ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (ICC Champions Trophy) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அல்லது ஐசிசியால் நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் (ஒ.நா.ப) துடுப்பாட்டப் போட்டியாகும். தேர்வுப் போட்டிகளில் விளையாடாத நாடுகளில் விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் ஒரு குறுகிய துடுப்பாட்டப் போட்டியாக நடத்தும் வகையில், ஐசிசி நிறுவனம் வாகையாளர் வெற்றிக்கிண்ண யோசனையை முன்வைத்து, 1998-இல் இத்தொடர் தொடங்கப்பட்டது.[3] துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போன்ற மற்றொரு பெரிய துடுப்பாட்ட நிகழ்வின் அதே ஒருநாள் வடிவமைப்பைக் கொண்ட ஐ.சி.சி நிகழ்வுகளில் ஒன்றாக இது உள்ளது.
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
முதல் பதிப்பு | 1998 வங்காளதேசம் |
கடைசிப் பதிப்பு | 2017 இங்கிலாந்து & வேல்சு |
அடுத்த பதிப்பு | 2025 பாக்கித்தான் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறை, ஒற்றை-வெளியேற்றம் |
மொத்த அணிகள் | 8 |
தற்போதைய வாகையாளர் | பாக்கித்தான் (1-ஆவது விருது) |
அதிகமுறை வெற்றிகள் | ஆத்திரேலியா இந்தியா (ஒவ்வொன்றும் 2 விருதுகள்) |
அதிகபட்ச ஓட்டங்கள் | கிறிஸ் கெயில் (791)[1] |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | கைல் மில்ஸ் (28)[2] |
வலைத்தளம் | இணையதளம் |
வரலாறு
தொகுஆண்டு | வாகையாளர்கள் |
---|---|
1998 | தென்னாப்பிரிக்கா |
2000 | நியூசிலாந்து |
2002 | இந்தியா இலங்கை |
2004 | மேற்கிந்தியத் தீவுகள் |
2006 | ஆத்திரேலியா |
2009 | ஆத்திரேலியா (2) |
2013 | இந்தியா (2) |
2017 | பாக்கித்தான் |
2025 | - |
2029 | - |
இத்தொடர் ஐசிசி வெளியேற்றத் தொடர் (ICC KnockOut Tournament) என்ற பெயரில் 1998 இல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முறை விளையாடப்பட்டு வருகிறது. இவ்விருதின் பெயர் 2002 இல் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் என மாற்றப்பட்டது.[4]
தொடக்கத்தில் ஐசிசி-யின் முழு உறுப்பு நாடுகள் மட்டும் கலந்து கொண்ட இத்தொடரில், 2000 முதல் 2004 வரை இணை-உறுப்பு நாடுகளும் பங்கேற்றன. 2009 முதல், இத்தொடரில் தர-வரிசையில் உயர்நிலையில் உள்ள எட்டு நாடுகள் மட்டும் பங்கேற்றன.
வடிவம்
தொகு2009 முதல், மொத்தம் எட்டு அணிகள் நான்கு அணிஅக்ள் கொண்ட இரண்டு குழுக்களில் சுழல்-முறை வடிவத்தில் விளையாடின, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதியில் விளையாடின. ஒரு போட்டியில் தோல்வியடைவது என்பது போட்டியிலிருந்து வெளியேறுவதாகும். போட்டியின் தற்போதைய வடிவத்தில் மொத்தம் 15 போட்டிகள் விளையாடப்படுகின்றன, போட்டிகள் சுமார் இரண்டரை வாரங்கள் நீடிக்கும்.[5]
தகுதி
தொகு2021 முதல், அண்மைய உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடரில் விளையாடுகின்றன.
