கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு
கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு (Gomarankadawala Divisional Secretariat) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் பதவிசிறீபுர பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி அனுராதபுரம் மாவட்டமும், கிழக்கில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 288 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு Gomarankadawala Divisional Secretariat | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | திருகோணமலை |
அரசு | |
• பிரதேச செயலாளர் | ருவான் ஜெயசுந்தர |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 31026 |
கிராமசேவகர் பிரிவுகள் | பிரதேசசபை 10 கிராமசேவகர் பிரிவுகளையும், 50 கிராமங்களையும் கொண்டுள்ளது. |
இணையதளம் | www.gomarankadawala.ds.gov.lk |
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 7,339 ஆகும். எறத்தாழ முழுவதும் சிங்களவர்களையே கொண்ட இப்பிரிவில், ஒரு முசுலிமும், 25 இலங்கைத் தமிழரும், 7,313 சிங்களவரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 25 பேர்.