பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்ச (Basil Rajapaksa; சிங்களம்: බැසිල් රාජපක්ෂ; பிறப்பு: 27 ஏப்ரல் 1951) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2021 ஏப்ரல் 8 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை நிதி அமைச்சராகவும் உள்ளார். 2007 முதல் 2015 வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2005-2010 காலப்பகுதியில் இவர் அன்றைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார். 2007 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010-2015 காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பணியாற்றினார்.[2]

பசில் ராசபக்ச
Basil Rajapaksa
Basil Rajapaksa.JPG
நிதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 சூலை 2021
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் மகிந்த ராசபக்ச
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
பிரதமர் தி. மு. ஜயரத்ன
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 சூலை 2021
முன்னவர் ஜயந்த கெத்தகொட
பதவியில்
19 செப்டம்பர் 2007 – 9 பெப்ரவரி 2010
முன்னவர் முகமது இசுமைல் அன்வர் இசுமைல்
கம்பகா மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015
பெரும்பான்மை 425,861 விருப்பு வாக்குகள்
தனிநபர் தகவல்
பிறப்பு பசில் ரோகன ராசபக்ச
27 ஏப்ரல் 1952 (1952-04-27) (அகவை 69)
இலங்கை
குடியுரிமை இலங்கையர்,
அமெரிக்கர்[1]
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை பொதுசன முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) புஷ்பா ராசபக்ச
பிள்ளைகள் தேஜனி, பிமல்கா, அசந்தா
படித்த கல்வி நிறுவனங்கள் இசிபத்தான வித்தியாலயம்
ஆனந்தா கல்லூரி
இணையம் basilrajapaksa.com

பசில் ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையுடன் ஐக்கிய அமெரிக்க குடியுரிமையும் கொண்டுள்ளார்.[3]

கைதுதொகு

இவரின் அண்ணன் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அந்த நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின் நேற்று[எப்போது?] இலங்கைக்கு வந்த இவரை அந்த நாடு காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கிற்காக கைது செய்தனர்.[4]

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசில்_ராஜபக்ச&oldid=3273472" இருந்து மீள்விக்கப்பட்டது