ஏப்ரல் 2008
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 2008, 2008 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 13 இல் தொடங்கி மே 13 இல் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகு- ஏப்ரல் 7 - தெலுங்கு புத்தாண்டு
- ஏப்ரல் 13 - இந்து, சிங்கள புத்தாண்டு
- ஏப்ரல் 14 - இராம நவமி
- ஏப்ரல் 18 - மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 20 - சித்திரா பௌர்ணமி
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஏப்ரல் 28:
- பத்து செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி9 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. (பிபிசி)
- சீனாவின் ஷான்டொங் மாகாணத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 26: மொரோக்கோவின் கசபிளாங்கா நகரில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியதில் 55 பேர் கொல்லப்பட்டனர். (ரோய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 23: இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து முறையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக்கோரும் தீர்மானமொன்றை தமிழக சட்டசபை நிறைவேற்றியது. (தினக்குரல்)
- ஏப்ரல் 19: ரஷ்யாவின் சோயூஸ் டிஎம்ஏ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் கசக்ஸ்தானில் திட்டமிட்டதிலும் விட 475 கிமீ தூரத்தில் உள்ள ஆர்க்காலிக் என்ற இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. (யாஹூ செய்திகள்)
- ஏப்ரல் 16:
- மலேசிய அரசாங்கம் அந்நாட்டின் புகழ் பெற்ற தமிழ் நாளிதழான மக்கள் ஓசையை தடை செய்தது. (தமிழ்முரசு)
- குஜராத்தில் பேருந்து ஒன்று நர்மதா ஆற்றின் கால்வாயில் வீழ்ந்ததில் 40 பேர், பெரும்பாலும் சிறுவர்கள், இறந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 15: கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 83 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- ஏப்ரல் 14:
- 43 ஆண்டுகளின் பின்னர் வங்காள தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. (பிபிசி)
- நேபாளத்தில் 9 ஆண்டுக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள மாவோயிஸ்டுகள் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள 118 இடங்களில் 63 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றனர். (பிபிசி)
- ஏப்ரல் 12: தெற்கு ஈரானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 11: கியூபாவில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைத் தமதாக்கும் வீட்டுப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வர் என அந்நாட்டதிபர் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார். (யுஎஸ்ஏ டுடே)
- ஏப்ரல் 10: 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: பெய்ஜிங் நகரில் இடம்பெறவிருக்கும் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்றம் வாக்களித்தது. (டொச்செ வெலா)
- ஏப்ரல் 9: நேபாளத்தில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கலவரத்தில் காவற்துறையினர் சுட்டதில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 8:
- ரஷ்யாவின் சோயூஸ் டீஎம்ஏ விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. முதன் முதலில் ஒரு கொரிய விண்வெளி வீரர் விண்ணுக்கு செல்வது இதுவே முதற் தடவையாகும். (பிபிசி)
- ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. (பிபிசி)
- ஏப்ரல் 7: சீனாவும் நியூசிலாந்தும் சுயாதீன வர்த்தக உடன்பாட்டில் கைச்சாத்திட்டன. வளர்ச்சி அடைந்த நாடொன்றுடன் முதற் தடவையாக சீனா சுயாதீன வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- ஏப்ரல் 5: ஒகேனக்கல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் கர்நாடகத் தேர்தலுக்குப் பின் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகவும் முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார். (புதினம்)
- ஏப்ரல் 4:
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரையுலகினர் உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (வீரகேசரி)
- இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவரும் கட்சியின் பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவை அக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்தது. (வீரகேசரி)
- ஏப்ரல் 3:
- ஐரோப்பிய விண்வெளி மையத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜூல்ஸ் வேர்ண் என்ற ஆளில்லா சரக்கு விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. (ஈஎஸ்ஏ)
- சுரினாமில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அனைத்து 19 பயணிகளும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 2: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல தமிழர்களின் நிலைகள் தாக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பேருந்துகள் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. (தமிழ்முரசு)]
- ஏப்ரல் 1: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவைப் பாதிக்கும் எச்செயலிலும் ஈடுபட வேண்டாம் என இந்தியா தலாய் லாமாவுக்கு அறிவுறுத்தியது. (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஏப்ரல் 27: மணலாறு இராணுவ முகாம்களின் மீது வான்புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர். ஒரு படைவீரர் காயமடைந்தார். (புளூம்பேர்க்)
- ஏப்ரல் 25:
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மடு அன்னையின் திருச்சொரூபம் அண்மையில் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து தேவாலயத்துக்கு இலங்கைப் படையினர் படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடன் சென்றனர். (புதினம்)
- ஏப்ரல் 23: கிளாலி முதல் முகமாலை வரை 7 கிமீ முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 18 பேர் இறந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 38 பேர் தமது தரப்பில் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (புதினம்), (ஏபிசி)
- ஏப்ரல் 20: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள் வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்), (புதினம்)
- ஏப்ரல் 17: முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பு மீது இலங்கை வான் படையின் எஃப்-7 ரக வானூர்திகள் நான்கு நடத்திய குண்டுத்தாக்குதலில் 15 வயது பள்ளி மாணவி கொல்லப்பட்டு வேறொருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஏப்ரல் 6: கம்பகா மாவட்டம், வெலிவெரியாவில் இடம்பெற்ற சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் குண்டு வெடித்ததில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- ஏப்ரல் 4: மன்னார், மடு மாதா திருவுருவச் சிலை அங்கிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். (தி ஐலண்ட்)
- ஏப்ரல் 3: மன்னார், மடு தேவாலயத்தின் மீது இலங்கைப் படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களால், அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். (புதினம்)
- ஏப்ரல் 1:
- திருகோணமலை, மூதூரில் 2006 ஆம் ஆண்டில் 17 தமிழ் நிவாரணப் பணியாளர்களின் படுகொலைகளை பாதுகாப்புப்படையினரே நிகழ்த்தினர் என உள்ளூர் மனித உரிமைகள் குழு ஒன்று அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. (பிபிசி)
- பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் இலங்கைப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டு 63 படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- இரத்தினபுரி, குருவிட்ட என்ற இடத்தில் நிகழ்ந்த சிறை உடைப்பு முயற்சியில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனார். (புதினம்)
- மன்னார் இத்திக்கண்டல் பகுதியில் இலங்கைப் படையினர் 15-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 25-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்