ரவி கருணாநாயக்க
ரவி கருணாநாயக்க என அழைக்கப்படும் ரவீந்திரா சந்திரேசு கருணாநாயக்க (Ravindra Sandresh Karunanayake, நா.உ., பிறப்பு: 19 பெப்ரவரி 1963) இலங்கை அரசியல்வாதியும், பட்டயக் கணக்காளரும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் இவர் நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ரவி கருணாநாயக்க Ravi Karunanayake | |
---|---|
![]() | |
(2015) | |
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 22 மே 2017 – 10 ஆகத்து 2017 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | மங்கள சமரவீர |
நிதி அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 22 மே 2017 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | மகிந்த ராசபக்ச |
பின்வந்தவர் | மங்கள சமரவீர |
வர்த்தக, மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 12 திசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1994 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 19, 1963 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி (2000 - இன்று) சுயேட்சை (1998 - 1999) சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (1989 - 1998) |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய தேசிய முன்னணி (2001 - இன்று) |
வாழ்க்கை துணைவர்(கள்) | மேளா கருணாரத்தின |
பிள்ளைகள் | ஒனெல்லா, செனெல்லா, மினில்லா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | மேலாண்மைக் கணக்கியல் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இணையம் | Official Website |
இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 10வது நாடாளுமன்றம் (1994), 11வது நாடாளுமன்றம் (2000), 12வது நாடாளுமன்றம் (2001), 13வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]
ரவி கருணாநாயக்கா கொள்ளுப்பிட்டி புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு தொகு
1291/6, ராஜமல்வத்தை வீதி, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவர்,
மேற்கோள்கள் தொகு
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in.