ஜாம்நகர் மாவட்டம்

இந்தியாவில் உள்ள குசராத்து மாநிலத்தில் கட்ச் வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது இந்த ஜாம்நகர் மாவட்டம். இதன் தலைமையகம் ஜாம்நகர் ஆகும். இந்திய நிறுவனங்களுக்கான பல உற்பத்தி வசதிகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது. டாடா மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. பல அரண்மனைகளும் சிடியா பறவைகள் சரணாலயமும், கடல் தேசிய பூங்காவும் உள்ளன.

ஜாம்நகர் மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2
மொழிகள்
 • ஆட்சிமொழிகுஜராத்தி, இந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
குஜராத் மாநில வரைபடத்தில் ஜாம்நகர் மாவட்டத்தின் அமைவிடம்

வட்டங்கள்Edit

மக்கள் வகைப்பாடுEdit

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,159,130 மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்கிறார்கள். இது நமீபியாவின் மக்கள் தொகை அளவு அல்லது அமெரிக்கவின் நியூ மெக்ஸிக்கோவின் அளவைக் கொண்டது. இந்தியாவில் உள்ள மாவட்ட அளவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 153 மக்கள் (400 / சதுர மைல்) தொகை அடர்த்தி கொண்டுள்ளது. பத்தாண்டுகளில் அதாவது 2001-2011 கொண்ட காலகட்டத்தில் இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13,38% ஆக இருந்தது. ஜாம்நகர் 1000 ஆண்களுக்கும் 938 பெண்கள் என்ற விகிதத்தில் வாழ்கிறார்கள். எழுத்தறிவு விகிதம் 74.4% ஆகும். அதேபோல் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இம்மாவட்டத்தில் 87.78% மக்கள் குஜராத்தியும், 6.28% சிந்தி மொழியும் மற்றும் 2.53% இந்தியும் பேசும் மக்கள் வாழுகிறார்கள்.

மேற்கோள்கள்Edit

வெளி இணைப்புகள்Edit