தம்பையா ஏகாம்பரம்

தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ehambaram, 12 அக்டோபர் 1913.[1] – 22 மார்ச் 1961) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை நகரசபைத் தலைவரும் ஆவார்.[2]

ரி. ஏகாம்பரம்
T. Ehambaram

நா.உ.
T.Ehambaram.jpg
மூதூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1960 – 22 மார்ச் 1961
முன்னவர் எம். ஈ. எச். முகம்மது அலி
பின்வந்தவர் எம். ஈ. எச். முகம்மது அலி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 12, 1913(1913-10-12)
இறப்பு மார்ச்சு 22, 1961(1961-03-22) (அகவை 47)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
இனம் இலங்கைத் தமிழர்

திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.[5]

தேர்தல் வரலாறுதொகு

த. ஏகாம்பரத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1960 மார்ச் நாடாளுமன்றம் மூதூர் இதக 10,685[3] தேர்வு
1960 சூலை நாடாளுமன்றம் மூதூர் இதக 13,304[4] தேர்வு

மறைவுதொகு

1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Ahambaram, Thambiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 "மூதூர் எம்.பி. திடீர் மரணம்". யாழ்ப்பாணம்: ஈழநாடு. 23 மார்ச் 1961. 
  3. 3.0 3.1 "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-02-06 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-02-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூலை 1997). ""Golden Lord" A Thangathurai: An Eastern Man for All Seasons!". Tamil Times XVI (7): 15-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07. பார்த்த நாள்: 2015-02-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பையா_ஏகாம்பரம்&oldid=3557106" இருந்து மீள்விக்கப்பட்டது