செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்
நாடு  அமெரிக்கா
வசிப்பிடம் பாம் பீச் கார்டன்ஸ், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா [1]
பிறந்த திகதி செப்டம்பர் 26, 1981 (1981-09-26) (அகவை 36)
பிறந்த இடம் சாகினா, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
உயரம் 5 அடி 10 அங்குலம் (178 சதம மீட்டர்)[1]
நிறை 150 பவுண்ட் (68 கிலோ கிராம்)[1]
தொழில்ரீதியாக விளையாடியது 1995
விளையாட்டுகள் வலது கை; இரண்டு கை பின் அடி
வெற்றிப் பணம் $19,211,927
ஒற்றையர்
சாதனை: 523-107
பெற்ற பட்டங்கள்: 41
அதி கூடிய தரவரிசை: 1 (ஜூலை 8, 2002)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி (2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017)
பிரெஞ்சு ஓப்பன் வெற்றி (2002, 2013, 2015)
விம்பிள்டன் வெற்றி (2002, 2003, 2009, 2010, 2012, 2015, 2016)
அமெரிக்க ஓப்பன் வெற்றி (1999, 2002,2008, 2012, 2013, 2014)
இரட்டையர்
சாதனைகள்: 166–21 (89.1%)
பெற்ற பட்டங்கள்: 22
அதிகூடிய தரவரிசை: 1 (சூன் 7, 2010)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி (2001, 2003, 2009,2010)
பிரெஞ்சு ஓப்பன் வெற்றி (1999,2010)
விம்பிள்டன் வெற்றி (2000, 2002,2008,2009, 2012, 2016)
அமெரிக்க ஓப்பன் வெற்றி (1999,2009)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சூன் 25, 2012.

செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் (Serena Jameka Williams, பிறப்பு செப்டம்பர் 26, 1981) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 39 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்ற செரீனா, வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார்.

வென்ற பதக்கங்கள்
மகளிர் டென்னிசு
 அமெரிக்கா
தங்கம் 2000 சிட்னி மகளிர் இரட்டையர்
தங்கம் 2008 பெய்ஜிங் மகளிர் இரட்டையர்
தங்கம் 2012 இலண்டன் மகளிர் இரட்டையர்
தங்கம் 2012 இலண்டன் மகளிர் ஒற்றையர்

மகளிர் டென்னிசு சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழு முறை எட்டியவர். முதன்முதலாக முதல் நிலையை சூலை 8, 2002இல் பெற்றார்; ஏழாவது முறையாக சனவரி 30, 2017இல் எட்டினார்.[2]

செரீனா கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்றது சாதனையாகும். 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், இரண்டு கலப்பினப் பட்டங்கள். நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிசு ஆட்டக்காரராக உள்ளார். அண்மைக்கால விளையாட்டாளர்களில் இவரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடைய தமக்கை வீனசு வில்லியம்சுடன் இரட்டையர் ஆட்டத்தில் ஒரேநேரத்தில் நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களைப் பெற்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் சிலாம் வெற்றிகளைப் பெற்றது இவரை ஆறாம் இடத்தில் வைத்துள்ளது.[3] தற்போது (2012 செப்டம்பர் 10) பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின்படி இவரின் தர வரிசை நான்கு ஆகும் [4], இரட்டையரில் இவரின் தரவரிசை 35 ஆகும். [5]

செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[6] ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் [7]. மற்றெந்த பெண் விளையாட்டாளரை விட மிகக் கூடுதலான பணிவாழ்வு பரிசுத்தொகை வென்றுள்ளார். [8] தமது தமக்கையுடன் 1998ஆம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார். இவற்றில் எட்டு கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிகளில் ஆறில் வென்றுள்ளார். ஆறு ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே விளையாட்டாளராக, ஆண்/பெண் இருவரிலும், உள்ளார்.

