தமிழ் மணி
தமிழ் மணி (Tamil Bell) என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலக் கப்பல் மணி ஆகும். இது வில்லியம் கொலென்சோ என்னும் மதப்பரப்புனரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் நோர்த்லாந்து பிராந்தியத்தில் வங்காரை அருகே மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செ.மீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகைய்யதீன் பக்சு உடைய கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்தது என்பதற்கு இது சான்றாக அமையலாம் என இந்தியவியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தெரிவிக்கிறார்.[1][2] திருக்கோணமலையில் இருந்து கடலோடிகள் வன்னிக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே வணிகத் தொடர்பு மேற்கொண்டிருந்த காலத்தில், இந்தியர்களுடனான தொடர்பினால், போர்த்துக்கீசியக் கப்பல் மூலம் இம்மணி நியூசிலாந்தை எட்டியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[3] அத்துடன், பல இந்தியக் கப்பல்கள் இக்காலப்பகுதியில் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டன. இதனால் மூழ்கிய கப்பல் ஒன்றின் சிதைவுகள் நியூசிலாந்தில் கரையொதுங்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[4]
இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[5]
இவற்றையும் பார்க்க
தொகுமேலும் படிக்க
தொகு- Robert Langdon (1975). The lost caravel. Pacific Publications. pp. 243–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0858070219, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780858070219.
- The journal of the Polynesian Society, Volume 84. Polynesian Society (N. Z.). 1975. pp. 477–483.
- Transactions of the New Zealand Institute, Volume 4. Royal Society of New Zealand. 1872. pp. 40–41. http://rsnz.natlib.govt.nz/volume/rsnz_04/rsnz_04_00_000580.html#n43
- Michael Malthus Trotter (1997). Digging up the past: New Zealand's archaeological history. Penguin Books. pp. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 067087440X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670874408.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - The New Zealand journal of history, Volumes 4-5. History Department, University of Auckland. 1970. p. 10.
- Ethnographical Considerations on the Whence of the Maori (PDF). National Library of New Zealand. 1871. pp. 22–23.
{{cite book}}
:|work=
ignored (help) - http://www.teara.govt.nz/en/photograph/1135/the-tamil-bell
மேற்கோள்கள்
தொகு- ↑ Dikshitar, V. R. Ramachandra (1947). Origin and Spread of the Tamils. Adyar Library. pp. 30.
- ↑ Kerry R. Howe (2003). The Quest for Origins: Who First Discovered and Settled New Zealand and the Pacific Islands? pp 144–5 Auckland:Penguin.
- ↑ New Zealand Journal of Science. Wise, Caffin & Company. 1883. p. 58. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.
- ↑ New Zealand Institute (1872). Transactions and Proceedings of the New Zealand Institute. New Zealand Institute. pp. 43–. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.
- ↑ http://collections.tepapa.govt.nz/objectdetails.aspx?oid=213397&coltype=taonga%20maori®no=me000842/1
வெளி இணைப்புகள்
தொகு- Picture of the bell at Te Ara: The Encyclopedia of New Zealand
- The Tamil Bell from the collection of the Museum of New Zealand Te Papa Tongarewa