போட்டாத்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
(போடாட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போட்டாத் (Botad) (குசராத்தி: બોટાદ) இந்தியா, குஜராத் மாநிலத்தின், போட்டாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். போட்டாத், அகமதாபாத்திலிருந்து 170 கி. மீ., தொலைவிலும், சுரேந்திரநகரிலிருந்து 90 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, போட்டாத் நகர மக்கள் தொகை 1,30,302 ஆக உள்ளது.

போட்டாத்
போட்டாத்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்போடாட் மாவட்டம்
ஏற்றம்
70 m (230 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,30,302
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
364710

சௌராஷ்டிர தீபகற்பத்திற்கு செல்லும் நுழைவு வாயிலாக போட்டாத் நகரம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, போட்டாத் நகர மக்கள் தொகை 1,30,302 (ஆண்கள் 67,778 மற்றும் பெண்கள் 62,524). எழுத்தறிவு பெற்றவர்கள் 94,563 (ஆண்கள் 53,275 மற்றும் பெண்கள் 41,288). எழுத்தறிவு விகிதம் 83.21% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,654 ஆக உள்ளனர்.[1]

பொருளாதாரம்

தொகு

பருத்தி வேளாண்மை, வைரங்களுக்கு பட்டைத் தீட்டல் முக்கிய தொழில்களாகும்.

போக்குவரத்து வசதிகள்

தொகு

தொடருந்து இருப்புப் பாதைகள், சாலைகள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Nikunj, Rojesara. "Botad According To Census-2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
  2. Mandaliya, Reeten. "Railway Junction Timing". Reeten Mandaliya.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டாத்&oldid=1892332" இலிருந்து மீள்விக்கப்பட்டது