ஜாம்நகர் (Jamnagar, குசராத்தி: જામનગર) இந்திய மாநிலம் குசராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சியாகும். 1920களில் மகாராசா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்கால் பெரும்பாலும் கட்டப்பட்ட இந்த நகரம் துவக்கத்தில் நவநகர் என்று அழைக்கப்பட்டது. கட்ச் வளைகுடாவின் தெற்கே மாநிலத் தலைநகரம் காந்தி நகரிலிருந்து மேற்கே 337 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியப் பாதுகாப்பிற்கு வாய்ப்புமிக்க தலமாக விளங்குவதால் இங்கு மூன்று படைத்துறைகளும் இருப்புக் கொண்டுள்ளன. அண்மையில் இந்தியாவின் பெரும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஜாம்நகரின் மோட்டி காவ்டி பகுதியில் உலகின் மிகப்பெரும் பாறைநெய் தூய்விப்பாலையை நிறுவியப்பிறகு புகழ்பெற்றுள்ளது.[1] இதனையடுத்து வாடினார் பகுதியில் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனமும் தனது தூய்விப்பாலையை நிறுவியுள்ளது.[2] இக்காரணங்களால் இந்த நகரம் இந்தியாவின் எண்ணெய் நகரம் என அறியப்படுகிறது.

ஜாம்நகர்
—  நகரம்  —
ஆள்கூறு 22°28′N 70°04′E / 22.47°N 70.07°E / 22.47; 70.07
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்
மாவட்டம் ஜாம்நகர்
[[குசராத் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[குசராத் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மேயர் அமிபென் பாரிக்
மக்களவைத் தொகுதி ஜாம்நகர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,10,000 (2001)

111/km2 (287/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14,125 சதுர கிலோமீட்டர்கள் (5,454 sq mi)
குறியீடுகள்
15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜாம்நகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்நகர்&oldid=3792812" இலிருந்து மீள்விக்கப்பட்டது