மே 2009
<< | மே 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMIX |
மே 2009, 2009 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 15, வெள்ளிக்கிழமை இல் தொடங்கி ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை இல் முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
தொகு- மே 8 - சித்திரா பௌர்ணமி
- மே 28 - சேக்கிழார் குருபூசை
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- மே 31: தெற்கு ஒசேத்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. (அல்ஜசீரா)
- மே 30: பாகிஸ்தான் இராணுவம் சுவாட் பள்ளத்தாக்கில் மின்கோரா நகரை தலிபான்களிடம் இருந்து கைப்பற்றியது. (ஏபி)
- மே 29:
- மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பதவியேற்றார். (த ஸ்டேட்ஸ்மன்)
- சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. (பிபிசி)
- மே 28:
- ஹொண்டுராசின் வளைகுடாப் பகுதியில் 7.1-அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. (பிபிசி)
- ஈரானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷியாக்களின் முக்கிய மசூதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டு, 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (தினக்குரல்)
- மே 27:
- ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டு 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மே 26: வட கொரியா மேலும் இரண்டு குறுந்தூர ஏவுகணைகளைப் பரிசோதித்தது. (பிபிசி)
- மே 25:
- வெற்றிகரமான அணுகுண்டுப் பரிசோதனையொன்றை நடத்தியதாக வட கொரியா அறிவித்தது. (தினக்குரல்)
- வங்காளதேசம், மற்றும் இந்தியாவின் வடபகுதியைத் தாகிய சூறாவளி ஐலா 212 பேரைக் கொன்றது. (டைம்ஸ்)
- மே 24: நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் பூமி திரும்பியது. (நாசா)
- மே 23:
- நேப்பாளத்தின் பிரதமராக மாதவ் குமார் நேப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். (சீஎனென்)
- ஊழல்களில் தொடர்பு கொண்டிருந்த தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ-இயூன் தற்கொலை செய்து கொண்டார். (ஏபி)
- மே 22: இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகப் பதாவியேற்றார். (ராய்ட்டர்ஸ்)
- மே 21: இந்தியாவின் நாக்பூர் நகருக்கு அருகில் மாவோயிசத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மே 20: இந்தோனீசியாவின் ஜாவாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- மே 2: பசிபிக் தீவுகளின் ஒன்றியத்தில் இருந்து பிஜியின் உறுப்புரிமை காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது. (சின்குவா)
- மே 1: பன்றிக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் 16 நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- மே 30: தமிழக முதல்வர் மு. கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். (தமிழ்வின்)
- மே 29:
- வன்னியில் இறுதிக்கட்டப் போரில் கிட்டத்தட்ட 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவின் "த டைம்ஸ்" பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. (த டைம்ஸ்)
- மலையகத்தின் பதுளைக்கு அருகில் உள்ள பலகடுவ என்ற இடத்தில் உள்ள தமிழர்களின் மூன்று கடைகள் தாக்கப்பட்டன. (தமிழ்வின்)
- மே 27:
- வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர், வவுனியா அகதிகள் முகாமில் அவர்களது உறவினர்களுடன் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராசபக்ச தெரிவித்தார். (தமிழ்வின்)
- ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரைவுத்திட்ட யோசனைகள் 17 அதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. [1] (தமிழ்வின்)
- அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. (தமிழ்வின்)
- மே 26:
- இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பன்னாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தினார். (தமிழ்வின்)
- யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வடக்கின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 8 இல் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்தது. (தமிழ்வின்)
- மே 24:
- பா. நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் விபரமாகக் கூறியுள்ளார். (த டைம்ஸ்)
- விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 17 ஆம் நாள் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். (தமிழ்வின்)
- மே 23: ஐநா செயலாளர் பான் கீ மூன் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களுக்குச் சென்றனர். மோதல் நடைபெற்ற வலயத்திற்கு மேலாக விமானத்தில் சென்று பார்த்தார். (தமிழ்வின்)
- மே 22: வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை எரித்து விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (தமிழ்வின்)
- மே 21:
- நான்காம் கட்ட ஈழப்போரில் மொத்தம் 6,261 படையினர் உயிரிழந்ததாகவும், 30 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் இலங்கை இராணுவம் அறிவித்தது. (ராய்ட்டர்ஸ்)
- இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்களை, 6 மாதங்களுக்குள் மீள்குடியமர்த்த திட்டமிட்டிருப்பதாக இந்தியாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. (தமிழ்வின்)
- மே 20: மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- மே 19:
- விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனது என்று தோன்றுகிற உடலம் இலங்கைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. (தமிழ்வின்)
- வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும், பல மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவ்வியக்கத்தின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாதன் தெரிவித்தார். (தமிழ்வின்)
