செப்டம்பர் 2014
<< | செப்டம்பர் 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
செப்டம்பர் 2014 (September 2014), 2014 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமையில் துவங்கி 30 நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாதி மாதம் செப்டம்பர் 17, புதன்கிழமை தொடங்கி, அக்டோபர் 17 வெள்ளிக்கிழமையில் முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் துல்கஃதா மாதம் செப்டம்பர் 25 வியாழக்கிழமை முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- செப்டம்பர் 30:
- செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பிணை மனு விசாரணை அக்டோபர் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. (பிபிசி)
- பர்மிய கடும்போக்கு தேரர், அசின் விராத்து, இலங்கையின் பௌத்த இயக்கமான பொது பல சேனா இயக்கத்தினரும் இணைந்து, இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக போராடப் போவதாக கொழும்பில் அறிவித்தனர். (ஃபொக்சு)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: அமெரிக்காவின் டாலசு மாநிலத்தில் எபோலா நோயுடன் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். (ஏபி)
- செப்டம்பர் 29:
- உக்ரைன் தோனெத்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (சிபிசி)
- ஆப்கானித்தான் அரசுத்தலைவராக அசரஃப் கனி அகமத்சய் பதவியேற்றார். (பிபிசி)
- செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். (பிபிசி)
- செப்டம்பர் 28:
- இசுலாமிய தேச கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராகத் தாம் பதில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அல் நுஸ்ரா முன்னணி எச்சரித்துள்ளது. (அல்ஜசீரா)
- பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுவதாகக் குறறம் சாட்டப்பட்ட அசின் விராத்து என்ற பௌத்த மதகுரு இலங்கையில் ஜிகாத் இயக்கத்துக்கு எதிராகப் போராடும் பொது பல சேனா குழுவிற்கு ஆதரவளிப்பதாகக் கொழும்பில் தெரிவித்துள்ளார். (அல்ஜசீரா)
- செப்டம்பர் 27:
- சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. செயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. (பிபிசி)
- சப்பானின் ஒன்டாக்கி எரிமலை வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது. (இன்டிபென்டென்ட்)
- ஒக்லகோமாவில் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட ஒருவன் பலசரக்குக் கடை ஒன்றினுள் நுழைந்து, இசுலாமுக்கு மதம் மாற சம்மதிக்காத பெண் ஒருவரின் தலையைத் துண்டித்து, மேலும் இருவரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினான். (பொக்சு)
- ஆங்காங்கில் சனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. (சீஎனென்)
- எசுப்பானியாவின் [[காத்தலோனியா பிராந்தியத்திற்கு சுயாட்சி கோரும் பொதுவாக்கெடுப்பு நவம்பர் 9]] இடம்பெறு என காததலோனியப் பிராந்திய அரசுத்தலைவர் அறிவித்துள்ளார். (ஏபி)
- செப்டம்பர் 26:
- சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 50 பேர் கொல்லப்பட்டனர். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களை நடத்துவதற்கி ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 524/43 வாக்குகளால் ஒப்புதல் அளித்தது. (பிபிசி)
- ஆப்கானித்தானின் காஸ்னி மாகாணத்தில் அச்ரிஸ்தான் மாவட்டம் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. (பிபிசி)
- ஆஸ்திரேலியாவுடனான ஒரு சட்டப் பிரச்சினையை அடுத்து பசிபிக்கின் மிகச்சிறிய நாடான நவூருவில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. (ஏபிசி)
- காசா கரையில் ஒருமைப்பாட்டு அரசு ஒன்றை அமைக்க ஃபத்தா, ஹமாஸ் அமைப்புகள் முடிவெடுத்தன. (யூரோநியூஸ்)
- செப்டம்பர் 25:
- சிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய தேசம் மற்றும் அரசுத்தலைவர் அல்-அசத்தின் படைகளுக்கெதிரான போரில் பல சிரியக் கிளர்ச்சிப் படையினர் அணி திரள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. (சீஎனென்)
- அலாஸ்காவில் 6.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏங்கரெஜ் நகரில் சிறு சேதம் ஏற்பட்டது. (அலாஸ்கா டிஸ்பாட்ச் நியூஸ்)
- செப்டம்பர் 24:
- வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம், மண்சரிவினால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை)
- இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது. (ராய்ட்டர்சு)
- அல்சீரியாவின் ஜிகாட் அமைப்பான ஜுந்த் அல்-கிலாஃபா பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் காட்சியை காணொளியாக வெளியிட்டது. (பிபிசி)
- செப்டம்பர் 23:
