சிறீ லங்காபிமான்ய
சிறீ லங்காபிமான்ய (Sri Lankabhimanya) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். சிறீ லங்காபிமான்ய என்னும் சொல் சிங்கள மொழியில் "இலங்கையின் பெருமை" என்னும் பொருள் கொண்டது. நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] இந்த கௌரவத்தை ஒரே காலத்தில் ஐந்து இலங்கையர் மட்டுமே பெற்றிருக்க முடியும். அத்துடன் இக்கௌரவத்தை இறப்புக்குப் பின்னரும் வழங்க முடியும்.[2] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் சிறீ லங்காபிமான்ய என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர் (எ.கா: சிறீ லங்காபிமான்ய லக்ஷ்மன் கதிர்காமர்).
விருது பெற்றோர்
தொகு1986 முதல் சிறீ லங்காபிமான்ய கௌரவம் பெற்றோர்:[3]
1986
தொகு- ரணசிங்க பிரேமதாச - இலங்கையின் மூன்றாவது தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதி.
1993
தொகு- டிங்கிரி பண்டா விஜேதுங்க - இலங்கையின் நான்காவது தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதி.
2005
தொகு- சர். ஆர்தர் சி. கிளார்க் - அறிவியற் புனைகதை எழுத்தாளர்.
- லக்ஷ்மன் கதிர்காமர்
2007
தொகு- ஏ. டி. ஆரியரத்ன
- லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் - திரைப்பட இயக்குனர்
- கிறிஸ்தோபர் வீரமந்திரி - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
மேற்கோள்கள்
தொகு- ↑ Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. p. 254.
- ↑ "Sri Lankabhimanya award for two distinguished Sri Lankans". Island. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Awards". Presidential Secretariat. Archived from the original on 29 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)