- மே 18:
- பயங்கரவாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக இலங்கைப் படைத்துறை ஜனாதிபதியிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. (தமிழ்வின்)
- விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். (தமிழ்வின்)
- விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பா. நடேசன், புலித்தேவன், ரமேஷ், மற்றும் தலைவரின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோரது உடலங்களை படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. (தமிழ்வின்)
- முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழின அழிப்பின் இறுதிக் கட்டப் போரை இலங்கைப் படையினர் நடத்தினர். (தமிழ்நெட்)
- மே 17:
- ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகளின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாதன் தெரிவித்தார். (தமிழ்வின்)
- வன்னியில் விடுதலைப்புலிகளினால் போர் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 7 படையினர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டனர். (தமிழ்வின்)
- துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர். (தமிழ்வின்)
- 72 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடைசி 50,000 பொதுமக்கள் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (தமிழ்வின்)
- மே 16:
- முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ஆறு மருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். (தமிழ்நெட்)
- 26 ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார். (தமிழ்வின்)
- முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவர் கூறினார். (தமிழ்வின்)
- இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (தமிழ்வின்)
- மே 15:
- கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடற்படையினர் கைது செய்தனர். (தமிழ்வின்)
- வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்தில் வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட 150 பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- மே 14: தொடர்தாக்குதலால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மூடப்பட்டு மருத்துவர்கள் பதுங்குகுழிக்குள் தஞ்சமடைந்தனர். கடந்த 48 மணி நேரத்திற்குள் 1700 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்), (தமிழ்வின்), (தமிழ்வின்)
- மே 13: இலங்கையின் வட போர் முனையில் இலங்கை படையினர் தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்தார். (தமிழ்வின்)
- மே 12: முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டு 56 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மே 10:
- திருகோணமலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் 4' தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். (தமிழ்வின்)
- விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் (இராசையா புனிதரூபன்) கடும் எறிகணை வீச்சில் படுகாயம் அடைந்தார். (தமிழ்வின்)
- மே 9: முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி படையினர் நடத்திய தாக்குதலில் 1,112 பேர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- மே 8: முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்தத விடுதலைப்புலிகளின் கடைசிச் சுரங்கக் காவலரணும் கைப்பற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. (தமிழ்வின்)
- மே 7: வன்னியில் 48 மணி நேரத்தில் மொத்தம் 162 தமிழர்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- மே 6:
- இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மீண்டும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியதாகவும் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். (தமிழ்வின்)
- பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. (தமிழ்வின்)
- மே 5:
- அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்ட்டனர். (தமிழ்வின்)
- புத்தள பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். (தமிழ்வின்)
- மே 4:
- மட்டக்களப்பில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிக்கா படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- இங்கிலாந்து பிரதமர் நியமி்த்துள்ள சிறப்பு தூதரான டெஸ் பிரவுன் உள்ளிட்டோர் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்று கொழும்பு வந்தது. (தமிழ்வின்)
- முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் இரண்டு நீரூந்து விசைப்படகுகளும், இராணுவத்தினரை தரையிறக்குவதற்கு முற்பட்ட அரோப் படகு ஒன்றும் கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. (தமிழ்வின்)
- மே 3: அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- மே 2:
- முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்த மாணவி சதீஸ்குமார் தினுசிக்கா (வயது 8) கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். (தமிழ்வின்)
- மே 1:
- முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 172 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- வன்னியில் இருந்து உயிர் தப்பிக்க இராமேஸ்வரம் வந்த அகதிகளின் படகு நடுக்கடலில் திசைமாறியதால் 10 தமிழர்கள் இறந்தனர். (தமிழ்வின்)
- இலங்கை இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம், மற்றும் லங்காபுவத் என்பன தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் வெளியிட்டனர். (தமிழ்வின்)
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்