- சிரியாவில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் நேச நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்தன. (பிபிசி)
- அரபு-இசுரேல் முரண்பாடு: தனது வான்பரப்பினுள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டி இசுரேல் சிரியப் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. (ஏபி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயினால் பாதிக்கப்பட்டவர்களத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை லைபீரியா அரசும், உலக சுகாதார அமைப்பும் ஆரம்பித்தன. (வாசிங்டன் போஸ்ட்)
- சிரியாவின் அல் நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு யூசுப் அல்-தூர்க்கி கொல்லப்பட்டார் என அக்குழு அறிவித்துள்ளது. (சீஎனென்)
- செப்டம்பர் 22:
- பிஜி நாடாளுமன்றத் தேர்தல்களில் வொரேச் பைன்மராமா தலைமையிலான பிஜி முதற் கட்சி 50 இடங்களில் 32 இடங்களைக் கைப்பற்றியது. (ஏபி)
- நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. (பிபிசி)
- பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவையின் சோதனை ஓட்டம் இடம்பெற்றது. 24 ஆண்டுகளின் பின்னர் தொடருந்து யாழ்ப்பாணம் வந்தது. (டெய்லிமிரர்)
- செப்டம்பர் 21:
- யெமனில் சியா ஹௌத்தி போராளிக்குழுவிற்கும் அரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. பிரதமர் முகம்மது பசிந்துவா பதவி துறந்தார். புதிய பிரதமரை ஔத்தி போராளிகள் மூன்று நாட்களுக்குள் அறிவிப்பர். (பிபிசி)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கான குர்து மக்கள் துருக்கி சென்றனர். (ஏஎஃப்பி)
- பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் போராளிகள் எப்-16 வான்படை போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர். (பிளேஸ்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: சியேரா லியோனியில் மூன்று நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. (பிபிசி)
- ஆப்கானித்தானில் அரசுத்தலைமைக்கான வேட்பாளர்கள் அசரஃப் கனி அகமத்சய், அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, கனி அரசுத்தலைவராகவும், அப்துல்லா தலைமை அதிகாரியாகவும் பதவியேற்பர். (யூரோநியூஸ்)
- ஊவா மாகாணசபைத் தேர்தல், 2014: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மாகாண சபையைக் கைப்பற்றியது. (பிபிசி)
- செப்டம்பர் 20:
- துருக்கியுடனான எல்லையில் கோபானி நகருக்கு அண்மையில் குர்தியர் வாழும் சுமார் 60 கிராமங்களை இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். (ஏபிசி)
- யெமனில் இராணுவத்தினருக்கும், ஔத்திப் போராளிகளுக்கும் இடையே மூன்றாம் நாளாக சண்டை இடம்பெற்றது. 123 பேர் கொல்லப்பட்டனர், பல நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (அல்ஜசீரா)
- நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. (ஏபி)
- இலங்கையில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெற்றது. (தினகரன்)
- செப்டம்பர் 19:
- பிலிப்பீன்சில் லூசோன் நகரில் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து 30,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். (டைம்)
- இந்தோனேசியாவின் சிலாமெட் எரிமலை வெடித்தது. (டைம்)
- மலேசியாவில் இலத்திரனியல் தொழிற்துறையில் பணியாற்றும் வெளிநாட்டினரில் மூன்றின் ஒரு பங்கினர் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (கார்டியன்)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரான்சு வான்தாக்குதல்களை நடத்தியது. (பொக்சு)
- இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014: இசுக்கொட்லாந்து விடுதலைக்கு எதிராக (55.3%) வாக்களித்தது. (நியூயோர்க் டைம்சு)
- பிரதமர் டேவிட் கேமரன் ஸ்கொட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். (பிபிசி)
- இலங்கையின் வடக்கே வேலணையில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. (பிபிசி)
- ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அல்கெசு சால்மண்ட் பதவி துறந்தார். (பிபிசி)
- சீன டென்னிசு வீராங்கனை லீ நா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஏபி)
- தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. (ஏபி)
- செப்டம்பர் 18:
- பிரித்தானிய செய்தியாளர் ஜோன் கான்ட்லி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்யும் காணொளியை இசுலாமிய தேச தீவிரவாதிகள் வெளியிட்டனர். (ராய்ட்டர்சு)
- சிரியாவில் போரிடும் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிடுவதற்குப் படையினரை அனுப்ப அரசுத்தலைவர் பராக் ஒபாமா எடுத்த முடிவுக்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்தது. (வாசிங்டன் எக்சாமினர்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பரவலைத் தடுப்பதற்காக ஐநா செயலர் பான் கி மூன் அவசரத் திட்டத்தை அறிவித்தார். (புளூம்பர்க்)
