ராஜ்கோட்
ராஜ்கோட் (Rajkot) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் நான்காவது பெரிய [5] [6] நகரமாகும். இது அகமதாபாது, வடோதரா, சூரத்து ஆகிய நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம் ஆகும். இது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியின் மையத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் ராஜ்கோட் இந்தியாவின் 35-வது பெரிய பெருநகரப் பகுதியாக உள்ளது. [7] ராஜ்கோட் இந்தியாவின் 6வது தூய்மையான [8] [9] [10] நகரமாகும், மேலும் இது மார்ச் 2021 நிலவரப்படி உலகின் 7வது வேகமாக வளரும் நகரமாகும். இந்த நகரம் ராஜ்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது. இது மாநிலத் தலைநகர் காந்திநகரில் காந்திநகரில் இருந்து 245 கிமீ தொலைவில் அஜி மற்றும் நயாரி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் ராஜ்கோட் பம்பாய் மாநிலத்துடன் இணைவதற்கு முன்பு, சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகராக 15 ஏப்ரல் 1948 முதல் 31 அக்டோபர் 1956 வரை இருந்தது. ராஜ்கோட் 1 மே 1960 அன்று குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
ராஜ்கோட் | |
---|---|
பெருநகரம் | |
மேலிருந்து: ராஜ்கோட் வானுரசி, சௌராஷ்டிரா பல்கலைக்கழகம், ஆஸ்டன் சௌக், கிறிஸ்த்து கல்லூரி, சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் | |
ஆள்கூறுகள்: 22°18′00″N 70°47′00″E / 22.3000°N 70.7833°E | |
நாடு | ![]() |
மாநிலம் | குசராத்து |
பிராந்தியம் | சௌராட்டிரா |
மாவட்டம் | ராஜ்கோட் |
Zone | 3 (Central, East and West)[1] |
Ward | 23[1][2] |
ராஜ்கோட் மாநகராட்சி மன்றம் | 1973 |
தோற்றுவித்தவர் | Thakur Sahib Vibhoji Ajoji Jadeja |
அரசு | |
• நிர்வாகம் | (RMC) |
• மேயர் | பிரதீப் தேவ் |
பரப்பளவு[3] | |
• பெருநகரம் | 686 km2 (265 sq mi) |
ஏற்றம் | 134.42 m (441.01 ft) |
மக்கள்தொகை (2021)[4] | |
• பெருநகரம் | 20,00,000 |
• தரவரிசை | 28வது 4வது (குசராத் மாநிலத்தில்) |
• அடர்த்தி | 2,900/km2 (7,600/sq mi) |
• பெருநகர்[சான்று தேவை] | 2.45 million |
• Metro rank | 35வது |
இனங்கள் | Rajkotian |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 360 0XX |
தொலைபேசி குறியீடு | 0281 |
வாகனப் பதிவு | GJ-03 |
எழுத்தறிவு | 87.80 (2016)%[சான்று தேவை] |
திட்டமிடல் முகமை | (RUDA) |
காலநிலை | அரை வறண்ட (கோப்பென்) |
பொழிவு | 590 மில்லிமீட்டர்கள் (23 அங்) |
ஆண்டின் சராசரி வெப்பநிலை | 26 °C (79 °F) |
இணையதளம் | www |
வரலாறு தொகு
ராஜ்கோட் நிறுவப்பட்டது முதல் வெவ்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. இது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்தது. மகாத்மா காந்தி போன்ற பல ஆளுமைகளின் இருப்பிடமாக ராஜ்கோட் இருந்தது. ராஜ்கோட் வளர்ந்து வரும் கலாச்சார, தொழில்துறை, பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு மாற்றம் காணும் காலத்தில் உள்ளது. ராஜ்கோட் இந்தியாவின் 26வது பெரிய நகரமாகவும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் 22வது இடத்திலும் உள்ளது. [9]
ராஜ்கோட் 15 ஏப்ரல் 1948 முதல் 31 அக்டோபர் 1956 வரை சவுராஷ்டிரா மாநிலத்தின் தலைநகராக இருந்தது. பின்னர் 1956 நவம்பர் முதல் நாள் அன்று இருமொழி மாநிலமான பம்பாய் மாநிலத்துடன் இணைக்கபட்டது. 1960 மே முதல் நாள் அன்று பம்பாய் மாநிலத்திலிருந்து ராஜ்கோட் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. [11]
26 சனவரி 2001 அன்று 7. 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கம் மேற்கு இந்தியாவை அதிகபட்ச தீவிரத்துடன் உலுக்கியது. இதில் 13,805–20,023 பேர் இறந்தனர். 166,800 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் முக்கியமாக மேற்கு குஜராத்தின் கட்ச் பகுதியை பாதித்தது.
