தமிழ்ச் செப்பேடுகள்

தமிழ்ச் செப்பேடுகள், பல்வேறு தென்னிந்திய அரச மரபினரால், தனிப்பட்டவர்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட, ஊர்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் வேறு கொடைகள் குறித்த பதிவுகள் ஆகும். [1] தமிழ் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதில் இச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை ஆகும்.[2] தமிழ்ச் செப்பேடுகள் தொடர்பான கொடைகள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், சாளுக்கியர், சோழர், விசயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்தவை. மத்தியகாலத் தென்னிந்தியாவின் சமூக நிலை பற்றி அறிவதற்கு உதவுவதால் இவை கல்வெட்டியல் தொடர்பில் மிகப் பெறுமதியானவை. அத்துடன், தென்னிந்திய அரச மரபினர் தொடர்பான வரலாற்றில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதிலும் இவை பெரிதும் துணை புரிகின்றன.

தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகு

பெரும்பாலான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் தமிழிலேயே வெட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமசுகிருத மொழியிலும் உள்ளன. சில இரு மொழியிலும் உள்ளன. கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஈ. ஆழ்ச்சு (E. Hultzsch), மதராசு அரசின் கல்வெட்டியலாளராக பணியேற்றதன்பின், 1886 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென்னிந்தியக் கல்வெட்டுக்களை முறையாகச் சேகரிக்கத் தொடங்கினார்.

மிகப் பழைய செப்பேடு கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லேடன் செப்பேடுகள், முதலாம் இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு, சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு, வீரராசேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு, என்பவை கண்டுபிடித்து வெளியிடப்பட்டவற்றுள் அடங்குவனவாகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Nature and Importance of Indian Epigraphy - Chapter IV". பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
  2. "History and Culture of Tamil Nadu : As Gleaned from the Sanskrit Inscriptions". பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_செப்பேடுகள்&oldid=3530487" இலிருந்து மீள்விக்கப்பட்டது