2015 இந்தியாவில் வெப்ப அலை
ஏப்ரல்/மே 2015 வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் மே 26ஆம் நாளது வரை 700க்கும் மேலானவர்களை கொன்றது.[1][2] இந்தியாவில் உலர்ந்த காலநிலை நிலவும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலகட்டத்தில் இந்த வெப்ப அலை நிகழ்ந்தது. [3] மே 24 அன்று, கம்மம் நகரில் 48 °C (118 °F) இருந்தது; இது இதுவரை உயர்நிலை வெப்பமாக இருந்த 1947 ஆண்டு வெப்பநிலையான 47.2 °C (117.0 °F) விடக் கூடுதலாகும்.[4][5]கடல் மட்டத்திலிருந்து 2,010 மீட்டர்கள் (6,580 அடி) உயரத்தில் அமைந்துள்ள, மலைச்சாரல் தலமான, முசோரியில் கூட காற்றின் வெப்பநிலை 36 °C (97 °F) அளவிற்கு உயர்ந்தது.[4]
பதிவான வெப்பநிலைகள்
தொகுநாள் | இடம் | வெப்பநிலை |
---|---|---|
25 மே 2015 | தில்லி | 45.5 °C (113.9 °F) |
21 மே 2015 | ஜார்சுகுடா | 45.4 °C (113.7 °F) |
21 மே 2015 | ஐதராபாது | 46 °C (115 °F) |
23 மே 2015 | அலகாபாத் | 47 °C (117 °F) |
24 மே 2015 | கம்மம் | 48 °C (118 °F) |
எதிர்வினைகள்
தொகுஅரசு உள்ளாட்சி அமைப்புகளை வெப்ப அலையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டது; காலை 11 மணி முதல் 3 மணி வரையான வேலைகளை குறைத்துக் கொள்ளவும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கூர்திகள் மூலம் வழங்கவும் பரிந்துரைத்தது.[6] வங்காள சீருந்து சங்கம் தங்கள் வாடகை வண்டிகளை காலை 11 முதல் மாலை 4 மணி வரை இயக்காதிருக்க முடிவு செய்தது.[7] கொல்கத்தாவில் இரு சீருந்து ஓட்டுநர்கள் மரணமுற்றதைத் தொடர்ந்து குளுரூட்டப்படாத சீருந்துகளை பகலில் ஐந்து மணி நேரம் ஓட்டாதிருக்க முடிவெடுக்கப்பட்டது.[2] மே 23 அன்று குளிரூட்டப்பட்ட மெட்றோ நிலையங்களிலும் அங்காடி வளாகங்களிலும் மக்கள் தஞ்சமடைந்தனர்.[7]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Harmeet Shah Singh; Rishabh Pratap; Ravi Agrawal (26 May 2015). "Heat wave kills more than 700 in India". CNN. http://edition.cnn.com/2015/05/25/asia/india-heatwave-deaths/. பார்த்த நாள்: 26 May 2015.
- ↑ 2.0 2.1 "Massive India heatwave 'kills 500'". பிபிசி. 25 May 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
- ↑ "Число жертв жары в Индии превысило 60 человек" (in Russian). RIA Novosti. 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 "Heatwave sweeps across India, 335 people dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
- ↑ "Hundreds Are Dying in a Blistering Heat Wave Sweeping Across India". Time. 25 May 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
- ↑ "Blazing sun bakes large parts of India, heat wave claims dozens of lives; El Nino effect emerges". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 22 May 2015. Archived from the original on 23 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
- ↑ 7.0 7.1 "Heat wave scorches Kolkata, cabby dies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.