நிலவியல் தொகு
ராஜ்கோட் 22°18′N 70°47′E / 22.3°N 70.78°E இல் அமைந்துள்ளது. [12] இது சராசரியாக 128 மீட்டர் (420 அடி) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் அஜி ஆறு மற்றும் நயாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்கள் தவிர பிற சமயங்களில் வறண்டதாகவே இருக்கும். இந்த நகரம் 170.00 கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ளது. [13]
ராஜ்கோட் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா என்ற பகுதியில் அமைந்துள்ளது. குஜராத்தின் முதன்மையான தொழில்துறை மையங்களில் ஒன்றாக இருப்பதால் ராஜ்கோட்டின் இருப்பிடம் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜ்கோட் கத்தியவார் தீபகற்பம் என்ற பகுதியில் ஒரு மைய இடத்தில் உள்ளது. இந்த நகரம் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராஜ்கோட் நகரம் ராஜ்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். இந்த மாவட்டம் கிழக்கில் பொடாட் மற்றும் வடக்கில் சுரேந்திரநகர், தெற்கில் ஜூனாகத் மற்றும் அம்ரேலி, வடமேற்கில் மோர்பி மற்றும் மேற்கில் ஜாம்நகர் மற்றும் தென்மேற்கில் போர்பந்தர் ஆகிய தாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
காலநிலை தொகு
ராஜ்கோட் வெப்பமான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பென் BSh ), மார்ச் நடுப்பகுதியிலிருந்து சூன் நடுப்பகுதி வரை வெப்பமான, வறண்ட கோடைக்காலம் இருக்கும். சூன் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் வரை ஈரமான பருவமழைக் காலம் இருக்கும். இக்காலத்தில் நகரம் சராசரியாக 670 மில்லிமீட்டர் அல்லது 26 அங்குல மழையைப் பெறும். இந்த மழைப்பொழிவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்றாலும் [14] - உதாரணமாக 1911 மற்றும் 1939 இல் 160 மில்லிமீட்டர்கள் அல்லது 6.3 அங்குலங்கள் குறைவாக விழுந்தது, ஆனால் 1878 இல் 1,300 மில்லிமீட்டர்கள் அல்லது 51 அங்குலங்கள் மற்றும் 1950 ஆம் ஆண்டில் 1,450 மில்லிமீட்டர்கள் அல்லது 57 அங்குலங்கள் அதிகமாக பொழிந்தது. [15] நவம்பர் முதல் பெப்ரவரி வரையிலான மாதங்கள் மிதமான வெப்பநிலையை கொண்டிருக்கும். அப்போது சராசரி வெப்பநிலை சுமார் 20 °C or 68 °F குறைந்த ஈரப்பதத்துடன் இருக்கும்.
