மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

(ஜனநாயகக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி என்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்று. மற்றது ரிப்பப்ளிக்கன் கட்சி.[1][2][3]

மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

ஐக்கிய அமெரிக்காவில் தற்பொழுது (2007ல்) உள்ள 110 ஆவது காங்கிரசு என்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் டெமாக்ரட்டிக் கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையராக உள்ளனர்.

வரலாற்று நோக்கில், இன்றுள்ள டெமாக்ரட்டிக் கட்சியானது 1792ல் தாமஸ் ஜெஃவ்வர்சன் அவர்கள் துவக்கிய டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் கட்சியில் இருந்து தோன்றியதாகும். இதுவே உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளினும் தொன்மையானது. டெமாக்ரட்டிக் கட்சி என்னும் பெயர் 1830களின் நடுவில் இருந்தே பெற்றுள்ளது.

1912ல் ரிப்பப்ளிக்கன் கட்சி அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களினத்தைப் போற்றும் கொள்கைகளைக் கொண்ட ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட் அவர்களுடைய முற்போக்கு இசைவுடைய கொள்கைகள் இக் கட்சியின் செயற்பாடுகளை 1932 முதல் தாக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது. 1960களில் அடிமை முறைகளை எதிர்த்து பொது சம உரிமை இயக்கத்தை வலுவாகப் போற்றி முன்னுந்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரவலாக பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் கொள்கைகள் உடையதாக இக் கட்சி இருந்து வந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "About the Democratic Party". Democratic Party. Archived from the original on April 6, 2022. பார்க்கப்பட்ட நாள் April 15, 2022. For 171 years, [the Democratic National Committee] has been responsible for governing the Democratic Party
  2. Democratic Party (March 12, 2022). "The Charter & The Bylaws of the Democratic Party of the United States" (PDF). p. 3. Archived (PDF) from the original on March 27, 2022. பார்க்கப்பட்ட நாள் April 15, 2022. The Democratic National Committee shall have general responsibility for the affairs of the Democratic Party between National Conventions
  3. Cole, Donald B. (1970). Jacksonian Democracy in New Hampshire, 1800–1851. Harvard University Press. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-67-428368-8.