- ஆத்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பேன் நகர்களில் காவல்துறையினர் நடத்திய திடீர் முற்றுகைகளில் இசுலாமிய தேச ஆதரவாளர்கள் என சந்தேகத்தின் பேரில் 15 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். (நியூஸ் லிமிட்டெட்)
- இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. (ராய்ட்டர்சு)
- குறு ஒளிர்வண்டம் எம்60-யூசிடி1 என்ற குறு ஒளிர்வண்டம் மீபெரும் கருந்துளையை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய விண்மீன் பேரடை என அறியப்பட்டுள்ளது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- இலங்கையில் 17ம் நூற்றாண்டில் கிறித்தவ மத போதகராக செயல்பட்ட ஜோசப் வாஸ் அடிகளைப் புனிதராகத் திருத்தந்தை பிரான்சிசு அங்கீகரித்தார். (பிபிசி)
- செப்டம்பர் 17:
- இலங்கையில் ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது வாகனம் ஒன்று மக்கள் அணி ஒன்றின் மீது மோதியதில் ஐமசுக வேட்பாளர் செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஓம்சு மாகாணத்தில் சிரிய அரசுப் படையினரின் வான்தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உக்ரைன், தோனெத்ஸ்க் அருகில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- பிலிப்பீன்சின் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர். (ஏபிசி)
- இலங்கை வந்துள்ள சீனத் தலைவர் சீ சின்பிங் கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானப் பணிகளை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (தி இந்து)
- சீன அரசுத்தலைவர் சீ சின்பிங் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். (பிபிசி)
- 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பிஜியில் தேர்தல்கள் இடம்பெற்றன. (ஏபிசி), (எஸ்பிஎஸ்)
- செப்டம்பர் 16:
- இலங்கையின் ஊடாகத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவக் கூடுமென இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. (அ த தெரண)
- இசுலாமிய தேசப் போராளிகள் சிரியப் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினர். (ஏஎஃப்பி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா பரவலைத் தடுக்க அமெரிக்கா ஆயிரக்கணக்கான படையினரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்தது. (இந்து)
- கினியின் தென்கிழக்கே எபோலா நிவாரணப் பணியாளர்கள் எட்டுப் பேர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சீன அரசுத்தலைவர் சீ சின்பிங் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார். (டெய்லிநியூஸ்)
- செப்டம்பர் 15:
- உக்ரைன், தோனெத்ஸ்க் நகர் மீது எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு ஒரு வாரத்திற்கு முன்னர் மால்ட்டா கடற்பகுதியில் மூழ்கியதில் 500 பேர் வரையில் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 14:
- இசுலாமிய தேசப் போராளிகளுக்கு எதிரான போரில் உதவுவதற்கென ஆத்திரேலியா 600 படையினரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியது. (தி ஆஸ்திரேலியன்)
- தோனெத்ஸ்க் விமான நிலையத்திற்கு அருகில் உக்ரைன் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. ஆறு பேர் வரையில் உயிரிழந்தனர். (டொச்சவெல்லா)
- 250 பேருடன் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்ற படகு லிபியா அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் மூழ்கினர். (ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 13:
- இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் இராணுவத்தினருடனான மோதலில் மூன்று மாவோயிசப் போராளிகள் கொல்லப்பட்டனர். (பிடிஐ)
- பிரித்தானிய நிவாரணப் பணியாளர் டேவிட் ஹெயின்சு என்பவரின் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படும் காணொளி ஒன்றை இசுலாமிய தேசம் வெளியிட்டது. (என்பிசி)
- கத்தார் அரசு எகிப்தின் முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் உறுப்பினர்களைத் தமது நாட்டில் இருந்து வெளியேறுமாறு பணித்துள்ளது. (ஏபி)
- செப்டம்பர் 12:
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: 2,400 பேர் வரையில் இறப்புக்குக் காரணமான எபோலா வைரசைக் கட்டுப்படுத்துவதற்காகத் தமது 165 மருத்துவர்களை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவிருப்பதாக கூபா அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வன்முறைகளால்; கடந்த 9 மாதங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (ஏபி)
