இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்
எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்பு (Prince Philip, Duke of Edinburgh, பிறப்பு: கிரேக்கம் மற்றும் தென்மார்க்கின் இளவரசர் பிலிப்பு; 10 சூன் 1921[N 1] – 9 ஏப்ரல் 2021) ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் கணவராவார். பிரித்தானியாவின் மிக நீண்டகாலம் வாழ்ந்த உடனுறை துணையும் அரசாட்சி புரியும் ஒருவரின் மிக முதுமையான வாழ்க்கைத்துணையும் ஆவார்.[2]
இளவரசர் பிலிப் | |
---|---|
1992ஆம் ஆண்டில் இளவரசர் பிலிப் | |
எலிசபெத் அரசியின்உடனுறை கணவர் | |
Tenure | 6 பெப்ரவரி 1952 – 9 ஏப்ரல் 2021 |
எடின்பரோ கோமகன் | |
Tenure | 20 நவம்பர் 1947 – 9 ஏப்ரல் 2021 |
பிறப்பு | வில்லா மான் ரெபோசு, கோர்ஃபூ, கிரேக்க இராச்சியம் | 10 சூன் 1921
இறப்பு | 9 ஏப்ரல் 2021 வின்ட்சர் கோட்டை, வின்ட்சர், ஐக்கிய இராச்சியம் | (அகவை 99)
புதைத்த இடம் | 17 ஏப்பிரல் 2021 ராயல் வால்ட்,புனித ஜார்ஜ் தேவாலயம், வின்ட்சர் கோட்டை; 19 செப்டெம்பர் 2022 கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பல்,புனித ஜார்ஜ் தேவாலயம் |
துணைவர் | எலிசபெத் II |
குழந்தைகளின் பெயர்கள் | வேல்சு இளவரசர் சார்லசு ஆன், இளவரசி ராயல் இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் இளவரசர் எட்வர்டு |
மரபு | குலுக்ஸ்பெர்க் இல்லம் |
தந்தை | கிரீசு மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆன்ட்ரூ |
தாய் | பாத்தென்பெர்க்கின் இளவரசி அலைசு |
மதம் | ஆங்கிலேய முன்னர். கிரேக்க மரபுவழி திருச்சபை |
இளவரசர் பிலிப்பு கிரேக்கம் மற்றும் தென்மார்க்கு அரச குடும்பங்களில், கிரேக்கத்தில் பிறந்தார். இவர் பிறந்து 18 மாதங்களில் இவரது குடும்பம் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டது. பிரான்சு, செருமனி, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் கல்வி கற்றபின், 1939 இல், தனது 18-வது அகவையில், பிரித்தானிய அரச கடற்படையில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நடுநிலக் கடல், பசிபிக் கடற்படைகளில் தனித்துவத்துடன் பணியாற்றினார்.
உலகப் போருக்குப் பிறகு, எலிசபெத்தை திருமணம் செய்ய ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னர் பிலிப்புக்கு அனுமதி வழங்கினார். 1947 சூலையில் அவர்களின் திருமண நிச்சயம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னர், இளவரசர் பிலிப்பு தனது கிரேக்க மற்றும் தென்மார்க்குப் பட்டங்களைக் கைவிட்டு, இயற்கையான பிரித்தானியராக மாறி, அவரது தாய்வழிப் பாட்டா, பாட்டிகளின் குடும்பப்பெயரான மவுண்ட்பேட்டனை ஏற்றுக்கொண்டு, பிலிப் மவுண்ட்பேட்டனானார். பிலிப்பு-எலிசபெத்து திருமணம் 1947 நவம்பர் 20 இல் நடைபெற்றது. "எடின்பரோ கோமகன்", "மெரியோனெத் கோமகன்", "கிரீனிச் பிரபு" ஆகிய பட்டங்களை மன்னர் ஜார்ச் அவருக்கு வழங்கினார். 1952 ஆம் ஆண்டில் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டியதை அடுத்து, பிலிப்பு தீவிர இராணுவ சேவையில் இருந்து விலகினார். 1957 இல் இவர் பிரித்தானிய இளவரசர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[3] பிலிப்புக்கு எலிசபெத்துடன் நான்கு குழந்தைகள் பிறந்தனர்: வேல்சு இளவரசர் சார்லசு; இளவரசி ஆன், யார்க் கோமகன் இளவரசர் ஆன்ட்ரூ; மற்றும் வெசெக்சு கோமகன் இளவரசர் எட்வர்டு ஆகியோர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Higham, Charles (1991), Elizabeth and Philip: The Untold Story, Sidgwick & Jackson, p. 73, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0283998873
- ↑ "Prince Philip breaks royal record". Nine News. 18 ஏப்ரல் 2009 இம் மூலத்தில் இருந்து 2009-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090421071506/http://news.ninemsn.com.au/world/803155/prince-philip-marks-57-years-as-consort. பார்த்த நாள்: 18 ஏப்ரல் 2009.
- ↑ "No. 41009". இலண்டன் கசெட். 22 February 1957. p. 1209.
அடிக்குறிப்பு
தொகு- ↑ கிரெகொரியின் நாட்காட்டியில் சூன் 10,1921 அன்று பிறந்தார்.அவர் பிறந்த கிரீசில் மார்ச் 1,1923ஆம் ஆண்டு வரை யூலியின் நாட்காட்டி புழக்கத்தில் இருந்தது; அதன்படி பிறந்தநாள் மே 28, 1921 ஆகும்.[1]
வெளி இணைப்புகள்
தொகு- Royal.gov.uk- HRH Prince Philip, Duke of Edinburgh
- Duke of Edinburgh Award பரணிடப்பட்டது 2006-02-14 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்
- In the Words of Prince Philip பரணிடப்பட்டது 2011-12-06 at the வந்தவழி இயந்திரம் - slideshow by Life magazine