ஏப்ரல் 2015
<< | ஏப்ரல் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | ||
MMXXIV |
ஏப்ரல் 2015 (April 2015), 2015 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஏப்ரல் 30:
- நைஜீரியாவின் சம்பிசா காட்டுப் பகுதியில் போகோ அராம் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 160 பெண்களையும், சிறுவர்களையும் தாம் விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்தது. (சீஎனென்)
- யெமன் எல்லைப் பகுதியில் சவூதிப் படையினருடன் நடந்த மோதல்களில் ஹூத்தி போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 2015 நேபாள நிலநடுக்கம்: ஐந்து நாட்களின் பின்னர் காட்மாண்டூ அருகில் இடிபாடுகளிடையே சிக்குண்டிருந்த சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான். (டைம்சு ஒஃப் இந்தியா)
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சையி மற்றும் இரண்டு பள்ளி சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு பாக்கித்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. (பாக்கித்தான் டிரிபியூன்)
- 2005 இல் ஏவப்பட்ட நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளில் மோதி செயலிழந்தது. (என்பிசி)
- ஏப்ரல் 29:
- இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பாலி ஒன்பது ஆத்திரேலியர்கள் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான், மற்றும் நான்கு நைஜீரியர்கள், ஒரு பிரேசிலியர், ஒரு இந்தோனேசியர் உட்பட எட்டுப் பேருக்கு அதிகாலை 12:25 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிலிப்பீனியப் பெண் மேரி ஜேன் வெலோசோ கடைசி நிமிடத்தில் தண்டனை இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- பாலி ஒன்பது மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரேலியா இந்தோனேசியாவுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. (பிபிசி), (ஏபிசி)
- இலங்கையில் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கியமான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 215 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (தினகரன்)
- 2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 6,100 ஐ எட்டியது. (ஏபி)
- பல்லாயிரக்கணக்கானோர் உணவுப் பற்றாக்குறையால் காட்மாண்டூ நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். (சிக்ன்குவா)
- ஏப்ரல் 28:
- நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் 200 பெண் பிள்ளைகளும், 93 பெண்களும் போகோ அராம் போராளிகளிடம் ருந்து விடுவிக்கப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 2015 நேபாள நிலநடுக்கம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. 1.4 மில்லியன் மக்களுக்கு உணவு தேவையென ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. (சீஎனென்)
- ஏப்ரல் 27:
- வடக்கு நைஜீரியாவில் தமசாக் நகரில் போகோ அராம் போராளிகளினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ஏஃப்பி)
- 2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 3,700 ஐத் தாண்டியது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். (ஏபி)
- சூடானில் அரசுத்தலைவர் தேர்தலில் உமர் அல்-பஷீர் 94.4 வீத வாக்குகளால் வெற்றி பெற்றார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் நாட்டை ஆண்டு வருகிறார். (ஏபி)
- ஏப்ரல் 26:
- 2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 2,200 ஐத் தாண்டியது. (சிஎனென்), (சிபிசி), (நியூயோர்க் டைம்சு)
- 6.7 அளவு நிலநடுக்கப் பின்னதிர்வு நேபாளத்தையும், வட இந்தியாவையும் தாக்கியதில் இமயமலைப் பகுதியில் பனிச்சரிவுகள் ஏற்பட்டன. (ராய்ட்டர்சு)
- கசக்ஸ்தானில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் நுர்சுல்தான் நசர்பாயெவ் 97.7 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1984 முதல் இவர் நாட்டை ஆண்டு வருகிறார். (ஏபி)
- ஏப்ரல் 25:
- கலிப்பொலி போரின் 100வது நிறைவு நாள் துருக்கியில் கொண்டாடப்பட்டது. ஆத்திரேலியா, நியூசிலாந்து நடுகளில் அன்சாக் நாள் நினைவுகூரப்பட்டது. (பிபிசி)
- 2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 1,500 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை. உலக பாரம்பரியக் களங்கள் பல அழிந்தன. இந்தியா, வங்காளதேசம், திபெத்துவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. (ஏபி), (ஏபிசி), (பிபிசி)
