிறந்த) நூலாசிரியர்களைக் கூட்டத்தில் கண்டு பிடிக்கிறார்; இவர்களில் ஒருவராக பிரபு ஆர்ச்சர் இருக்கிறார்

படைப்புகளின் பட்டியல்கள்தொகு

கேன் அண்ட் ஏபல் தொடர்கள்தொகு

 • ஷல் வீ டெல் தி பிரசிடெண்ட்? (1977)
 • கேன் அண்ட் ஏபல் (1980)
 • தி ப்ராடிகல் டாட்டர் (1982)

பிரிஸன் டயரீஸ்தொகு

 • 1. ஹெல் – பெல்மார்ஷ் (2002)
 • 2. பர்கேட்டரி – வேலேண்ட் (2003)
 • 3. ஹெவன் – நார்த் சீ கேம்ப் (2004)

பிற புதினங்கள்தொகு

 • நாட் எ பென்னி மோர் நாட் எ பென்னி லெஸ் (1976)
 • ஃபர்ஸ்ட் அமங் ஈக்வல்ஸ் (1984)
 • எ மேட்டர் ஆஃப் ஹானர் (1986)
 • ஆஸ் தி க்ரோ ஃப்ளைஸ் (1991)
 • ஹானர் அமங் தீவ்ஸ் (1993)
 • தி ஃபோர்த் எஸ்டேட் (1996)
 • தி லெவந்த் கமாண்ட்மெண்ட் (1998)
 • சன்ஸ் ஆஃப் ஃபார்ச்சூன் (2003)
 • ஃபால்ஸ் இம்ப்ளிகேஷன் (2006)
 • தி காஸ்பல் அக்கார்டிங் டு தி ஜூடாஸ் ஃபிரான்சிஸ் ஜே.மோலோனியுடன் பெஞ்சமின் இஸ்காரியட் எழுதியது
 • எ பிரிஸனர் ஆஃப் பர்த்(2008)
 • பாத்ஸ் ஆஃப் குளோரி (2009)

தி க்ளிஃப்டன் க்ரோனிகிள்ஸ்தொகு

 • நாவல் 1 (2011)
 • நாவல் 2 (2012)
 • நாவல் 3 (2013)
 • நாவல் 4 (2014)
 • நாவல் 5 (2015)

நாடகங்கள்தொகு

 • பியாண்ட் ரீசனபிள் டௌட் (1987)
 • எக்ஸ்ளூசிவ் (1989)
 • தி அக்யூஸ்ட் (2000)

சிறு கதைகள்/ தொகுப்புகள்தொகு

 • எ க்விவர் ஃபுல் ஆஃப் ஆரோஸ் (1980)
 • எ ட்விஸ்ட் இன் தி டேல் (1989)
 • டுவெல்வ் ரெட் ஹெர்ரிங்ஸ் (1994)
 • தி கலெக்டட் ஷார்ட் ஸ்டோரீஸ் (1997)
 • டு கட் எ லாங்க் ஸ்டோரி ஷார்ட் (2000)
 • கேட் ஓ'நைன் டேல்ஸ் (2006)
 • அண்ட் தேர்பை ஹேங்க்ஸ் எ டேல் (2010)

குழந்தைகளுக்காகதொகு

 • பை ராயல் அப்பாயிண்ட்மெண்ட் (1980)
 • வில்லி விசிட்ஸ் தி ஸ்கொயர் வேர்ல்ட் (1980)
 • வில்லி அண்ட் தி கில்லர் கிப்பர் (1981)
 • தி ஃபர்ஸ்ட் மிராகிள் (1994)

