குட்லக் ஜொனத்தன்

குட்லக் ஜொனத்தன் (Goodluck Ebele Azikiwe Jonathan, பிறப்பு: 20 நவம்பர் 1957) நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவர் ஆவார். இவர் 2005 முதல் 2007 வரை பாயெல்சா மாநில ஆளுநராகவும், 2007, மே 29 முதல் நைஜீரியாவின் பதில் அரசுத்தலைவராகவும் பதவி வகித்தவர். ஆளும் மக்களின் மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினர். 2010 சனவரி 13 இல் அப்போதைய அரசுத்தலைவர் உமரு யராதுவா சுகவீனம் காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றபோது ஜொனத்தன் பதில் அரசுத்தலைவராக நடுவண் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். 24 பெப்ரவரி 2010 இல் யராதுவா நைஜீரியாவுக்கு திரும்பியிருந்த போதும் குட்லக் ஜொனத்தன் பதில் அரசுத்தலைவராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார்[1]. 2010 மே 5 இல் யராதுவா இறந்த பின்னர் ஜொனத்தன் அர்சுத்தலைவர் ஆனார். 2011 ஏப்ரல் 16 இடம்பெற்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை அடுத்து நாட்டின் வட பகுதியில் வன் முறைகள் இடம்பெற்றன[2].

குட்லக் ஜொனத்தன்
Goodluck Jonathan
நைஜீரியாவின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 மே 2010
பதில்: 9 பெப்ரவரி 2010 – 6 மே 2010
துணை அதிபர்நமாடி சாம்போ
முன்னையவர்உமரு யராதுவா
நைஜீரியாவின் உதவி அரசுத்தலைவர்
பதவியில்
29 மே 2007 – 6 மே 2010
குடியரசுத் தலைவர்உமரு யராதுவா
முன்னையவர்அட்டிக்கு அபூபக்கர்
பின்னவர்நமாடி சாம்போ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1957 (1957-11-20) (அகவை 67)
ஓக்பியா, நைஜீரியா
அரசியல் கட்சிமக்களின் மக்களாட்சிக் கட்சி
துணைவர்பேசன்ஸ் ஜொனத்தன்
முன்னாள் கல்லூரிபோர்ட் ஹார்க்கோர்ட் பல்கலைக்கழகம்
தொழில்விலங்கியலாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Nigeria's Goodluck Jonathan 'is acting president'". BBC News (BBC). February 25, 2010. http://news.bbc.co.uk/2/hi/africa/8537718.stm. பார்த்த நாள்: February 25, 2010. 
  2. "Goodluck Jonathan wins Nigeria election". Ghanna Mma. 18 April 2011. http://www.ghanamma.com/2011/04/18/goodluck-jonathan-wins-nigeria-election/. பார்த்த நாள்: 20 April 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லக்_ஜொனத்தன்&oldid=2215819" இலிருந்து மீள்விக்கப்பட்டது