- டோகோவில் அரசுத்தலைவர் தேர்தல்க்ள் இடம்பெற்றது. றேபி)
- ஏப்ரல் 24:
- நைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் மார்ட்டே நகரை மீளக் கைப்பற்றினர். (ஏஃப்பி)
- பாக்கித்தான் மனிதௌரிபை ஆர்வலர் சமீன் மகுமுது என்பவர் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். (அல்ஜசீரா)
- உதுமானியப் பேரரசினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலையின் 100வது ஆண்டு நிறைவை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது. (பிபிசி)
- நியூசிலாந்தின் தெற்குத் தீவில் கைக்கூரா நகருக்குநாண்மையில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (நியூசி எரால்டு)
- நியூயார்க்கில் உள்ள விடுதலைச் சிலை குண்டுப்புரளி ஒன்றை அடுத்துஙகற்றப்பட்டது. (ஏபி)
- ஏப்ரல் 23:
- ஆப்கானித்தான், பாக்கித்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் போது, அல் காயிதாவினால் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க, இத்தாலியப் பணையக் கைதிகள் இருவர் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா அறிவித்தது. இதில் அல்கையாதுடன் தொடர்புடைய மேலும் இரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி),(சிஎன்பிசி)
- ஏப்ரல் 22:
- இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். (பிபிசி),(தி ஐலண்டு)
- பப்புவா நியூ கினியில் வப்பியாகோ, தப்பாமு இனக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 10 பேர் உயிரிந்தனர். குழந்தைகளே அதிகமாக இறந்தனர். (ஏபிசி)
- சிலியின் தெற்கே கல்பூக்கோ எரிமலை வெடித்ததில், 4,000 பேர் இடம்பெயர்ந்தனர். (ராய்ட்டர்சு)
- ஏப்ரல் 21:
- முக்தீசூவில் உணவுச்சாலை ஒன்றில் இடமெப்ற்ற குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டனர். (அல்-ஜசீரா)
- யெமனில் தனது குண்டுத்தாக்குதல்களை நிறுத்துவதாக சவூதி அரேபியா அறிவித்தது. (பிபிசி)
- ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டன்கொக் நாரில் மூவர் உயிரிழந்தனர். (ஏபிசி)
- நடுநிலக் கடலில் 900 பேருடன் மூழ்கிய கப்பலின் தலைவரை இத்தாலியக் காவல்துறையினர் கைது செய்தனர். (ஏபி)
- எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சி பதவியில் இருந்த போது ஆர்ப்பாட்டக்காரரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். (பிபிசி)
- செருமனியில் அவுஷ்விட்சு வதை முகாமின் காவலராக இருந்த முன்னாள் நாட்சி அதிகாரி ஒஸ்கார் கிரோனின் என்பவர் செருமனி நீதிமன்றத்தில் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (பிபிசி)
- ஏப்ரல் 20:
- சீனக் குடியரசின் கிழக்குக் கரையில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்ட்டர்சு)
- ஏப்ரல் 19:
- பெப்ரவரி மாதம் முதல் மியான்மர் தேசிய சனநாயகக் கூட்டணி இர்டாணுவத்தினருடனான சண்டையில் தமது தரப்பில் 126 படையினர் இறதுள்ளதாக மியான்மர் அறிவித்துள்ளது. (சின்குவா)
- ஏப்ரல் 18:
- ஆப்கானித்தான், ஜலாலாபாத் நகரில் இடம்பெற்ற ஒரு தற்கொலைத் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர். (ஆர்டி)
- காஷ்மிரில் பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் காவல்துறையினர் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். (ஏபி)
- தான்சானியாவின் மசலாலா மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)
- நைஜீரியாவின் ஒடே-இரேல் நகரில் மர்ம நோய் ஒன்று பரவியதில் கடந்த ஒரு வாரத்துக்குள் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)
- ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் முதல் உலகப் போர் ஆன்சாக் நாள் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இசுலாமியப் போராளிகளின் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்திருப்பதாக அந்நாட்டின் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். (பிபிசி)
- ஏப்ரல் 17:
- ஈராக்கின் ரமாடி நகரை இசுலாமிய தேசப் போராளிகள் தாக்கியதை அடுத்து அங்கிருந்து 150,000 மக்கள் வெளியேறினர். (ஏபிசி)
- ஏப்ரல் 16:
- ஏமனின் தெற்கே அல் முக்காலா நகரில் உள்ள ரியான் விமானநிலையம், துறைமுகப் பகுதி ஆகியவற்றை அல் காயிதா போராளிகள் கைப்பற்றினர். (ஏபி)
- லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்ற அகதிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 15:
- ஆர்மீனிய இனப்படுகொலையின் 100வது ஆண்டு நிறைவை நினைவு கூர ஐரோப்பிய நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. (ஏபி)
- ஏப்ரல் 14:
- தென் கொரியாவில் இருந்து சப்பான் நோக்கிப் புறப்பட்ட ஏசியானா எயர்லைன்ஸ் ஏர்பஸ் ஆ320 விமானம் இரோசிமா ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் பயணிகள் காயமடைந்தனர். (ஏபி)
- லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் நிலநடுக்கடலில் 550 பேருடன் சென்ற படகு ஒன்று மூழ்கியதில் 400 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. (ஏபிசி)
- தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளிலிருந்து கியூபாவை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் தெரிவித்தார். (நியூயோர்க் டைம்சு)
- பால்கன் 9 ஏந்துகலனை கடலில் இறங்கச் செய்து மீளவும் பயன்படுத்த எசுபேசுஎக்சு எடுத்த மற்றுமொரு முயற்சி தோல்வியில் முடிந்தது. (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 13:
- இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று லிபியா கடற்பகுதியில் மூழ்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். 144 பேர் காப்பாற்றப்பட்டனர். (அன்சா)
- வான்கூவரில் இருந்து இரு விமானிகளுடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று காணாமல் போனது. பிரிட்டிசு கொலம்பியாவில் இதன் பாகக்ங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (குளோபல்)
- தெற்கு சைபீரியாவில் காட்டுத்தீ பரவியதில் 26 உயிரிழந்தனர், 1,300 வீடுகள் சேதமடைந்தன. (ஏஃப்பி)
- ஏப்ரல் 12:
- இசுலாமியப் போராளிகள் திரிப்பொலியில் உள்ள தென்கொரியத் தூதரகத்தைத் தாக்கி இரண்டு பாதுகாப்பு ஊழியர்களைக் கொன்றனர். (யோன்காப்)
- பாக்கித்தான், வடக்கு வசீரித்தானில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் தாலிபான்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- கென்யா, நைரோபி பல்கலைக்கழகத்தில் மின்னியற்றி ஒன்று வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (அல்-அராபியா)
- அமெரிக்காவின் முன்னாள் அரசு செயலர் இலரி கிளின்டன் 1916 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். (த கார்டியன்)
- உதுமானியத் துருக்கி ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார். (ஏபிசி)
- ஏப்ரல் 11:
- யெமனின் தெற்கே இடம்பெற்ற சவூதி வான்படையினரின் தாக்குதலில் குறைந்தது 20 ஹூத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- யெமனில் சண்டையில் சிக்கியிருந்த 4640 இந்தியர்களையும் 960 வெளிநாட்டவர்களையும் இந்தியா அங்கிருந்து வெளியேற்றியது. (நியூயோர்க் டைம்சு)'
- அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமாவும் கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோவும் பனாமாவில் நடந்த அமெரிக்காக்களின் உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். கியூபா புரட்சிக்குப் பின்னர் இரு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதற்தடவையாகும். (ஏபிசி)
- வங்காளதேச ஜமாத்-இ-இசுலாமி தலைவர் முகம்மது கமானுசமான் என்பவர் 1971 விடுதலைப் போரில் குற்றம் இழைத்தமைக்காக தூக்கிலிடப்பட்டார். (தி இந்து)
- ஏப்ரல் 10:
- ஏமனுக்கு எதிரான சவூதி-கூட்டணியில் பாக்கித்தான் சேருவதற்கு எதிராக பாக்கித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது. (அல்-ஜசீரா)
- பாக்கித்தான், பலுச்சிஸ்தான் மாகாணத்தில் 20 தொழிலாளர்கள் துப்பாக்கி நபர்களினால் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 9:
- இந்தியாவின் மிகப் பெரிய, நிறுவன முறைகேடு வழக்குகளில் ஒன்றான சத்யம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி),(மாலைமலர்)
- திபெத்தில் பௌத்த மதபீடங்கள் சீனக் கொடியைத் தமது கட்டடங்களில் பறக்க விட வேண்டும் என கம்யூனிஸ்டுக் கட்சி கேட்டுக் கொண்டது. (ஏபி)
- இத்தாலி மிலன் நகரில் நீதித்துறை மாளிகை மீது துப்பாக்கி நபர்கள் தாக்குதல் நடத்தியதில், நீதிபதி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். (ஏபி) (டெலிகிராப்)
- ஏப்ரல் 8:
- ஆப்கானித்தானில் ஆப்கானியக்ப் படையினருக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் ஒரு ஆப்கானிய வீரரும், ஒரு அமெரிக்கரும் கொல்லப்பட்டனர். ஐவர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- ஏப்ரல் 7:
