மே 2015
<< | மே 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மே 2015 (May 2015), 2015 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
தொகு- மே 1 - மே நாள்
- மே 1 - உமாபதி சிவாச்சாரியார் குருபூசை
- மே 2 - இசைஞானியார் நாயனார் குருபூசை
- மே 3 - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குருபூசை
- மே 4 - சித்திரா பௌர்ணமி
- மே 12 - திருநாவுக்கரசர் குருபூசை
நிகழ்வுகள்
தொகு- மே 25:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் போரிடும் அரசுக்கெதிரான சில குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக துருக்கி அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- ஈராக்கின் ரமாதி நகரை இசுலாமிய தேசப் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து 55,000 பேர் வெளியேறினர். (சீஎனென்)
- 2015 இந்தியாவில் வெப்ப அலை: ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் இறந்தோர் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்தது. (டைம்சு ஒஃப் இந்தியா)
- சீனாவின் எய்னானில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர், (பிபிசி)
- மே 24:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் குவெய்ராசு நகரில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். (ஏபி)
- 2015 கான் திரைப்பட விழாவில் சோபா சக்தி நடித்த தீபன் என்ற பிரெஞ்சுத் திரைப்படம் சிறந்ட திரைப்படத்துக்கான தங்கப் பனை விருதை வென்றது. (கார்டியன்)
- தாய்லாந்து எல்லைப் பகுதியில் ரோகிஞ்சா குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கருகே ஏராளமான மனிதப் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். (ஏபி)
- நோபல் பரிசு பெற்ற ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்சு)
- 2015 இந்தியன் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. (கிரிக்கின்போ)
- மே 23:
- 1980 இல் சுட்டுக் கொல்லப்பட்ட எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோவிற்கு திருத்தந்தை பிரான்சிசுவினால் அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. (சீஎனென்)
- வெப்ப அலையின் தாக்கத்தினால் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (தி இந்து)
- பர்மாவில் மக்கள்தொகையைக் கட்டுப்ப்படுத்தும் நோக்கில் சில பெற்றோர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் இடைவெளியிலேயே பிள்ளைகளைப் பெற அனுமதிக்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் அறிவித்தார். (ஏபி)
- நெதர்லாந்தில் புரூக்கா, நிக்காப் அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. (கார்டியன்)
- சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். (பிபிசி)
- மே 22:
- இசுலாமிய தேசப் போராளிகள் சிரியா, ஈராக் எல்லைப் பகுதியில் அரசாங்கத்தின் வசம் இருந்த கடைசி இல்லப் பகுதியைக் கைப்பற்றினர். (பிபிசி)
- தமிழக முதலமைச்சர்]] ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். (பிபிசி)
- மே 21:
- சிரியாவின் தாத்முர் நகரைக் கைப்பற்றிய இசுலாமிய தேசப் போராளிகள் பண்டைய பல்மைரா பகுதிக்குள் நுழைந்தனர். (ராய்ட்டர்சு)
- மூன்றாவது நபர் ஒருவருக்கு மத்தியகிழக்கு சுவாச நோய்க்குறி தொற்றியுள்ளதாக தென் கொரியா அறிவித்தது. (யொன்காப்)
- இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகினர். (தினகரன்)
- மே 20:
- இலங்கையின் வடக்கே புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. 1000 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீதிமன்றத்தையும் சிறைச்சாலை வாகனத்தையும் தாக்கினர். 127 பேர் கைது செய்யப்பட்டனர். (தினகரன்), (பிபிசி)
- சிரியாவின் தாத்முர் நகரை இசுலாமிய தேசப் போராளிகள் அரசுப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர். (இந்து)
- கென்யாவின் துர்க்கானா ஏரி அருகே 3.3 மில்லியன் ஆண்டுகள் பழமையான சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (ஏபி)
- பர்மாவின் ரோகிங்கியா அகதிகளைத் தாம் ஏற்பதாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. (ஸ்ட்ரெயிட் டைம்சு)