ராஜ்கோட் நகரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று சூறாவளி ஆகும். சூறாவளிகள் பொதுவாக அரபிக்கடலில் மழைக்காலத்திற்குப் பிந்தைய மாதங்களில் ஏற்படும். மே மற்றும் சூன் மாதங்களில் இப்பகுதியில் அதிக மழைப்பொழிவு மற்றும் அதிவேக காற்று வீசுகிறது. இருப்பினும், பருவமழைக்குப் பிந்தைய சூன் மாதத்தில் மழை மற்றும் காற்றின் அளவு குறைவாக இருக்கும். சூன் மற்றும் சூலை மாதங்களில் இடியுடன் கூடிய மழையானது ராஜ்கோட் வானிலையின் மற்றொரு முக்கிய பகுதியாகும். கோடை காலத்தில் வெப்பநிலை 24 மற்றும் 42 °C (75.2 மற்றும் 107.6 °F) வரை இருக்கும். குளிர்கால மாதங்களில், ராஜ்கோட் வெப்பநிலை 10 மற்றும் 22 °C (50.0 மற்றும் 71.6 °F) வரை மாறுபடும் ஆனால் குளிர்காலம் முழுக்க இனிமையானதாக இருக்கும். [16]
தட்பவெப்ப நிலைத் தகவல், ராஜ்காட் விமான நிலையம் (1981–2010, extremes 1952–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.4 (97.5) |
40.0 (104) |
43.9 (111) |
44.7 (112.5) |
47.9 (118.2) |
45.8 (114.4) |
40.6 (105.1) |
38.8 (101.8) |
42.8 (109) |
41.9 (107.4) |
38.4 (101.1) |
36.4 (97.5) |
47.9 (118.2) |
உயர் சராசரி °C (°F) | 28.4 (83.1) |
30.9 (87.6) |
35.5 (95.9) |
39.1 (102.4) |
40.5 (104.9) |
37.8 (100) |
33.0 (91.4) |
31.6 (88.9) |
33.6 (92.5) |
35.9 (96.6) |
33.2 (91.8) |
29.9 (85.8) |
34.1 (93.4) |
தாழ் சராசரி °C (°F) | 12.8 (55) |
15.0 (59) |
19.2 (66.6) |
22.6 (72.7) |
25.4 (77.7) |
26.5 (79.7) |
25.4 (77.7) |
24.4 (75.9) |
23.8 (74.8) |
22.4 (72.3) |
18.4 (65.1) |
14.4 (57.9) |
20.9 (69.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -0.6 (30.9) |
1.1 (34) |
6.1 (43) |
10.0 (50) |
16.1 (61) |
20.0 (68) |
19.4 (66.9) |
20.1 (68.2) |
16.7 (62.1) |
12.2 (54) |
7.2 (45) |
2.8 (37) |
−0.6 (30.9) |
மழைப்பொழிவுmm (inches) | 0.8 (0.031) |
0.3 (0.012) |
0.1 (0.004) |
1.4 (0.055) |
5.4 (0.213) |
108.4 (4.268) |
253.4 (9.976) |
165.3 (6.508) |
115.1 (4.531) |
19.3 (0.76) |
6.3 (0.248) |
0.3 (0.012) |
676.1 (26.618) |
% ஈரப்பதம் | 27 | 24 | 21 | 21 | 30 | 51 | 70 | 71 | 58 | 32 | 29 | 29 | 38 |
சராசரி மழை நாட்கள் | 0.1 | 0.1 | 0.0 | 0.2 | 0.1 | 4.4 | 9.6 | 8.0 | 5.0 | 1.3 | 0.3 | 0.1 | 29.1 |
ஆதாரம்: India Meteorological Department[17][18][19] |
மக்கள்தொகையியல் தொகு
2011ஆம் ஆண்டய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராஜ்கோட்டின் மொத்த மக்கள் தொகை 1,390,640 ஆகும். ராஜ்கோட் நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.20%, இது தேசிய சராசரியை விட அதிகம். மக்கள் தொகையில் 52.43% ஆண்களும், 47.47% பெண்களும் உள்ளனர். முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இந்துக்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1891 | 29,200 | — |
1941 | 66,400 | +127.4% |
1951 | 1,32,100 | +98.9% |
1961 | 1,93,500 | +46.5% |
1968 | 2,70,800 | +39.9% |
1971 | 3,02,000 | +11.5% |
1981 | 4,44,200 | +47.1% |
1991 | 6,54,500 | +47.3% |
2001 | 10,03,015 | +53.2% |
2011 | 13,90,640 | +38.6% |
2013 | 15,60,000 | +12.2% |
ஆதாரம்: [20][21][22] |
கலாச்சாரம் தொகு
ராஜ்கோட்டின் மக்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள். ராஜ்கோட்டின் பெண்கள் நகைகளை விரும்புவார்கள். பெரிய தங்கச் சங்கிளிகள், பதக்கங்கள் மற்றும் பிற கனமான தங்க நகைகளை திருமணம் மற்றும் விழாக்களின் போது பொதுவாக அணிவர். காலம் மற்றும் பண்டிகைகளுக்கு ஏற்ப உடை மாறுகிறது. பெண்கள் பொதுவாக குஜராத்தி பாணி புடவை அணிவார்கள். ஆண்கள் குர்தாக்கள் மற்றும் சாதாரண உடைகள் (சட்டைகள் மற்றும் கால்சட்டை) ஆகியவற்றை அணிவர்.