மேலும் படிக்கதொகு

குறிப்புகள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Caroline Davies (20 July 2001). "He lied his way to the top". Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/uknews/1334660/He-lied-his-way-to-the-top.html. 
 2. Jim Waley (22 July 2001). "Author of his own Demise". ninemsn. Archived from the original on 6 ஜூலை 2011. https://web.archive.org/web/20110706110724/http://sgp1.paddington.ninemsn.com.au/sunday/feature_stories/article_890.asp?s=1. 
 3. Paul Kelso (20 July 2001). "Mendacious, ambitious, generous and naive". The Guardian. http://www.guardian.co.uk/uk/2001/jul/20/conservatives.archer11. 
 4. "Lord Archer answers your questions". BBC News. 1999-02-01. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/269876.stm. பார்த்த நாள்: 2007-06-14. 
 5. பால் கெல்சோ "நம்பமுடியாதவர், ஆசைகள் மிக்கவர், தாராளமானவர் மற்றும் கபடமற்றவர்", தி கார்டியன் , 20 ஜூலை 2001. 2007வது வருடம் மே 20 அன்று மீண்டும் பெறப்பட்டது.
 6. [http://findarticles.com/p/articles/mi-qn4158/is_20010720/al-nl4402294/pg_3 "ஜெஃப்ரி ஆர்ச்சரின் வீழ்ச்சி: மனிதரும் அவர் பற்றிய புனைகதைகளும்: அவருடைய வாழ்க்கை ...", க்ரிஸ் பிளாக்ஹர்ஸ்ட்டின் தி இண்டிபெண்டண்ட் 2007வது வருடம் ஜூலை 20 [பக்கம் 2]. 2007வது வருடம் மே 2007 அன்று பெறப்பட்டது.
 7. 7.0 7.1 7.2 7.3 "Archer fraud allegations: the simple truth". The Guardian. http://www.guardian.co.uk/archer/article/0,,537932,00.html. பார்த்த நாள்: 2007-12-18. 
 8. தி டைம்ஸ் செய்தித்தாள் – வியாழன் 1993வது வருடம் அக்டோபர் 7.
 9. "Archer marriage under spotlight". BBC. 2001-06-14. http://news.bbc.co.uk/2/hi/uk_news/1388341.stm. பார்த்த நாள்: 2007-12-01. 
 10. 10.0 10.1 10.2 "Star demands £2.2m from Archer". BBC News. 19 July 2001. http://news.bbc.co.uk/1/hi/uk/1447018.stm.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "DTI" defined multiple times with different content
 11. 11.0 11.1 11.2 "Archer's share deal under scrutiny again". The Guardian. 30 October 1999. http://www.guardian.co.uk/mayor/Story/0,,194773,00.html. 
 12. "Archer faces 'missing aid' probe". BBC. http://news.bbc.co.uk/1/hi/uk/1451998.stm. பார்த்த நாள்: 2007-12-18. 
 13. "http://news.independent.co.uk/uk/this_britain/article145624.ece". Independent. http://news.independent.co.uk/uk/this_britain/article145624.ece. பார்த்த நாள்: 2007-12-18. [தொடர்பிழந்த இணைப்பு]
 14. 14.0 14.1 "Timeline: Stranger than fiction". BBC. 8 October 2002. http://news.bbc.co.uk/2/hi/uk_news/1420132.stm. 
 15. "Ted Francis: Archer whistleblower". BBC. 19 July 2001. http://news.bbc.co.uk/2/hi/uk_news/1420933.stm. 
 16. "Disgraced Archer jettisoned by Tories". The Guardian Unlimited. 23 November 1999. http://www.guardian.co.uk/archer/article/0,,195732,00.html. 
 17. "Review – The Accused". Curtain Up. 8 October 2002. http://www.curtainup.com/accused.html. 
 18. "Archer jailed for perjury". BBC. 19 July 2001. http://news.bbc.co.uk/2/hi/uk_news/1424501.stm. 
 19. "New celeb jail visitor for Archer". Sunday Mirror. 16 Feb 2003. http://findarticles.com/p/articles/mi_qn4161/is_20030216/ai_n12861033/. 
 20. "How We Met: Barry Humprhies & Jeffrey Archer". Independent. 6 April 2008. http://www.independent.co.uk/extras/sunday-review/regulars/how-we-met-barry-humprhies--jeffrey-archer-804282.html. [தொடர்பிழந்த இணைப்பு]
 21. "So that's what he was up to when he wasn't out for lunch". Independent. 6 October 2002. http://news.bbc.co.uk/2/hi/uk_news/1424501.stm. 
 22. "Archer settles £1.8m libel debt with newspaper". Telegraph. 2 October 2002. http://www.telegraph.co.uk/news/uknews/1408852/Archer-settles-1.8m-libel-debt-with-newspaper.html. 
 23. "MCC gives Archer out – for seven years". Guardian. 28 October 2002. http://www.guardian.co.uk/uk/2002/oct/28/cricket.archer. 
 24. "Lord Archer freed from prison". BBC. 22 September 2003. http://news.bbc.co.uk/2/hi/uk_news/3082627.stm. 
 25. "Archer 'may vote in Lords again'". BBC. 26 February 2006. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4752758.stm. 
 26. "New Archer link to coup plot alleged". The Guardian. http://www.guardian.co.uk/equatorialguinea/story/0,,1326040,00.html. பார்த்த நாள்: 2007-08-22. 
 27. "Jeffrey Archer: The Truth – BBC Drama". BBC. 2007-12-01 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
முன்னர்
Sir Cyril Osborne
Member of Parliament for Louth
1969Oct 1974
பின்னர்
Michael Brotherton
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்ரி_ஆர்ச்சர்&oldid=3368545" இருந்து மீள்விக்கப்பட்டது