குண்டப்பா விசுவநாத்
குண்டப்பா விசுவநாத் (Gundappa Viswanath, பிறப்பு: பிப்ரவரி 12 1949),[1] இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் 91 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1969 – 1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006 |
தேர்வுப் போட்டிகள்
தொகு1969 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . நவம்பர் 15, இல் கான்பூரில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்[1]. இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் கன்னோலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 1 ஓவர்கள் வீசி 4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 134 ஓட்டங்கள் எடுத்து மில்லெட்டின் பந்துவீச்சில் ஆடமிழந்தார். பின் பதுவீச்சில் 1 ஓவர் வீசி 4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[2]
இறுதிப் போட்டி
தொகு1983 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ர்வரி 4, இல் கராச்சியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆறாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 69 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து முதாசர் நசாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில்முடிந்தது.[3]
1975 -1976 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 403 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் ஆனது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இந்தப் போட்டியில் 112 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அப்போதைய காலகட்டங்களில் இதுவே அதிக துரத்தலாக கருதப்பட்டது. பின் 1978 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 124 ஓட்ட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டங்கள் 255 ஆக உதவினார். இதன்மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க உதவினார்.
ஒருநாள் போட்டிகள்
தொகு1974 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூலை 13 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஊல்மரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 இலக்குகள் வித்தியாசட்தில் வெற்றி பெற்றது.[4]
இறுதிப் போட்டி
தொகு1982 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூன் 2 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.இந்தப் போட்டியில் 14 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து போத்தமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசட்தில் வெற்றி பெற்றது.[5]
தலைவராக
தொகுஇவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுகள் வரை இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைமை தாங்கினார். இதில் ஒருபோட்டி சமனிலும் ஒரு போட்டி தோல்வியிலும் முடிந்தது.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Gundappa Viswanath", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
- ↑ "2nd Test, Australia tour of India at Kanpur, Nov 15-20 1969 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
- ↑ "6th Test, India tour of Pakistan at Karachi, Jan 30 - Feb 4 1983 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
- ↑ "1st ODI, India tour of England at Leeds, Jul 13 1974 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
- ↑ "1st ODI, India tour of England at Leeds, Jun 2 1982 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28