போடாட் மாவட்டம்
போடாட் மாவட்டம் (Botad District), (குஜராத்தி): બોટાદ જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று.[1]. இம்மாவட்டம் ஆகஸ்டு 15, 2013இல் புதிதாகத் துவக்கப்பட்டது.[2].[3].[4]
போடாட் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
நிறுவிய நாள் | 15 ஆகஸ்டு 2013 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
இணையதளம் | https://botad.nic.in |

இம்மாவட்ட தலைமையகம் போடாட் நகராகும். சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று. பவநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய போடாட் மாவட்டம் தொடங்கப்பட்டது. இதன் பரப்பளவு 2,564 சதுர கிலோ மீட்டர். மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 255 நபர்கள். இம்மாவட்ட மக்கட்தொகை 6,52,556 ஆகும்.
வருவாய் வட்டங்கள் தொகு
2011-ஆம் கணக்கெடுப்பின் ப்டி, 2564 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 6,52,000 ஆகும். இம்மாவட்டம் 190 கிராமங்கள் கொண்டது. சராசரி எழுத்தறிவு 67.63% ஆகும்.
போடாட் மாவட்டம் நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[5]
- போடாட் வட்டம்[6]
- கதாதா வட்டம்
- பார்வலா வட்டம்
- ராண்பூர் வட்டம்
மேற்கோள்கள் தொகு
- ↑ http://goidirectory.nic.in/district_categories1.php?ou=GJ
- ↑ குஜராத்தின் 30வது மாவட்டமாக போடாட் மாவட்டம் உருவானது
- ↑ http://deshgujarat.com/2013/08/13/maps-of-gujarats-new-7-districts-and-changes-in-existing-districts/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Xoa50Ujs?url=http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/7-new-districts-to-start-functioning-from-Independence-Day/articleshow/21821642.cms?referral=PM.
- ↑ போடாட் மாவட்ட வரைபடம்
- ↑ போடாட் வட்டம்