குஜராத் நிலநடுக்கம் 2001

இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

2001 குஜராத் நிலநடுக்கம் (2001 Gujarat earthquake), 26 சனவரி 2001 அன்று, இந்தியாவின் 52ஆவது குடியரசு நாளன்று, குசராத்து மாநிலத்தில், காலை 8.46 மணியளவில், இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், பசாவ் வருவாய் வட்டத்தின் சோபாரி கிராமத்தில், நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.[5] 7. 7 ரிக்டர் அளவில் பதிவான இந்நில நடுக்கத்தினால், கட்ச் மாவட்டத்தில் 13,805 முதல் 20,023 மக்கள் வரை பலியாயினர். 1,67,000 மக்கள் படுகாயம் அடைந்தனர். 4,00,000 இலட்சம் வீடுகள் தரைமட்டம் ஆயின.[6]

2001 குஜராத் நிலநடுக்கம்
குஜராத் நிலநடுக்கம் 2001 is located in இந்தியா
குஜராத் நிலநடுக்கம் 2001
நாள்26 சனவரி 2001 (2001-01-26)
தொடக்க நேரம்03:16 UTC
நிலநடுக்க அளவு7.7 ரிக்கேடர்[1]
ஆழம்16 கிலோமீட்டர்கள் (10 mi)
நிலநடுக்க மையம்23°25′08″N 70°13′55″E / 23.419°N 70.232°E / 23.419; 70.232[2]
வகைOblique-slip
பாதிக்கப்பட்ட பகுதிகள்இந்தியா
அதிகபட்ச செறிவுX (Extreme)
உயிரிழப்புகள்உயிரிழப்பு 13,805–20,023 [3][4]
~ காயமடைந்தோர் 166,800 [4]
2001 நில நடுக்க நினைவுத் தோட்டம், புஜ், குசராத்து

சேதங்கள்

தொகு

கட்ச் மாவட்டத்தில் மட்டும் 12,300 மக்கள் பலியாயினர். நில நடுக்க மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரம் மற்றும் பசாவ், அஞ்சர் பகுதியிலிருந்த கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டம் ஆயின.[7]

இப்பகுதியின் நாற்பது விழுக்காடு வீடுகள், எட்டு பள்ளிக் கட்டிடங்கள், இரண்டு மருத்துவ மனைகள் மற்றும் சுவாமி நாராயாணன் மந்திர் (புஜ்), மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பிராக் அரண்மனை, ஐனா அரண்மனை முற்றிலும் சேதமடைந்தது.

அகமதாபாத் நகரத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் கடும் சேதமடைந்து, பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மொத்த சேதத்தின் மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. M7.7 Bhuj " Republic Day " Earthquake, 2001
  2. NGDC. "Comments for the Significant Earthquake". பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
  3. Ray, Joydeep (16 April 2004). "Gujarat to set up quake memorial in Bhuj". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/economy-policy/gujarat-to-set-up-quake-memorial-in-bhuj-104041601028_1.html. 
  4. 4.0 4.1 USGS (4 September 2009), PAGER-CAT Earthquake Catalog, Version 2008_06.1, United States Geological Survey, archived from the original on 28 மார்ச் 2015, பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2016 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  5. Gupta, HARSH K., et al. "Bhuj earthquake of 26 January, 2001." JOURNAL-GEOLOGICAL SOCIETY OF INDIA 57.3 (2001): 275-278.
  6. "Preliminary Earthquake Report". USGS Earthquake Hazards Program. Archived from the original on 2007-11-20. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  7. "Interdisciplinary Observations on The January 2001 Bhuj, Gujarat Earthquake" (PDF). Archived from the original (PDF) on 2009-02-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
2001 Gujarat earthquake
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_நிலநடுக்கம்_2001&oldid=3932369" இலிருந்து மீள்விக்கப்பட்டது