பசிபிக் தீவுகளின் ஒன்றியம்

பசிபிக் தீவுகளின் ஒன்றியம் அல்லது பசிபிக் தீவுகளின் பொது மன்றம் (Pacific Islands Forum) என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் இறைமையுள்ள நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் அரச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒன்றியம் ஆகும். இவ்வமைப்பு 1971 ஆண்டில் தென் பசிபிக் ஒன்றியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அடங்கிய பரந்த ஓசியானியா நாடுகளை உள்ளடக்குவதற்காக பசிபிக் தீவுகளின் ஒன்றியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

பசிபிக் தீவுகளின் ஒன்றியம்
Pacific Islands Forum (PIF)
பசிபிக் தீவுகளின் ஒன்றியம் Pacific Islands Forum (PIF) அமைவிடம்
செயலகம்சுவா, பிஜி பிஜி
ஆட்சி மொழி(கள்)
உறுப்பு நாடுகள்
தலைவர்கள்
• பொதுச் செயலர்
துயிலோமா நெரோனி சிலேட் சமோவா
நிறுவுதல்
• தெற்கு பசிபிக் ஒன்றியமாக
1971
• பசிபிக் தீவுகளின் ஒன்றியமாக
2000
பரப்பு
• மொத்தம்
8,538,293 km2 (3,296,653 sq mi)
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
34.1 மில்லியன்
• அடர்த்தி
129/km2 (334.1/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2008 மதிப்பீடு
• மொத்தம்
US$ 858.9 பில்லியன்¹ (2008)
• தலைவிகிதம்
US$ 2,954
மமேசு (2007/08)Increase 0.753¹
Error: Invalid HDI value · 97வது¹
நாணயம்
நேர வலயம்
  1. If considered a single entity

இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுகளாவன: ஆஸ்திரேலியா, குக் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சொலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகியன. 2006 ஆம் ஆண்டில் இருந்து, நியூ கலிடோனியா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியன துணை உறுப்பு ஆட்சிப்பகுதிகளாக இவ்வொன்றியத்தில் இணைக்கப்பட்டன[1].

2009 ஆம் ஆண்டில் பிஜியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு காலவரையறையின்றி இவ்வொன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது[2].

உறுப்பு நாடுகள்

தொகு


 

உறுப்பு நாடுகள்
  ஆத்திரேலியா (AU)   கிரிபட்டி (KI)   பலாவு (PW)   சொலமன் தீவுகள் (SB)
  குக் தீவுகள் (CK)   நவூரு (NR)   பப்புவா நியூ கினி (PG)   தொங்கா (TO)
  மைக்குரோனீசியா (FM)   நியூசிலாந்து (NZ)   மார்சல் தீவுகள் (MH)   துவாலு (TV)
  பிஜி (FJ)   நியுவே (NU)   சமோவா (WS)   வனுவாட்டு (VU)
துணை உறுப்பு நாடுகள் அவதானிகள்
  நியூ கலிடோனியா (NC)   பிரெஞ்சு பொலினீசியா (PF)   டோக்கெலாவ் (TK)   கிழக்குத் திமோர் (TL)
  வலிசும் புட்டூனாவும் (WF)[3]   ஐக்கிய நாடுகள்
பொதுநலவாய செயலகம்
உரையாடல்களில் பங்குபற்றும் நாடுகள்
  கனடா   சீனா (CN)   ஐரோப்பிய ஒன்றியம்   பிரான்சு
  இந்தியா   இந்தோனேசியா (ID)   சப்பான்   தென் கொரியா
  மலேசியா (MY)   பிலிப்பீன்சு (PH)   தாய்லாந்து   ஐக்கிய இராச்சியம்
  ஐக்கிய அமெரிக்கா (US)

மேற்கோள்கள்

தொகு
  1. "Forum Communiqué, Alofi, Niue" (PDF). Archived from the original (PDF) on 2008-09-10. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.
  2. Fiji suspended from Pacific Islands Forum
  3. Decision on Wallis bid to join Forum (as Associate Member) deferred

வெளி இணைப்புகள்

தொகு