மாவோரி

(மவோரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாவோரிகள் (Māori) எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி மொழியைப் பேசுகிறார்கள். 19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

மாவோரி
Māori


மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ. 780,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 நியூசிலாந்து653,100 (2009 மதிப்பீடு)[1]
 ஆத்திரேலியாஏறத்தாழ. 110,000[2]
 ஐக்கிய இராச்சியம்ஏறத்தாழ. 8,000[3]
 ஐக்கிய அமெரிக்கா< 3,500[4]
 கனடா1,305[5]
ஏனைய பிரதேசங்கள்ஏறத்தாழ. 8,000[3]
மொழி(கள்)
மாவோரி, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம், மாவோரி சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஏனைய பொலினேசியர்கள்,
ஆத்திரனேசிய மக்கள்
பாரம்பரிய உடையில் மாவோரி இளைஞர்
மாவோரி பழங்குடியினத்தின் நியூசிலாந்து நாளுடமன்ற பெண் உறுப்பினர் அனா-ரவ்கிதி மைபி-கிளார்க்

தமிழர்களும் மாவோரிகளும்

தொகு

மாவோரிகள் தங்கள்து முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருதுகோள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு.[6] இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார்.[7] இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. Statistics New Zealand. "Māori population estimates". பார்க்கப்பட்ட நாள் 1 October 2010.
  2. Johnstone, Craig (16 March 2010). "Ratio of Maori's (sic) in Australia greater than that in New Zealand". The Courier Mail இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120616062958/http://www.couriermail.com.au/news/queensland/ratio-of-maoris-in-australia-greater-than-that-in-new-zealand/story-e6freoof-1225841489067. பார்த்த நாள்: 7 December 2010. 
  3. 3.0 3.1 Walrond, Carl (4 March 2009). "Māori overseas". Te Ara: The Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 7 December 2010.
  4. New Zealand-born figures from the 2000 U.S. Census; maximum figure represents sum of "Native Hawaiian and Other Pacific Islander" and people of mixed race. United States Census Bureau (2003). Census 2000 Foreign-Born Profiles (STP-159): Country of Birth: New ZealandPDF (103 KB). Washington, D.C.: U.S. Census Bureau.
  5. Statistics Canada (2003). Ethnic Origin (232), Sex (3) and Single and Multiple Responses (3) for Population, for Canada, Provinces, Territories, Census Metropolitan Areas and Census Agglomerations, 2001 Census - 20% Sample Data பரணிடப்பட்டது 2009-07-25 at the வந்தவழி இயந்திரம். Ottawa: Statistics Canada, Cat. No. 97F0010XCB2001001.
  6. Chamanlal. Hindu America. p. 164.
  7. ந. சி. கந்தையா பிள்ளை. சிவன். p. 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவோரி&oldid=4143673" இலிருந்து மீள்விக்கப்பட்டது