- மே 19:
- சிரிய உள்நாட்டுப் போர்: திமிஷ்குவில் உள்ள உருசிய தூதரகம் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. (ஆர்டி)
- செருமன்விங்ஸ் விமானம் 9525: கொல்லப்பட்ட அனைத்துப் பயணிகளும் அடையாளம் காணப்பட்டு விட்டதாக பிரான்சு அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- மே 18:
- ஏமனில் சவூதி-தலைமையிலான படைகள் ஹூத்திப் போராளிகள் தளங்கள் ம்மீது மீண்டும் வான்தாக்குதல்களை ஆரம்பித்தன. (பிபிசி)
- ஈராக்கின் ரமாதி நகரை இசுலாமிய தேசம் கைப்பற்றியதை அடுத்து அங்கு 500 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 8,000 இற்கும் அதிகமானோர் வெளியேறினர். (அல்-அராபியா)
- 3,000 ரோகிங்கியா அகதிகளை தாம் பொறுப்பெடுப்பதாக பிலிப்பீன்சு அறிவித்தது. (ராப்லர்)
- மே 17:
- ஈராக்கின் ரமாதி நகரை இசுலாமிய தேசம் கைப்பற்றியது. (பிபிசி)
- பாலத்தீனத்தின் அருட்சகோதரி மரியாம் பவராடி, அருட்சகோதரி மரீ காட்டாசு ஆகியோரை திருத்தந்தை பிரான்சிசு புனிதர்களாக பட்டமளித்தார். (ஏபி)
- உருசிய வானியலாளர்கள் புரோகிரசு விண்கலத்தின் இயந்திரங்களை]]த் திருத்தி மீள இயக்கியதோடு, பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையையும் திருத்தியமைத்தது. (AFP via Yahoo! News)
- மே 16:
- 2011 எகிப்தியப் புரட்சி: எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. (சீஎனென்)
- இசுலாமிய தேச மூத்த தலைவர் அபு சாயெஃப் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என அமெரிக்கா அறிவித்தது. (சீஎனென்)
- மே 15:
- புருண்டியில் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து கிளர்ச்சியாளர்களின் தலைவர் கைது செய்யப்பட்டார். (ராய்ட்டர்சு)
- 2015 நேபாள நிலநடுக்கம்: செவ்வாய்க்கிழமை வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்க உலங்குவானூர்தியின் பகுதிகளுயும், கொல்லப்பட்ட சிலரின் உடற்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (சீஎனென்)
- 2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட ஜோக்கார் த்சர்னாயெவ் என்பவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. (நியூயார்க் டைம்சு)
- மே 14:
- பர்மாவில் இருந்து வெளியேறிய ரோகிங்கியா முசுலிம்கள், மற்றும் வங்காளதேசத்தினர் அடங்கிய 800 இற்கும் அதிகமான அகதிகளைக் கொண்ட இரண்டு படகுகளை மலேசியா திருப்பி அனுப்பியது. (ஏபி)
- இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் காணாமல் போயிருந்த வித்யா என்ற 18 வயது மாணவி கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். (பிபிசி)
- மே 13:
- சிரிய உள்நாட்டுப் போர்: ஹிஸ்புல்லா, மற்றும் சிரிய இராணுவத்தினர் அல் நுஸ்ரா முன்னணியின் வசம் இருந்த வடக்கு தமாஸ்கசுப் பகுதியில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். (அல்ஜசீரா)
- பாக்கித்தான், கராச்சி நகரில் இசுலாமியப் போராளிகள் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்க்ச் சூடு நடத்தியதில் 44 பேர் கொல்லப்பட்டனர். (பாக்கித்தான் டிரிபியூன்), (பிபிசி)
- இசுலாமிய தேச அமைப்பின் இரண்டாவது இராணுவத் தலைவர் அப்துல் ரகுமான் முஸ்தபா முகம்மது என்பவர் கொல்லப்பட்டு விட்டதாக ஈராக்கிய அரசு அறிவித்தது. (பிபிசி)
- பிலிப்பீன்சு, மணிலா நகரில் இரப்பர் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். (சீஎனென்)
- புருண்டியில் இராணுவப் புரட்சி ஒன்று இடம்பெற்றதாக இராணுவத் தலைவர் அறிவித்தார். விமான நிலையம், மற்றும் எல்லைகள் மூடப்பட்டன. (பிபிசி), (ஏஎஃப்பி)
- புருண்டியில் அரசுத்தலைவர் பியேர் நுக்குருன்சீசா மூன்றாம் தடவையும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் புசும்புராவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. (பிபிசி)
- இளைஞர்களை நல்வழிப்படுத்த நவூருவில் முகநூல் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. (ஏபிசி)
- வட கொரியாவில் பாதுகாப்பு அமைச்சர் இயோன் யொங்-சொல் என்பவருக்கு விமான எதிர்ப்புத் தாங்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரியா அறிவித்தது. (சீஎனென்)
- இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. (தினகரன்)
- மே 12:
- அமெரிக்காவில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மதமற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (பியூ ஆய்வு)
- இந்தியாவின் கொல்கத்தா நகரில் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர். (இந்துஸ்தான் டைம்சு)
- 2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத்தில் திபெத்திய எல்லையில் 7/3 அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதில், இந்தியாவில் 17 பேரும், திபெத்தில் ஒருவருமாக மொத்தம் 66 பேர் உயிரிழந்தனர். (எமெசென்), (பிபிசி), (ஏபிசி), (ராய்ட்டர்சு), (என்பிசி)
- 2015 நேபாள நிலநடுக்கம்: நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் உலங்குவானூர்தி ஒன்று நேபாளத்தின் பீமேசுவர் பகுதியில் எட்டுப் பேருடன் காணாமல் போனது. (தி கார்டியன்), (என்பிசி)
- அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பேருந்து ஒன்று தடம் புரண்டதில் 5 பேர் உயிரிழந்தனர். (யூஎஸ்ஏ டுடே)
- வங்காளதேசத்தில் சில்ஹெட் நகரில் ஆனந்த விஜய்தாஸ் என்ற வலைப்பதிவர் வெட்டிக் கொல்லப்பட்டார். (பிபிசி)
- மே 11:
- சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- பாப்லோ பிக்காசோவின் அல்சீரியாவின் பெண்கள் என்ற ஓவியம் $179,365,000 இற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றிலேயே ஓவியம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகமான விலை இதுவாகும். (பிபிசி)
- இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- மே 10:
- 2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 8,000 ஆக அதிகரித்தது. (டைம்சு ஒஃப் ஒந்தியா)
- பர்மாவில் இருந்து 500 ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் இந்தோனேசியாவின் மேற்கே கரையொதுங்கின. (எஸ்பிஎஸ்)
- மே 9:
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்டதூரம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா வெற்றிகரமாகச் சோதித்தது. (சீஎனென்)
- எசுப்பானியாவில் செவீயா நகரில் இராணுவ ஏர்பஸ் ஒன்று வீழ்ந்ததில் மூவர் கொல்லப்பட்டனர். (டெலிகிராப்)
- லைபீரியாவில் எபோலா நோய்த் தாக்கம் முடிவடைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (பிபிசி)
- இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக உருசியா மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் இராணுவ அணிவகுப்பை நடத்தியது. உக்ரைனில் உருசிய ஆதிக்கத்தை எதிர்த்து பல உலக நாடுகள் இந்நிகழ்வை ஒன்றியொதுக்கின.(பிபிசி)
- எகிப்தின் முன்னாள் தலைவர் ஓசுனி முபாரக்குக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (ஏபி)
- மே 8:
- யெமனில் அடுத்தவாரம் செவ்வாய்க் கிழமையில் இருந்து ஐந்து நாட்கள் போர்நிறுத்தத்தை சவூதி அரேபியா அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)
- பாக்கித்தானில் வடக்கு நிலங்கள் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் நோர்வே, பிலிப்பீன்சு தூதர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். (டோன்)
- அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லான்டா நகரில் சிறிய-ரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்தனர். (பிபிசி)
- புர்க்கினா பாசோ, நைஜர் ஆகியன நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையை அடுத்து தமக்கிடையே 18 ஊர்களைப் பகிருவதற்கு உடன்பட்டன. புர்க்க்கினா பாசோவிற்கு 14 ஊர்களையும், நைஜர் 4 ஊர்களையும் எடுத்துள்ளன. (ஏஎஃப்பி)
- ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல், 2015: டேவிட் கேமரன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி இல்லாமல் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. இசுக்கொட்லாந்தில் ஸ்காட்டிய தேசியக் கட்சி 59 இடங்களில் 56 ஆஇக் கைப்பற்றியது. (பிபிசி)
- பிரதமர் டேவிட் கேமரன் எலிசபெத் மகாராணியைச் சந்தித்தார். தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் தலைவர் பதவியில் இருந்து விலகினார். (பிபிசி)