பொருளடக்கம்

திருமணம்தொகு

இவருக்கும் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ரெட்டிட் -ஐ என்ற இணைய நிறுவனத்தில் இணை நிறுவனரான அலெக்சிசு ஒகானியன் என்பவருக்கும் 2016 டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. [9] இவர் 20 வாரங்கள் கருத்தரித்திருப்பதாக ஏப்பிரல் 20 அன்று டிவிட்டரில் சிறிது உப்பிய வயிற்றுடன் உள்ள படத்தை போட்டு 20 வாரங்கள் என்று எழுதியதால் தெரியவந்தது. ஆனால் இவர் கருத்தரித்திருப்பதாக இவரது அணி அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.[10]

கிராண்டு சிலாம் போட்டிகளின் காலக்கோடுதொகு

அவுத்திரேலிய ஓப்பன் 2சு 3சு 4சு காஇ A வெ A வெ 3R வெ காஇ வெ வெ A 4சு காஇ 4சு வெ வெ 7 / 17 81–10
பிரெஞ்சு ஓப்பன் 4சு 3சு A காஇ வெ அஇ காஇ A A காஇ 3சு காஇ காஇ A 1சு 'W 2சு வெ 3 / 15 60–12
விம்பிள்டன் 3சு A அஇ காஇ வெ வெ 3சு A காஇ வெ வெ 4சு வெ 4சு 3சு வெ வெ 7 / 17 86–10
யூ.எசு. ஓப்பன் 3சு வெ காஇ வெ A காஇ 4சு 4சு காஇ வெ அஇ A வெ வெ வெ' அஇ அஇ 6 / 17 89–11
வெற்றி-தோல்வி 8–4 11–2 12–3 18–4 21–0 19–1 14–3 12–2 5–2 19–3 19–3 23–2 18–1 9–2 17–2 21–2 13–3 26–1 24–3 7–0 23 / 66 316–43
 • A - ஆடவில்லை

