இலங்கை சனநாயகக் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை சனநாயகக் கட்சி (Ceylon Democratic Party) அல்லது லங்கா பிரஜாதந்திரவாதி பக்சய (Lanka Prajathanthravadi Pakshaya, LPP) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இக்கட்சி டாக்டர் டபிள்யூ. தகநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1960 தேர்தல்களில் இக்கட்சி மகாஜன எக்சத் பெரமுன கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 4 இடங்களைக் கைப்பற்றியது. சூலை 1960 தேர்தல்களில் இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றியது.
இலங்கை ஜனநாயகக் கட்சி Ceylon Democratic Party | |
---|---|
Lanka Prajathanthravadi Pakshaya | |
நிறுவனர் | டபிள்யூ. தகநாயக்கா |
இணைந்தது | இலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி |
இலங்கை அரசியல் |
1960 தேர்தல்களுக்கு முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியுடனான கூட்டில் பிளவு ஏற்பட்டது. இத்தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சி ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது. தேர்தலுக்குப் பின்னர் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளித்தது. சிறிது காலத்தில் இக்கட்சி கலைக்கப்பட்டு இலங்கை சுதந்திர சோசலிசக் கட்சியுடன் இணைந்தது. இசுசோக பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தது.