முடிவுகள்
தொகுஆண்டு | நடத்திய நாடு(கள்) | இறுதிப்போட்டி அரங்கு | இறுதி | இறுதிப்போட்டி பார்வையாளர்கள் | அணிகள் | ||
---|---|---|---|---|---|---|---|
வெற்றியாளர் | முடிவு | இரண்டாவது | |||||
1998 | வங்காளதேசம் |
வங்கபந்து தேசிய அரங்கு, டாக்கா | தென்னாப்பிரிக்கா 248/6 (47 நிறைவுகள்) |
தென்னாப்பிரிக்கா 4 இலக்குகளால் வெற்றி ஆட்டவிபரம் |
மேற்கிந்தியத் தீவுகள் 245 (49.3 நிறைவுகள்) |
40,000 | 9 |
2000 | கென்யா |
சிம்பாகா அரங்கு, நைரோபி | நியூசிலாந்து 265/6 (49.4 நிறைவுகள்) |
நியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி ஆட்டவிபரம் |
இந்தியா 264/6 (50 நிறைவுகள்) |
7,000 | 11 |
2002 | இலங்கை |
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு | இலங்கை 244/5 (50 நிறைவுகள்) & 222/7 (50 நிறைவுகள்) இந்தியா 14/0 (2 நிறைவுகள்) & 38/1 (8.4 நிறைவுகள்) |
இந்தியாவும் இலங்கையும் இணை-வாகையாளர்களாக அறிவிக்கப்பட்டன ஆட்டவிபரம் 1 & ஆட்டவிபரம் 2 |
இணை-வெற்றியாளர்கள் | 34,832 | 12 |
2004 | இங்கிலாந்து |
தி ஓவல், இலண்டன் | மேற்கிந்தியத் தீவுகள் 218/8 (48.5 நிறைவுகள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 2 இலக்குகளால் வெற்றி ஆட்டவிபரம் |
இங்கிலாந்து 217 (49.4 நிறைவுகள்) |
18,600 | 12 |
2006 | இந்தியா |
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை | ஆத்திரேலியா 116/2 (28.1 நிறைவுகள்) |
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி (ட/லூ) ஆட்டவிபரம் |
மேற்கிந்தியத் தீவுகள் 138 (30.4 நிறைவுகள்) |
26,000 | 10 |
2009 | தென்னாப்பிரிக்கா |
சூப்பர்சுபோர்ட் அரங்கு, செந்தூரியன் | ஆத்திரேலியா 206/4 (45.2 நிறைவுகள்) |
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி ஆட்டவிபரம் |
நியூசிலாந்து 200/9 (50 நிறைவுகள்) |
22,456 | 8 |
2013 | இங்கிலாந்தும் வேல்சும் |
எட்சுபாசுட்டன் அரங்கு, பர்மிங்காம் | இந்தியா 129/7 (20 நிறைவுகள்) |
India won by 5 runs ஆட்டவிபரம் |
இங்கிலாந்து 124/8 (20 நிறைவுகள்) |
24,867 | 8 |
2017 | தி ஓவல், இலண்டன் | பாக்கித்தான் 338/4 (50 நிறைவுகள்) |
பாக்கித்தான் 180 ஓட்டங்களால் வெற்றி ஆட்டவிபரம் |
இந்தியா 158 (30.3 நிறைவுகள்) |
26,000 | 8 | |
2025 | பாக்கித்தான் |
8 | |||||
2029 | இந்தியா |
8 |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ICC Champions Trophy records – Most tournament runs". ESPNcricinfo. Archived from the original on 7 March 2017. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
- ↑ "ICC Champions Trophy records – Most tournament wickets". ESPNcricinfo. Archived from the original on 21 June 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
- ↑ "Curtain falls amid high ICC hopes". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 2 நவம்பர் 1998. Archived from the original on 30 March 2007. பார்க்கப்பட்ட நாள் 21 March 2009.
- ↑ Siddharth Benkat (24 May 2017). "The short history of ICC Champions Trophy". The Hindu. http://www.thehindu.com/sport/cricket/short-history-of-iccs-champions-trophy/article18559653.ece.
- ↑ "2017 Champions Trophy fixtures". ESPNcricinfo. 1 June 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.