ரணசிங்க பிரேமதாசா

சிறீ லங்காபிமான்ய ரணசிங்க பிரேமதாசா (Ranasinghe Premadasa; சிங்களம்: රණසිංහ ප්‍රේමදාස; 23 சூன் 1924 – 1 மே 1993)[1] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1989 சனவரி 2 முதல் 1993 மே 1 வரை இலங்கையின் 3-வது (நிறைவேற்றதிகாரத்துடன் 2-வது) அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[2] முன்னதாக இவர் 1978 முதல் 1989 வரை ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.[3] 1986 இல் இவருக்கு சிறீ லங்காபிமான்ய என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா வழங்கிக் கௌரவித்தார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இப்பட்டம் வழங்கப்பட்டது.[4] பிரேமதாசா 1993 மே 1 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற மே நாள் பேரணி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார்.[5][6] இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாசா
Ranasinghe Premadasa
3-ஆவது இலங்கை அரசுத்தலைவர்
பதவியில்
2 சனவரி 1989 – 1 மே 1993
பிரதமர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
முன்னையவர்ஜே. ஆர். ஜெயவர்தனா
பின்னவர்டி. பி. விஜயதுங்கா
8-ஆவது இலங்கைப் பிரதமர்
பதவியில்
6 பெப்ரவரி 1978 – 2 சனவரி 1989
குடியரசுத் தலைவர்ஜே. ஆர். ஜெயவர்தனா
முன்னையவர்ஜே. ஆர். ஜெயவர்த்னா
பின்னவர்டி. பி. விஜயதுங்கா
இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு மத்தி
பதவியில்
22 மார்ச் 1965 – 2 சனவரி 1989
முன்னையவர்ராசிக் பரீத்
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
பதவியில்
19 மார்ச் 1960 – 20 சூலை 1960
முன்னையவர்எம். எசு. தெமிசு
பின்னவர்ராசிக் பரீத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-06-23)23 சூன் 1924
கொழும்பு, இலங்கை
இறப்பு1 மே 1993(1993-05-01) (அகவை 68)
கொழும்பு, இலங்கை
Manner of deathபடுகொலை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்ஏமா பிரேமதாசா
பிள்ளைகள்சஜித், துலாஞ்சலி
வாழிடம்சுச்சரித்தா
முன்னாள் கல்லூரிபுனித யோசப் கல்லூரி, கொழும்பு
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. "Ranasinghe Premadasa DOB" இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924082024/http://www.priu.gov.lk/PrimeMinister/formerprimeministers.html. 
  2. "Former Presidents – Presidential Secretariat of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  3. "Parliament of Sri Lanka – Prime Ministers". இலங்கை நாடாளுமன்றம். 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  4. "National Honours – Presidential Secretariat of Sri Lanka" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. Liberation Tigers of Tamil Eelam Backgrounder பரணிடப்பட்டது 26 மே 2010 at the வந்தவழி இயந்திரம் Council on Foreign Relations – 21 July 2008
  6. Gargan, Edward (2 May 1993). "Suicide Bomber Kills President of Sri Lanka". The New York Times. https://www.nytimes.com/1993/05/02/world/suicide-bomber-kills-president-of-sri-lanka.html?pagewanted=1. 
அரசு பதவிகள்
முன்னர் இலங்கை சனாதிபதி
1989–1993
பின்னர்
முன்னர் இலங்கை பிரதமர்
1978–1989
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரணசிங்க_பிரேமதாசா&oldid=4082946" இலிருந்து மீள்விக்கப்பட்டது