- மே 7:
- நைஜரின் தென்மேற்கே போகோ அராம் போராளிகள் கிராமம் ஒன்றைத் தாக்கியதில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 2015 ஏப்ரலில் 700 குடியேறிகளுடன் மூழ்கிய படகை லிபியாக் கடலில் 375மீ ஆழத்தில் தாம் கண்டுபிடித்திருப்பதாக இத்தாலியக் கடற்படை அறிவித்தது. (ஏஎஃப்பி)
- ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. (தி கார்டியன்)
- மே 6:
- விபத்துக்குள்ளான செருமன்விங்ஸ் விமானம் 9525 இன் இரண்டாவது விமானி மிக விரைவான கீழ் நோக்கிய பயணப் பயிற்சியை தனது முந்தைய பயணத்தின் போது செய்திருந்தார் என பிரெஞ்சு புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். (பிபிசி)
- 2002 இல் மும்பையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டுக்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். (பிபிசி)
- மே 5:
- பப்புவா நியூ கினிக்கு அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் 7.4 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உள்ளூர் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறு சேதங்கள் ஏற்பட்டன. (நைன் செய்திகள்)
- மிகப் பழமையானதும், மிகத் தூரத்திலே உள்ளதுமான ஈ.ஜி.செட்.-செட்.எஸ்.8-1 என்ற விண்மீன் பேரடை ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர். (நியூயோர்க் டைம்சு)
- மே 4:
- வில்லியம், கேத்தரின் ஆகியோரின் மகளுக்கு சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி எனப் பெயரிடப்பட்டது. (நியூஸ்.கொம்)
- நடுநிலக் கடலில் 5,800 குடியேறிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- மே 3:
- 2015 நேபாள நிலநடுக்கம்: காட்மாண்டூ விமான நிலையத்தின் ஓடுபாதை அழுத்தத்தைத் தாங்க இயலாத காரணத்தால், பெரும் வானூர்திகள் அங்கு தரையிறங்குவதற்கு தற்காலிகமாக மூடப்பட்டது. (ஏபி)
- லிபியக் கடற் பகுதியில் 4,100 குடியேறிகளைத் தாம் மீட்டதாக இத்தாலி அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் முகம்மது நபியை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்களைக் கொண்ட கண்காட்சி நடந்த மண்டபத்திற்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- இறைமறுப்பாளர்களுக்கு எதிரான பாகுபாடு சட்டவிரோதமானது என அமெரிக்காவின் மேடிசன் நகரம் சட்டம் கொண்டுவந்தது. (AP, via MSN)
- மே 2:
- நைஜீரியாவில் போகோ அராம் போராளிகளால் கைப்பற்றப்பட்ட மேலும் 234 பெண்கள், மற்றும் சிறுவர்களைத் தாம் விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்தது. (பிபிசி)
- கேம்பிரிட்ச் இளவரசி கேத்தரின் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். (பிபிசி)
- 2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 7,040 ஆக அதிகரித்தது. (சின்குவா)
- மாலைதீவில் அரசுத்தலைவர் யமீன் அப்துல் கயூமுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பட்டங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். (கார்டியன்)
- அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெரி அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார், (பிபிசி)
- அமெரிக்க வெளியுறவுச் செயலரைச் சந்திக்க கொழும்பு வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பகுதியில் அனுமதிக்கப்பட்டார். (பிபிசி)
- மே 1:
- பப்புவா நியூ கினியின் கிழக்கு புதிய பிரித்தானியா மாகாணத்தில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஏபி)
- மெக்சிக்கோவில் ஜலிஸ்கோ மாநிலத்தில் உலங்கு வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் மூன்று படை வீரர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். (ஏபிசி)
- ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். (கூரியர் மெயில்)
இறப்புகள்
தொகு- மே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.
- மே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)
- மே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)
- மே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்