- ஏமனில் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய சண்டைகளை அடுத்து அங்கு 560 பேர் உயிரிழந்தும், 1,700 பேர் காயமடைந்தும், 100,000 இற்கும் அதிகமானோர் இடம்பெர்ந்தும் உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. (ஏபி)
- பயங்கரவாத சந்தேக நபர்களை விசாரணை எதுவுமின்றி நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க உதவும் சட்டமூலத்தை மலேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. (ஏஎஃப்பி)
- ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியை அடுத்துள்ள வனப்பகுதிய்ல் செம்மரம் கடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 6:
- வங்காளதேசத்தில் வெப்ப மண்டலச் சூறாவளிகள் தாக்கியதில் 36 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஆத்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் ஆகியோரின் மேன்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. (ஏபிசி)
- ஏப்ரல் 5:
- சிலியின் வடக்கே இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 100 பேரைக் காணவில்லை. (சிஎனென்)
- சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள பெரிய ஆட்ரான் மோதுவி மீண்டும் தொடக்கப்பட்டது. (கார்டியன்)
- ஏப்ரல் 4:
- மலேசியாவில் கோலாலம்பூருக்கு வெளியே உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவின் தூதுவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)(சிபிசி)
- ஏப்ரல் 3:
- பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் உலங்கு வானூர்தி ஒன்று குடிருப்புப் பகுதி ஒன்றில் மோதியதில் மாநில ஆளுநரின் மகன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- செருமன்விங்ஸ் விமானம் 9525: விமானம் ஆல்ப்சு மலையில் மோதும் போது வேண்டுமென்றே அதன் வேகம் அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (ராய்ட்டர்சு)(பிபிசி)
- அத்திலாந்திக் பெருங்கடலில் 66 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அமெரிக்க மாலுமி ஒருவர் கடலில் தத்தளித்த போது காப்பாற்றப்பட்டார். (பிபிசி)
- புவியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனை விட எட்டு மடங்கு பெரிதான டபிள்யூ75என்(பி)-விஎல்ஏ2 என்ற புதிய விண்மீனை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
- ஏப்ரல் 2:
- 132 பேருடன் சென்ற உருசிய மீன்பிடிக் கப்பல் ஒன்று கம்சாத்கா தீபகற்பக் கடல் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 54 மாலுமிகள் உயிரிழந்தனர். (பிபிசி)
- கென்யாவின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய அல்-சபாப் தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர். (பிபிசி) (ஏபி)
- யெமனில் அல் காயிதா போராளிகள் அல் முக்காலா சிறையைத் தாக்கி குறைந்தது 270 கைதிகளை விடுவித்தனர். (சீஎனென்)
- செருமன்விங்ஸ் விமானம் 9525: விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. (சீஎனென்)
- ஆர்மீனிய இனப்படுகொலையை நிராகரிப்பது குற்றம் என சைப்பிரசு அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- சண்டைகள் இடம்பெறும் ஏமனில் சிக்குண்டிருந்த சுமார் 350 இந்தியர்கள் அங்கிருந்து இரண்டு இந்திய விமானப் படை விமானக்கள் மூலம் இந்தியா வந்து சேர்ந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 1:
- நைஜீரியாவில் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி 15.4 மில்லியன் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடப்பு தலைவர் குட்லக் ஜொனத்தன் 12.9 மில்லியன் வாக்குகள் பெற்றார். (பிபிசி)
- தாய்லாந்தில் இராணுவச் சட்டத்தை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. (பிபிசி)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
- ஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)
- ஏப்ரல் 8 - நாகூர் அனிபா, இசுலாமியப் பக்திப் பாடகர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ரிச்சி பெனாட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)
- ஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)
- ஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- ஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
- ஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்