ஜனவரி 2008
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 2008, 2008 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் ஜனவரி 15 இல் தொடங்கி பெப்ரவரி 12 இல் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஜனவரி 27 - இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் சுகார்ட்டோ காலமானார். (பிபிசி)
- ஜனவரி 23 - கொங்கோ சனநாயகக் குடியரசு அரசுக்கும் ஹுரு இனப் போராளிக் குழுவிற்கும் இடையில் அமைதி உடன்படிக்கையொன்று எட்டப்பட்டது. (பிபிசி)
- ஜனவரி 23 - வடக்கு போலந்தில் மிரொசிலாவியெச் என்ற இடத்தில் விமானப்படை விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் உயர் வான்படை அதிகாரிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜனவரி 23 - காசாவில் எல்லைச் சுவர் உடைக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்க்கணக்கான பாலஸ்தீனர்கள் தமது அத்தியாவசியத் தேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக எகிப்தினுள் நுழைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 22 - இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ஏழு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. (ராய்ட்டர்ஸ்)
- ஜனவரி 17 - லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பீஜிங்கில் இருந்து வந்த பிரித்தானிய ஏர்வேசின் 777 போயிங் விமானம் அவசரமாகப் புற்றரையில் தரையிரங்கியதில் 19 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 16 - டஹினா ஸ்பெக்டாபிலிஸ் (Tahina spectabilis) என்ற பூத்தவுடனே இறக்கும் ஒரு தென்னை போன்ற தாவரம் வடக்கு மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- ஜனவரி 15 - இஸ்ரேலியரின் தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 55 பேர் படுகாயமடைந்தனர். ஹமாஸ் இயக்கத் தலைவர் மஹ்மூட் சஹாரின் மகனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். (வாஷிங்டன் போஸ்ட்)
- ஜனவரி 14 - நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளை அண்மித்தது. புதனை அண்மித்த இரண்டாவது விண்கலம் இதுவாகும். (பிபிசி)
- ஜனவரி 11 - முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறிய நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி காலமானார். (பிபிசி)
- ஜனவரி 9 - இந்தியாவின் டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த டாட்டா நனோ என்ற தானுந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.(பிபிசி)
- ஜனவரி 8 - மாலைதீவு அதிபர் மௌமூன் அப்துல் கையூம் கத்திக்குத்து தாக்குதலொன்றிலிருந்து உயிர் தப்பினார். (பிபிசி)
- ஜனவரி 7 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு பகுதியில் 20 ஆண்டுகளின் பின்னர் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. (பிபிசி)
- ஜனவரி 3 - ஐக்கிய அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்ய அயோவா மாநிலத்தில் நிகழ்ந்த தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். (பிபிசி)
- ஜனவரி 1 - மேற்கு கென்யாவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கலவரங்களின் போது இடம்பெயர்ந்திருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். (கூகில் நியூஸ்)
- ஜனவரி 1 - சைப்பிரஸ், மால்ட்டா ஆகியன யூரோவை தமது அதிகாரபூர்வ நாணயங்ககளாக ஏற்றுக் கொண்டன. ((பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜனவரி 31 - யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 31 - யாழ்ப்பாணம், தென்மராட்சியில் உள்ள மட்டுவிலில் மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 29 - மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 25 - போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (தமிழ்வின்)
- ஜனவரி 25 - கிளிநொச்சியில் விவேகானந்த நகரில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (தமிழ்நெட்)
- ஜனவரி 24 - அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவயில் 16 சடலங்கள் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு குழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (புதினம்)
- ஜனவரி 23 - இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வ கட்சி ஆலோசனை குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. (தினக்குரல்)
- ஜனவரி 21 - மொனறாகலை மாவட்டத்தில் தனமன்வில பகுதியில் அமைந்திருந்த காவல்துறைக் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 17 - மொனறாகலை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 17 - கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் பாடசாலை மற்றும் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இலங்கை வானூர்திகள் 20-க்கும் அதிகமான குண்டுகளை வீசியதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர். 8 வீடுகள் முற்றாக அழிந்தன. (புதினம்)
- ஜனவரி 16 - இலங்கையின் மொனறாகலை மாவட்டத்தில் புத்தள என்ற இடத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டு 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 14 - மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜனவரி 14 - ஹொரவபொத்தான மற்றும் வவுனியாவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் 4 இலங்கைப் படையினரும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டனர். (பதிவு)
- ஜனவரி 12 - மட்டக்களப்பு, காத்தான்குடியில் கர்பால பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பள்ளிவாசலின் பிரதம இமாம் உட்பட மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 11 - கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். (புதினம்)
- ஜனவரி 8 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர். (தமிழின்வெற்றி)(புதினம்)
- ஜனவரி 6 - மன்னார் இலுப்பைக்கடவையில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்ள்ஸ் உள்ளிட்ட 4 போராளிகள் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 4 - முல்லைத்தீவு, அளம்பில், உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் செறிவாக நடத்திய குண்டுவீச்சில் 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 4 - அம்பாறையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 3 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 அன்று இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக அக்குழு தெரிவித்தது. (புதினம்)
- ஜனவரி 3 -கெபிதிகொல்லாவையில் அமுக்கவெடியில் சிக்கி மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (தமிழின்வெற்றி), (டெய்லி மிரர்)
- ஜனவரி 2 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது. (புதினம்), (தமிழ்நெட்)
- ஜனவரி 2 -கொழும்பு கொம்பனித் தெருவில் நிப்பொன் உண்டுறை விடுதிக்கு முன்பாக இலங்கைப் படைத்துறையினர் பயணித்த பேருந்து மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 படையினர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். (பிபிசி), (தமிழின் வெற்றி)
- ஜனவரி 1 - கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்), (தமிழ்நெட்)
இறப்புகள்
தொகு- ஜனவரி 1 - தியாகராஜா மகேஸ்வரன், கொழும்பு நாடாளுமன்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்
- ஜனவரி 10 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஜனவரி 11 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
- ஜனவரி 15 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938
- ஜனவரி 17 - பொபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)
- ஜனவரி 22 - ஹீத் லெட்ஜர்,, ஹாலிவூட் நடிகர் (பி. 1979)
- ஜனவரி 26 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
- ஜனவரி 27 - சுகார்ட்டோ, இந்தோனீசியாவின் 2வது அதிபர் (பி. 1921)
- ஜனவரி 28 - செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்