வில்லியம், வேல்சு இளவரசர்

(இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேல்சு இளவரசர் வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி, KG, FRS (பிறப்பு 21 சூன் 1982), ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசுவிற்கும் வேல்சு இளவரசி டயானாவிற்கும் பிறந்த முதல் மகனாவார்.ஐக்கிய இராச்சியத்தின் பட்டத்து அரசி எலிசபெத் II மற்றும் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோரின் பேரனும் ஆவார். அவரது தந்தையை அடுத்து ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆட்சித் தலைமைக்கு உரிமை உடையவர்.

இளவரசர் வில்லியம்
Prince William
'ஹிஸ் ராயல் ஹைனஸ் கேம்பிரிட்ஜ் கோமகன்
2021 சூன் 29 இல் இளவரசர் வில்லியம்
பிறப்பு21 சூன் 1982 (1982-06-21) (அகவை 42)
புனித மேரி மருத்துவமனை, லண்டன்
துணைவர்கேத்தரின், வேல்சு இளவரசி
பெயர்கள்
வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி[N 1]
மரபுவின்சர் மாளிகை
தந்தைமூன்றாம் சார்ல்ஸ்
தாய்டயானா, வேல்ஸ் இளவரசி

ஐக்கிய இராச்சியத்தின் பல பள்ளிகளில் தமது கல்வியை மேற்கொண்டு இறுதியில் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கல்வி இடைவெளிகளில் சிலி, பெலீசு மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் காலம் கழித்தவர், இராணுவத்தில் சேர்ந்தார்.இவரது இளவலான வேல்சு இளவரசர் ஹாரியுடன் குதிரைப்படையில் துணைநிலை படையதிகாரியாக (lieutenant) பணியாற்றினார்.[2] இரண்டாண்டுகள் கழித்து கிரான்வெல் அரச வான்படை கல்லூரியில் வானூர்தி ஒட்டல் பயிற்சி பெற்றார்.[3] 2009ஆம் ஆண்டு, வான்படைக்கு மாற்றப்பட்டு பறத்தல் துணைநிலை அதிகாரியாக உயர்வு பெற்றார். அங்கு உலங்கு வானூர்தி பறத்தலில் தேடல் மற்றும் நிவாரணப்படையில் சேரும் எண்ணத்துடன் பயிற்சி பெற்றார்.[4][5] 2010 இலையுதிர்காலத்தில், தமது பயிற்சிகளை முடித்து துணை வானூர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.ஏப்ரல் 29, 2011 அன்று, இவர் தமது நீண்டநாள் தோழி கேட் மிடில்டனை இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் மணந்தார்.

பட்டங்கள்

தொகு
  • 21 சூன் 1982  – 29 ஏப்ரல் 2011: HRH வேல்சு இளவரசர்
  • 29 ஏப்ரல் 2011  – 8 செப்டம்பர் 2022 : HRH கேம்பிர்ட்ஜ் கோமகன்
  • 8 செப்டம்பர் 2022  – இன்று: HRH வேல்ஸ் இளவரசர்

அடிக்குறிப்புகள்

தொகு
  1. அரச குடும்ப வாரிசாகையால், இவருக்கு குடும்பப் பெயர் கிடையாது, இருப்பினும், அப்படி ஒன்று இருந்தால் , அது மவுண்ட்பாட்டன் வின்ட்சர் (அல்லது, வழக்குமொழியில், அவரது தந்தையின் ஆட்சிப் பட்டமான, வேல்சு); பிப்ரவரி 1960 கடிதங்களின்படி, இவரது வீட்டு மற்றும் குடும்பப் பெயர் வின்சர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "alt.talk.royalty FAQ: British royalty and nobility:". Heraldica.org. பார்க்கப்பட்ட நாள் 12 October 2008.
  2. "BBC NEWS | UK | William joining Harry's regiment". BBC News. Last Updated:. http://news.bbc.co.uk/1/hi/uk/5367862.stm. பார்த்த நாள்: 15 October 2008. 
  3. "Kate watches William get his wings - World - smh.com.au". Sydney Morning Herald. 12 April 2008. http://www.smh.com.au/news/world/kate-watches-william-get-his-wings/2008/04/12/1207856847954.html. பார்த்த நாள்: 15 October 2008. 
  4. "Prince William ready for Search and Rescue role". www.meeja.com.au. 16 September 2008. Archived from the original on 19 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 16 September 2008.
  5. Pierce, Andrew (13 January 2009). "Prince William starts as a search and rescue helicopter pilot". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101024234504/http://www.telegraph.co.uk/news/newstopics/theroyalfamily/4218703/Prince-William-starts-as-a-search-and-rescue-helicopter-pilot.html. பார்த்த நாள்: 18 January 2009. 


வெளியிணைப்புகள்

தொகு