- திருத்தந்தை பிரான்சிசு இலங்கைக்கு 2015 சனவரி 13 இல் பயணம் மேற்கொள்வார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)
- தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீது தனது காதலியைத் திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத வகையில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்தது. (பிபிசி)
- நாசாவின் செவ்வாய்த் தரையுளவியான கியூரியோசிட்ட் தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது. (கிஸ்மோடோ)
- செப்டம்பர் 11:
- சிரிய உள்நாட்டுப் போர்: அல் காயிதா தொடர்புள்ள அல் நுஸ்ரா முன்னணி அமைப்பு தாம் கோலான் குன்றுகளில் பிடித்து வைத்திருந்த பிஜிய ஐநா அமைதிப்படையினரை விடுவித்தனர். (ராய்ட்டர்சு)
- இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஒருவரைத் தாம் சென்னையில் கைது செய்திருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பினர் அறிவித்தனர். (பிபிசி)
- செப்டம்பர் 10:
- ஈராக்கிய அரசுக்கும், ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கும் 25 மில்லியன் டாலர் பெறுமதியான உடனடி இராணுவ உதவிகள் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார். (ராய்ட்டர்சு)
- புற்றுநோயைத் தோற்றுவிக்கும் புற ஊதாக் கதிர்களைக் கட்டுப்படுத்தும் |ஓசோன் படலத்தின் பருமன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புதிய ஐநா ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. (பிபிசி)
- செப்டம்பர் 9:
- சூலை 17 இல் விபத்துக்குள்ளான மலேசியா எயர்லைன்சு விமானம் 17 ஏவுகணை போன்ற உயர் ஆற்றல் பொருட்கள் மூலமாகவே தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (பிபிசி)
- 160 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்க்டிக் கடலில் மூழ்கிய இரண்டு பிரித்தானியக் கப்பல்களில் ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக கனடா அறிவித்துள்ளது. (பிபிசி)
- கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளாகி [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்கத்தில் இருந்த பார்முலா 1 வீரர் மைக்கேல் சூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். (ஏபி)
- செப்டம்பர் 8:
- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்த்தார்.(சிங்கள பிபிசி)
- உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 1,200 சிறைக்கைதிகளை விடுவித்தனர். (பிபிசி)
- கேட் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. (பிபிசி)
- 2014 யூ.எசு. ஓப்பன் இறுதிப் போட்டியில் குரோவாசியாவின் மாரின் சிலிச் சப்பானின் கேய் நிசிக்கோரியை வென்றார். (பிபிசி)
- செப்டம்பர் 7:
- 10 பேருடன் சென்ற விமானம் ஒன்று அமெசான் மழைக்காட்டில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. (நியூஸ்24),(தே எக்ஸ்பிரஸ் திரிபுனே)
- 2014 ஆர்சி என்ற சிறுகோள் பூமிக்கு மிகக்கிட்டவாக (0.000267 வானியல் அலகுs (39,900 km; 24,800 mi)) பந்தது. (யாகூ)
- 2014 யூ.எசு. ஓப்பன் டென்னிசு போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார் (சிபிஎஸ்)
- செப்டம்பர் 6:
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய தேசத்துடனான போரில் [[[ஈரான்|இஆரனை]]த் தாம் கலந்தாலோசிக்க மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. (பிசினெசு ஸ்டான்டர்ட்)
- எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சி கத்தார் நாட்டுக்கு இரகசிய அரசு ஆவணங்களைக் கொடுத்தார் என முசி மீது குற்ற சாட்டப்பட்டுள்ளது. (ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 5:
- உக்ரைன் அரசும் உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். ஆனாலும் சண்டைகள் தொடர்ந்தன. (ராய்ட்டர்சு)
- சோமாலியாவில் செப்டம்பர் 1 இல் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் அல் சபாப் அமைப்பின் தலைவர் மொக்தார் அலி சுபெயிர் கொல்லப்பட்டார் என பென்டகன் உறுதிப்படுத்தியது. (ராய்ட்டர்சு)
- இலங்கை மாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத சரும நோயொன்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தினகரன்)
- இலங்கை துடுப்பாட்ட வாரியம் மற்றும் டயலொக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விருது வழங்கும் விழாவில் ஆண்டின் முதற்தர சிறந்த துடுப்பாட்ட வீரராக இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர் அஞ்செலோ மாத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். (டெய்லி நியூஸ்)
- மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரை குண்டு வீசித் தாக்கிக் கொலை செய்த குற்றஞ்சாட்டிப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சண்முகநாதன் சுதாகரனுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. (தமிழ்மிரர்)
- தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்டு ஆத்திரேலிய அருங்காட்சியகத்தால் வாங்கி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இரண்டு நடராஜர் சிலைகளை ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒப்படைத்தார். (பிபிசி)
- செப்டம்பர் 4:
- பாக்கித்தானில் பருவப் பெயர்ச்சிக் காற்று, மற்றும் மழை காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். (சேனல் நியூஸ்)
- இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் வரையில் உயிரிழந்தனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் இறப்புகள் 1,900 ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (பிபிசி)
- செப்டம்பர் 3:
- உக்ரைனில் உருசிய செய்தியாளர் அந்திரே ஸ்டெனின் என்பவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். (ஆர்டி)
- உக்ரைன் அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ, உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து நிரந்தர போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதனை உருசியா மறுத்துள்ளது. (ஏஎஃப்பி), (ஏபிசி)
- இலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (டெய்லிமிரர்)
- செப்டம்பர் 2:
- ஷார்ஜாவில் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் இனிமேல் தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.(எமிரேட்ஸ் 247)
- நைஜீரியாவில் பாமா என்ற முக்கிய வடகிழக்கு நகரை போகோ அராம் இசுலாமியப் போராளிகள் அரசுப்படையினரிடம் இருந்து கைப்பற்றினர். (பிபிசி)
- சோமாலியாவில் அல்-சபாப் குழுத் தலைவரை இலக்கு வைத்து அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி) (அல்ஜசீரா)
- சிரிய உள்நாட்டுப் போர்: அமெரிக்க செய்தியாளர் ஸ்டீவன் சொட்லொஃப் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் காணொளியை இசுலாமிய தேச போராளிகள் வெளியிட்டனர். (வாசிங்டன் போஸ்ட்)
- ஜெனிபர் லாரன்ஸ், அரியானா கிராண்டி மற்றும் பல பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை குறித்து அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது. (எம்டிவி)
- ஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். (டெய்லிமிரர்),(டெய்லிமிரர்)
- செப்டம்பர் 1:
- பாக்கித்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பள்ளிகள் மூடப்பட்டன.(ராய்ட்டர்சு)
- உக்ரைனின் கிழக்கே லுகான்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்தைச் சுற்றி உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைனியப் படையினர் மோதிக் கொண்டனர். (பிபிசி)
- ஐஸ்லாந்து தீவில் பார்தர் புங்கா என்ற எரிமலை வெடித்து சிதறியது. (சிபிஎஸ்),(டைம்)
இறப்புகள்
தொகு- செப்டம்பர் 1 - பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)
- செப்டம்பர் 2 - நோமன் கோர்டன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1911)
- செப்டம்பர் 3 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)
- செப்டம்பர் 7 - சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)
- செப்டம்பர் 19 - உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- செப்டம்பர் 29 - வாரன் அண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் (பி. 1921)
சிறப்பு நாட்கள்
தொகு- செப்டம்பர் 1 - 7 - ஊட்டச்சத்து வாரம் (இந்தியா)
- செப்டம்பர் 2 - உலக தேங்காய் நாள்
- செப்டம்பர் 2 - குலச்சிறை நாயனார் குருபூசை
- செப்டம்பர் 3 - குங்கிலியக்கலய நாயனார் குருபூசை
- செப்டம்பர் 3 - கேதார கௌரி விரதம்
- செப்டம்பர் 4 - உலக சாக்லெட் நாள்
- செப்டம்பர் 5- ஆசிரியர் நாள் (இந்தியா)
- செப்டம்பர் 6 - ஓணம் பண்டிகை
- செப்டம்பர் 8 - உலக எழுத்தறிவு நாள்[1]
- செப்டம்பர் 8 - தேவமாதா பிறந்தநாள்
- செப்டம்பர் 13 - உலக முதலுதவி நாள்
- செப்டம்பர் 18 - உலக அறிவாளர் நாள்
- செப்டம்பர் 21 - பன்னாட்டு கடல்சார் நாள்[2]
- செப்டம்பர் 25 - நவராத்திரி நோன்பு ஆரம்பம்
- செப்டம்பர் 26 - பன்னாட்டு அணு ஆயுதங்கள் ஒழிப்பு நாள்
- செப்டம்பர் 27 - உலக சுற்றுலா நாள்
- செப்டம்பர் 28 - காது கேளாதோர் நாள்
- செப்டம்பர் 28 - ரேபிஸ் விழிப்புணர்வு நாள்
- செப்டம்பர் 29 - உலக இதய நாள்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.un.org/en/events/observances/days.shtml
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-04-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.