கம்சாத்கா தீபகற்பம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கம்சாத்கா தீபகற்பம் (Kamchatka Peninsula, உருசியம்: полуо́стров Камча́тка, பலுஓஸ்திரொவ் கம்சாத்கா) என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது 1250 கிமீ (780 மைல்) நீளமும் 472,300 சதுரகிமீ (182,400 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள்ளது[1].
கம்சாத்கா தீபகற்பம், கொமாண்டர் தீவுகள், கரகின்ஸ்கி தீவு ஆகியவை சேர்ந்த பிரதேசம் உருசியக் கூட்டமைப்பின் நிருவாக அலகுகளில் ஒன்றான கம்சாத்கா கிராய் என அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் 322,079 மக்களில் பெரும்பான்மையோர் உருசியர்கள். இவர்களை விட 8,743 பேர் (2002) கோரியாக்கள் ஆவர். அரவாசிக்கும் மேற்பட்டோர் (179,526 பேர் 2010) பெத்ரொபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி பகுதியிலும், 38,980 பேர் அருகில் உள்ள யெலிசோவோ நகரிலும் வசிக்கின்றனர்.
கம்சாத்கா தீபகற்பத்தில் கம்சாத்காவின் எரிமலைகள் அமைந்துள்ளன. இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kamchatka Peninsula". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.