ராஜ்கோட் பன்முக கலாச்சாரம் கொண்டது. குஜராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம், சிந்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகள் போசுபவர்களைக் காணலாம். இருப்பினும், குஜராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம் மட்டுமே நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. ராஜ்கோட் கத்தியவாரின் ஒரு பகுதியாகும். இதன் காரணமாக, ராஜ்கோட் மக்கள் கத்தியவாரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ராஜ்கோட் என்பது ரங்கிலு ராஜ்கோட் (રંગીલુ રાજકોટ) என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது, அதாவது "வண்ணமயமான ராஜ்கோட்" என்பது பொருளாகும். ராஜ்கோட் "சித்ரநாகிரி" (ஓவியங்களின் நகரம்) என்றும் அழைக்கப்படுகிறது. [23]
இலக்கியம் தொகு
பிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளை மொழிபெயர்த்தவரும், புகழ்பெற்ற மற்றும் மிகவும் மதிக்கப்படும் அறிஞரான மால்கம் பாஸ்லே ராஜ்கோட்டில் பிறந்தவராவார்.
குறிப்புகள் தொகு
- ↑ 1.0 1.1 "Statistics". Rajkot Municipal Corporation. http://www.rmc.gov.in/statictic.php.
- ↑ "Ward details". Rajkot Municipal Corporation. http://www.rmc.gov.in/ward.php.
- ↑ "Statistics". Rajkot Municipal Corporation. http://www.rmc.gov.in/statictic.php.
- ↑ "Rajkot Municipal Corporation Demographics". Census of India. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=539125.
- ↑ (Ahmedabad ranks 7th,Vadodara 9th ,surat 10th and Rajkot 34th)
- ↑ "Archived copy". http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/3455/8/08_chapter%204.pdf.
- ↑ Census of India பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2015.
- ↑ Cleanest cities in India
- ↑ 9.0 9.1 "City Mayors World's fastest growing urban areas (1)" பரணிடப்பட்டது 25 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Swachh Survekshan League 2020: Indore Tops The Chart, Again, Adjudged Cleanest City Of India For The Fourth Time In A Row | News". 1 January 2020. https://swachhindia.ndtv.com/swachh-survekshan-league-2020-indore-tops-the-chart-again-adjudged-cleanest-city-of-india-for-the-fourth-time-in-a-row-40680/.
- ↑ Talukdar, Moinak Mitra & Tapash. "The royal business class". The Economic Times. https://economictimes.indiatimes.com/starting-up/the-royal-business-class/articleshow/3473290.cms?from=mdr.
- ↑ Falling Rain Genomics, Inc – Rajkot பரணிடப்பட்டது 12 பெப்ரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Rajkot Geography பரணிடப்பட்டது 16 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Dewar, Robert E. and Wallis, James R; ‘Geographical patterning of interannual rainfall variability in the tropics and near tropics: An L-moments approach’; in Journal of Climate, 12; pp. 3457
- ↑ See Kane, R.P.; ‘Extreme of the ENSO Phenomenon and Indian Summer Monsoon Rainfall’; International Journal of Climatology, vol. 18 (1998), pp. 775-791
- ↑ Weatherbase of Rajkot பரணிடப்பட்டது 18 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Station: Rajkot (A) Climatological Table 1981–2010". India Meteorological Department. December 2016. pp. 651–652. https://imdpune.gov.in/library/public/1981-2010%20CLIM%20NORMALS%20%28STATWISE%29.pdf.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)". India Meteorological Department. December 2016. p. M60. https://imdpune.gov.in/library/public/EXTREMES%20OF%20TEMPERATURE%20and%20RAINFALL%20upto%202012.pdf.
- ↑ "Rajkot Climatological Table Period: 1981–2010". India Meteorological Department. http://www.imd.gov.in/section/climate/extreme/rajkot2.htm.
- ↑ "Census of World". http://citypopulation.de/world/Agglomerations.html.
- ↑ "Historical Census of India". http://www.populstat.info/Asia/indiat.htm.
- ↑ "Census of Rajkot". http://citypopulation.de/India-Gujarat.html.
- ↑ "Artists paint 17,000 square feet of flyover wall | Rajkot News - Times of India" (in en). Mar 5, 2017. https://timesofindia.indiatimes.com/city/rajkot/artists-paint-17000-sq-ft-of-flyover-wall/articleshow/57470703.cms.