கிராண்ட் சிலாமில் பெண்கள் ஒற்றையர்தொகு

29 போட்டி- 23இ்ல் வெற்றி 6இல் இரண்டாம் இடம்

முடிவு ஆண்டு போட்டி தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1999 யூ. எசு. ஓப்பன் (1) கடின தரை   மார்டினா ஹிங்கிஸ் 6–3, 7–6(7–4)
இரண்டாம் இடம் 2001 யூ. எசு. ஓப்பன் (1) கடின தரை   வீனசு வில்லியம்சு 2–6, 4–6
வெற்றியாளர் 2002 பிரெஞ்சு ஓப்பன் (1) களிமண் தரை   வீனசு வில்லியம்சு 7–5, 6–3
வெற்றியாளர் 2002 விம்பிள்டன் கோப்பை (1) புல் தரை   வீனசு வில்லியம்சு 7–6(7–4), 6–3
வெற்றியாளர் 2002 யூ. எசு. ஓப்பன் (2) கடின தரை   வீனசு வில்லியம்சு 6–4, 6–3
வெற்றியாளர் 2003 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (1) கடின தரை   வீனசு வில்லியம்சு 7–6(7–4), 3–6, 6–4
வெற்றியாளர் 2003 விம்பிள்டன் கோப்பை(2) புல் தரை   வீனசு வில்லியம்சு 4–6, 6–4, 6–2
இரண்டாம் இடம் 2004 விம்பிள்டன் கோப்பை(1) புல் தரை   மரியா சரப்போவா 1–6, 4–6
வெற்றியாளர் 2005 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (2) கடின தரை   லிண்ட்சே டேவன்போர்ட் 2–6, 6–3, 6–0
வெற்றியாளர் 2007 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (3) கடின தரை   மரியா சரப்போவா 6–1, 6–2
இரண்டாம் இடம் 2008 விம்பிள்டன் கோப்பை(2) புல் தரை   வீனசு வில்லியம்சு 5–7, 4–6
வெற்றியாளர் 2008 யூ. எசு. ஓப்பன் (3) கடின தரை   செலினா சான்கோவிச் 6–4, 7–5
வெற்றியாளர் 2009 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (4) கடின தரை   டினரா சாபினா 6–0, 6–3
வெற்றியாளர் 2009 விம்பிள்டன் கோப்பை(3) புல் தரை   வீனசு வில்லியம்சு 7–6(7–3), 6–2
வெற்றியாளர் 2010 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (5) கடின தரை   இச்சுடின் எனின் 6–4, 3–6, 6–2
வெற்றியாளர் 2010 விம்பிள்டன் கோப்பை(4) புல் தரை   வீரா சுவோனேரேவா 6–3, 6–2
இரண்டாம் இடம் 2011 யூ. எசு. ஓப்பன் (2) கடின தரை  சமந்தா சுடோசுர் 2–6, 3–6
வெற்றியாளர் 2012 விம்பிள்டன் கோப்பை (5) புல் தரை   அக்னிசுகா ராட்வான்சுகா 6–1, 5–7, 6–2
வெற்றியாளர் 2012 யூ. எசு. ஓப்பன் (4) கடின தரை   விக்டோரியா அசரென்கா 6–2, 2–6, 7–5
வெற்றியாளர் 2013 பிரெஞ்சு ஓப்பன் (2) களிமண் தரை   மரியா சரப்போவா 6–4, 6–4
வெற்றியாளர் 2013 யூ. எசு. ஓப்பன் (5) கடின தரை   விக்டோரியா அசரென்கா 7–5, 6–7(6–8), 6–1
வெற்றியாளர் 2014 யூ. எசு. ஓப்பன் (6) கடின தரை   கரோலின் வோஸ்னியாக்கி 6–3, 6–3
வெற்றியாளர் 2015 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (6) கடின தரை   மரியா சரப்போவா 6–3, 7–6(7–5)
வெற்றியாளர் 2015 பிரெஞ்சு ஓப்பன் (3) களிமண் தரை   லூசிய சவேரோவா 6–3, 6–7(2–7), 6–2
வெற்றியாளர் 2015 விம்பிள்டன் கோப்பை(6) புல் தரை  காபினே முகுருசா 6–4, 6–4
இரண்டாம் இடம் 2016 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (1) கடின தரை   ஏஞ்சலிக் கெர்பர் 4–6, 6–3, 4–6
இரண்டாம் இடம் 2016 பிரெஞ்சு ஓப்பன் (1) களிமண் தரை   காபினே முகுருசா 5–7, 4–6
வெற்றியாளர் 2016 விம்பிள்டன் கோப்பை(7) புல் தரை   ஏஞ்சலிக் கெர்பர் 7–5, 6–3
வெற்றியாளர் 2017 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (7) கடின தரை   வீனசு வில்லியம்சு 6–4, 6–4

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 WTA. "Serena Williams Bio on WTA Tour website". WTA. பார்த்த நாள் 2008-04-01.
 2. "RANKINGS AS OF 30 JANUARY 2017". wta.com (மார்ச் 10, 2017). பார்த்த நாள் மார்ச் 10, 2017.
 3. Hickman, Craig (January 30, 2010). "Serena Williams Wins Australian Open". The Huffington Post. http://www.huffingtonpost.com/craig-hickman/serena-williams-wins-aust_b_443115.html. பார்த்த நாள்: January 30, 2010. 
 4. 2012 செப்டம்பர் 10ல் இவரின் தர வரிசை 4 ஆகும்
 5. இரட்டையரில் 35
 6. "Williams sisters net gold in doubles, beating Spaniards in final". ESPN (August 17, 2008). பார்த்த நாள் April 22, 2009.
 7. ஒற்றையர் ஆட்டத்தில் செரீனாவின் முதல் ஒலிம்பிக் தங்கம்
 8. "Serena sets career prize money mark". ESPN (January 30, 2009). பார்த்த நாள் April 22, 2009.
 9. [http://edition.cnn.com/2016/12/29/entertainment/serena-williams-engaged-alexis-ohanian/
 10. "Did Serena Williams just reveal she is 20 weeks pregnant?". பிபிசி. பார்த்த நாள் ஏப்ரல் 19, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரீனா_வில்லியம்ஸ்&oldid=2259140" இருந்து மீள்விக்கப்பட்டது