ரவி சாஸ்திரி

இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர்

ரவிசங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி (Ravishankar Jayadritha Shastri பிறப்பு மே 27,1962) ஒரு மேனாள் இந்தியத் துடுப்பாட்ட துடுப்பாட்ட வீரர், வர்ணனையாளர், இந்திய தேசியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். ஒரு வீரராக, 1981 முதல் 1992 வரை இந்திய தேசிய துடுப்பாட்ட அணியில் தேர்வு, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளராக தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் சகலத்துறையராக மாறினார். 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் சாஸ்திரி இடம்பெற்றிருந்தார். 2024 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சியான நாமானில் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார். 1985 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடந்த உலகத் துடுப்பாட்ட வாகையாளர் போட்டியின் வாகையாளரின் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பருவத்தில், சனவரி 10,1985 அன்று, முதல் தரத் துடுப்பாட்டத்தில் ஒரு நிறைவில் ஆறு பந்துகளிலும் ஆறு ஒட்டங்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் கேரி சோபர்ஸின் சாதனையை இவர் சமன் செய்தார். .

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ரவி சாஸ்திரி மங்களூர் வம்சாவளியைச் சேர்ந்தவர். பம்பாயில் பிறந்த இவர் டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[1] இளம் வயதிலேயே துடுப்பாட்டத்தை தீவிரமாக விளையாடினார். டான் போஸ்கோ அணிக்காக விளையாடிய சாஸ்திரி 1976 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கிடையேயான கில்ஸ் கேடயத்தின் இறுதிப் போட்டி வரை சென்று இறுதியாக செயின்ட் மேரீஸ் பள்ளியிடம் தோல்வியடைந்தனர். சாஸ்திரியின் தலைமையின் கீழ், டான் போஸ்கோ 1977 ஆம் ஆண்டில் கில்ஸ் கேடயத்தை வென்றது. இது அந்த பள்ளி வரலாற்றில் முதல் முறையாகும்.[2] 1990 மார்ச் 18 அன்று, சாஸ்திரி ரிது சிங் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அலெகா சாஸ்திரி என்ற ஒரு மகள் உள்ளார். [சான்று தேவை]

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

இளையோர் கல்லூரியில் தனது கடைசி ஆண்டில், ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்ட பம்பாய் அணியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 வயது மற்றும் 292 நாட்கள் இருக்கும் போது பம்பாய் அணிக்காக விளையாடிய இளைய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 
ரவி சாஸ்திரியின் தொழில் வாழ்க்கை வரைபடம்

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, பாக்கித்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டது. தேசிய பயிற்சியாளர் ஹேமு அதிகாரியால் கடைசி நிமிடத்தில் பயிற்சி முகாமில் சாஸ்திரி சேர்க்கப்பட்டார். சாஸ்திரி ஒரு சோதனை ஆட்டத்தில் ஒரு அணிக்குத் தலைமை தாங்கினார். பின்னர் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் இந்திய அணி இலங்கைக்குச் சென்றது, ஆனால் மழை காரணமாக போட்டிகள் அடிக்கடி தடைபட்டன.

சர்வதேசப் போட்டிகள்

தொகு

ஆரம்ப கால வழக்கை

தொகு

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகமான பதினெட்டு மாதங்களுக்குள், பத்தாவது இடத்தில் இருந்து தொடக்க மட்டை வீச்சாளராக விளையாடினார். தனது துடுப்பாட்ட வாழ்க்கையில் ஒன்று முதல் பத்தாவது வீரராகக் களமிறங்கியுள்ளார்.1981 இரானி கிண்ணம் தேர்வுத் துடுப்பாட்ட பருவத் தொடக்கத்தில் 101 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றிய இவரது சாதனை இருபது ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

வழக்கமான துவக்க ஆட்டக்காரர்களான பிரணாப் ராய், குலாம் பார்கர் ஆகியோரின் தடுமாற்றம் காரணமாக 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக தி ஓவல் மைதானத்தில் சாஸ்திரியை துவக்க வீரராகக் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 66 ஓட்டங்கள் எடுத்து தனக்கென ஒரு தனித்துவத்தை வெளிப்படுத்தினார். இவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாக்கிதானில் விளையாடவிருந்த நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து இவர் விலகியிருந்தார். கராச்சில் நடந்த இறுதி தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் இம்ரான் கானின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மீண்டும் துவக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட நூறு ஓட்டங்களை அடித்தார். பின்னர் ஆன்டிகுவா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மேலும் ஒரு நூறு அடித்தார்.

1983 உலகக் கிண்ணத்தின் பெரும்பாலான முக்கியப் போட்டிகளில் விளையாட சாஸ்திரி தேர்வு செய்யப்படவில்லை. அந்த ஆண்டின் பிற்பகுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.

துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - 1985

தொகு

பாக்கித்தானில் ஒரு சில தொடர்கள் மற்றும் 1983 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியைத் தவிர, ஆத்திரேலியாவில் நடந்த உலக துடுப்பாட்ட வாகையளர் போட்டி இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.தொடரின் துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினாலும் கடைசி மூன்று போட்டிகளில் இவரும் ஸ்ரீகாந்தும் மூன்று அரைசதங்களை அடித்தனர். ஆத்திரேலியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்கள் நூறு ஓட்டங்கள் அடித்ததனர். ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. சிவராமகிருஷ்ணனும் சாஸ்திரியும் ஐந்து போட்டிகளில் 18 இலக்குகளை வீழ்த்தினர்.

துணைத் தலைவர் 1985

தொகு

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஷார்ஜாவில் நடந்த ரோத்மேன் கிண்ணத்தை இந்தியா வென்றது. பாக்கித்தான் மற்றும் ஆத்திரேலியாவை தோற்கடித்தது.குறிப்பாக, பாக்கித்தானுக்கு எதிரான வெற்றி மறக்க முடியாததாக இருந்தது, ஏனெனில் இந்தியா மொத்தம் 125 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சாஸ்திரியும் சிவாவும் பந்துவீச்சில் தங்கள் வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்தனர். இந்தப் போட்டிக்காக தான் சாஸ்திரி முதல் முறையாக அணியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு உலகத் துடுப்பாட்ட வாகையாளர் போட்டியின் முடிவில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கவாஸ்கர் அறிவித்திருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்பு, ஆத்திரேலியாவின் முன்னாள் தலைவர் இயன் சேப்பல், இந்திய துடுப்பாட்டத்தின் நலனுக்காக, சாஸ்திரி இவரிடமிருந்து பொறுப்பேற்கும் வரை கவாஸ்கர் தலைவராக தொடர வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

1985-86 பருவத்தில் கபில் தேவுக்கு துணைத் தலைவராக சாஸ்திரி தொடர்ந்தார். ஆத்திரேலியா, இலங்கை, பாக்கித்தான் ஆகியவை 1986-87 இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தன. ஆத்திரேலியாக்கு எதிராக மெட்ராஸில் நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் சாஸ்திரி முக்கிய பங்கு வகித்தார்.

பயிற்சியளராக

தொகு

சூலை 2017 இல் முன்னாள் அணி இயக்குநரான சாஸ்திரி, சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ்.லட்சுமன் அடங்கிய தேர்வுத்துடுப்பாட்ட ஆலோசனைக் குழுவால் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[3] இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவருக்கு முன்பாகத் தலைவராக இருந்த அனில் கும்ப்ளேயினை விட இது அதிகமாகும்.[4] 2019 உலகக் கிண்ணத் துடுப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சூன் 13 அன்று, பி.சி.சி.ஐ சாஸ்திரியின் ஒப்பந்தத்தை போட்டிக்குப் பிறகு 45 நாட்களுக்கு நீட்டித்ததாக அறிவித்தது.[5] ஆகஸ்ட் 16,2019 அன்று, மூத்த ஆண்கள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார், இவரது புதிய ஒப்பந்தம் 2021 ஐசிசி இ 20 உலகக் கிண்ணத் துடுப்பாட்டம் வரை நீட்டிக்கப்பட்டது.[6]

தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ், பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் போது கபாவில் இந்தியா தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்வுத் துடுப்பாட்ட வெற்றியடைந்தது. காயங்களால் பாதிக்கப்பட்டும், ஒப்பீட்டளவில் அனுபவமற்ற அணியை களமிறக்கியும், சாஸ்திரியின் தலைமை அணிக்குள் நம்பிக்கையையும் பின்னடைவையும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இவரது அணுகுமுறை, வீரர்களை ஊக்குவிக்கும் திறனுடன் இணைந்து, இறுதி நாளில் இந்தியா 328 ரன்களைத் துரத்த உதவியது, காபாவில் ஆத்திரேலியாவின் 32 ஆண்டுகால சாதனையினைத் தகர்த்தது. இந்த வெற்றி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது மட்டுமல்லாமல், இந்தியாவின் மிக வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக சாஸ்திரியின் திறமையை உறுதிப்படுத்தியது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்

தொகு

நவம்பர் 2021 இல், சாஸ்திரி தேசியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்று லெஜண்ட்ஸ் லீக் துடுப்பாட்ட ஆணையராகச் சேர்ந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Proud to hail from Mangaluru-Team Indian director Ravi Shastri". Daijiworld news. http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=381114. 
  2. "Report of Sanket Chavan improving Shastri's Giles shield record". Mid-day.com. Retrieved 2014-08-09.
  3. "Shastri, Zaheer, Dravid in India's new coaching team".
  4. "How does Ravi Shastri's annual salary of Rs 8 crore compare with previous India coaches? - Firstpost". www.firstpost.com. Retrieved 2018-03-10.
  5. "World Cup 2019: Indian coach Ravi Shastri and his staff to be handed 45-day extended contract after tournament". DNA India (in ஆங்கிலம்). 2019-06-13. Retrieved 2019-06-13.
  6. "Ravi Shastri to remain India head coach". ESPN Cricinfo. 16 August 2019. Retrieved 16 August 2019.
  7. "Shastri roped in as Commissioner of Legends League Cricket".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_சாஸ்திரி&oldid=4229665" இலிருந்து மீள்விக்கப்பட்டது