சூறாவளி ஐலா

சூறாவளி ஐலா (Cyclone Aila) என்பது 2009 ஆம் ஆண்டில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கொல்கத்தாவின் தெற்கே 950 கிலோமீட்டர்கள் (590 மைல்கள்) தொலைவில் 2009 மே 21 ஆம் நாள் உருவாகியது. அடுத்த இரு நாட்களில் மே 23 இல் அது வெப்பவலயச் சூறாவளியாக உருக்கொண்டது. மே 25 ஆம் நாள் வரை மொத்தம் 212 பேர் உயிரிழந்து ஐநூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். 650,000 பேர் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

சூறாவளி ஐலா
Severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
சூறாவளி ஐலா அதன் உயர் வீச்சத்தில்
தொடக்கம்23 மே 2009
மறைவு26 மே 2009
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
1-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph)
தாழ் அமுக்கம்974 hPa (பார்); 28.76 inHg
இறப்புகள்212 மொத்தம், >500 காணாமற்போனோர்
பாதிப்புப் பகுதிகள்இந்தியா, வங்காளதேசம்
2009 வட இந்தியப் பெருங்கடற் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி

தாக்கங்கள்

தொகு

இந்தியா

தொகு

இந்தியாவில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டு[1][2][3]. மேலும் பலர் மழை, வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்துள்ளனர்.

வங்காள தேசம்

தொகு

இந்தியாவின் எல்லைக்கருகிலுள்ள ஹில்னா என்னும் கரையோர மாவட்டமே இச் சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இங்கிருந்த கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடிசைகளும் மண் வீடுகளும் கடல்அலையில் அடித்துச் செல்லப்பட்டன. மணித்தியாலத்திற்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இச் சூறாவளியினால் கொய்ரா மாவட்டத்தில் 20,000 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன[4].

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஐலா&oldid=3770655" இலிருந்து மீள்விக்கப்பட்டது