புஜ் (Bhuj), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். புஜ் நகரத்தை மன்னர் ராவ் ஹமிர்ஜி என்பவர் 1510ஆண்டில் நிறுவினார். சுவாமி நாராயண் மரபினர் முதன்முதலில் கட்டிய சுவாமி நாராயண் கோயில் 1822இல் புஜ் நகரத்தில்தான் உள்ளது. கைவினைப் பொருட்களுக்கான பந்தினி என்ற சுங்கிடி சேலைகள் (bandhni) (tie and Dye), தோல் வேலைகளுக்கு பெயர் பெற்றது.

புஜ்
நகரம்
பிராக் மகால், புஜ்
பிராக் மகால், புஜ்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்கட்ச் மாவட்டம்
நகராட்சிபுஜ் நகராட்சி
தோற்றுவித்தவர்மன்னர் ராவ் ஹமிர்ஜி
அரசு
 • வகைநகராட்சி
ஏற்றம்110 m (360 ft)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்2,89,429
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்370001
தொலைபேசி குறியிடு எண்2832
வாகனப் பதிவுGJ-12
பாலின விகிதம்0.92 /
source:Census of India[1]
சுவாமி நாராயணன் கோயில், புஜ்
சிந்தி மக்களின் தோல் காலணி

நில நடுக்கங்கள் தொகு

சூலை 21, 1956இல் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் சொத்துகளும் அழிந்தன[2]. மீண்டும் இந்தியக் குடியரசு நாளான டிசம்பர் 26, 2001 காலையில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், புஜ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் 20,000 பேர் உயிர் இழந்தனர், 1,50,000 பேர் படுகாயம் அடைந்தனர், மேலும் பல கட்டிடங்கள் இடிந்து பெரும் பொருள் இழப்புகளையும் சந்தித்தது. [3].[4][5]

போக்குவரத்து வசதிகள் தொகு

புஜ் இரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள், புஜ் நகரத்தை அகமதாபாத், மும்பை, காந்திநகர், புதுதில்லி, பெங்களூரு, புனே, மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. மாநில பேரூந்துகள் குஜராத் மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2008ஆம் ஆண்டு கணக்குப்படி புஜ் பகுதியின் மக்கட்தொகை 136,429. அதில் ஆண்கள் 71,056 ஆகவும், பெண்கள் 65,373 ஆக உள்ளனர். மொத்த வீடுகள் எண்ணிக்கை 27,999ஆக உள்ளது..[1]


தட்பவெப்ப நிலைத் தகவல், புஜ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32
(90)
34
(93)
43
(109)
45
(113)
41
(106)
42
(108)
40
(104)
38
(100)
40
(104)
41
(106)
40
(104)
35
(95)
45
(113)
உயர் சராசரி °C (°F) 26
(79)
28
(82)
33
(91)
37
(99)
38
(100)
36
(97)
32
(90)
31
(88)
33
(91)
35
(95)
32
(90)
27
(81)
32.3
(90.2)
தாழ் சராசரி °C (°F) 11
(52)
13
(55)
17
(63)
21
(70)
25
(77)
26
(79)
25
(77)
24
(75)
23
(73)
21
(70)
16
(61)
12
(54)
19.5
(67.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) -1
(30)
-1
(30)
8
(46)
13
(55)
16
(61)
16
(61)
19
(66)
19
(66)
17
(63)
12
(54)
7
(45)
3
(37)
−1
(30)
பொழிவு mm (inches) 0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
30
(1.18)
160
(6.3)
70
(2.76)
40
(1.57)
0
(0)
0
(0)
0
(0)
300
(11.81)
ஈரப்பதம் 54 52 53 56 60 70 76 78 78 72 52 55 63
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 in) 0 0 0 0 0 2 9 4 3 0 0 0 18
ஆதாரம்: Weatherbase[6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜ்&oldid=3564491" இருந்து மீள்விக்கப்பட்டது