பிராங்க்ளின் ரூசவெல்ட்

1933 முதல் 1945 வரை இருந்த அமெரிக்க அதிபர்
(ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
Franklin Delano Roosevelt
ஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1933 – ஏப்ரல் 12, 1945
துணை அதிபர்ஜோன் கார்னர் (1933–1941),
ஹென்றி வொலஸ் (1941–1945),
ஹாரி எஸ். ட்ரூமன் (1945)
முன்னையவர்ஹேர்பேர்ட் ஹூவர்
பின்னவர்ஹாரி எஸ். ட்ரூமன்
நியூயோர்க்கின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1929 – டிசம்பர் 31, 1932
Lieutenantஹேர்பேர்ட் லேமன்
முன்னையவர்அல்பிரட் ஸ்மித்
பின்னவர்ஹேர்பேர்ட் லேமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1882-01-30)சனவரி 30, 1882
ஹைட் பார்க், நியூயார்க்
இறப்புஏப்ரல் 12, 1945(1945-04-12) (அகவை 63)
வோர்ம் ஸ்ப்றிங்ஸ், ஜோர்ஜியா
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
துணைவர்எலனோர் ரூஸ்வெல்ட்
முன்னாள் கல்லூரிஹார்வர்டு பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்
கையெழுத்து

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் நியூயார்க்கில் ஹைடி பார்க் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஜேம்ஸ் ரூஸ்வெல்ட் வணிகத் தொழில் செய்தார். ஜேம்ஸ் ரூஸ்வெல்ட், சாரா ஆன் திலானோ ஆகியோர் இவரது பெற்றோர். இவரது பெற்றோரின் குடும்பத்தார் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இளவயதில் அதிக முறை ஐரோப்பாவிற்குச் சென்று வந்ததால், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பேசக் கற்றார். குதிரையேற்றம், போலோ, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுத் தேந்தார். பதின்வயதில் கோல்ப் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். மாசாசூசெட்ஸ் குரோடன் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் எண்டிகோட் பீபாடி இவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இவரின் திருமணத்தின் பொழுதும், அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இவர் ஹார்வர்டு கல்லூரியில் பயின்றார். ஹார்வர்டு கிரிம்சன் என்ற நாளேட்டின் முதன்மை ஆசிரியராகவும் விளங்கினார்.

திருமண வாழ்க்கை

தொகு

இவர் எலியனேர் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார்.[1] இவரது இளவயது திருமணத்தை இவரது தாயார் ஏற்கவில்லை. எலியனேரின் மாமா திருமணத்தை நடத்தினார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இளம் தம்பதியினர் ஹைடி பார்க் என்ற அவரது குடும்பத்தின் ஸ்ப்ரிங்வூட் நகரத்திற்கு குடியேறினர், அங்கு ரூசவெல்ட்டின் தாயார் அடிக்கடி வீட்டிற்கு விருந்தாளியாக வந்து சென்றார், எலியனேர் மிகவும் அதிகமான அதிருப்திக்குள்ளானார். 1941 ஆண்டு வரை அவரது தாயார் இறப்பு வரை அந்த வீடு ரூசவெல்ட்டின் தாயார்க்கு சொந்தமாக இருந்தது. கூடுதலாக, ஃபிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் அவரது தாய் சாரா நியூயார்க் நகரத்தில் இளம் தம்பதியினருக்கு அவர்கள் புதிதாக நன்கு திட்டமிட்டு ஒரே மாதிரியாக இருக்குமாறு புதிய இரட்டை வீடுகளை கட்டி முடித்தனர்;[2] அந்த வீடுகளின் ஒவ்வொரு தளத்திலும் இணைப்புகளை வைத்து இரட்டை வீடுகளை கட்டியிருந்தனர். எலியனேர் தனது சொந்த வீட்டில் வசிப்பதாக என்றுமே அவர் உணர்ந்ததில்லை.

சுயசரிதை எழுத்தாளர் ஜேம்ஸ் மேக்ரிகோர் பர்ன்ஸ் இளைஞரான ரூசவெல்ட் தன்னம்பிக்கை மற்றும் மேல் வர்க்கத்தினராக இருந்தார் என்றார். இதற்கு மாறாக, எலியனேர் அந்த சமயத்தில் சமூக வாழ்க்கையை வெட்கமாகவும் வெறுப்பாகவும் இருந்தார், முதலில் தங்களுடைய பல குழந்தைகளை வளர்க்க வீட்டிலேயே தங்கினார். எலியனேர் அவர்களுக்கு ஆறு குழந்தைகள் இருந்தன:

  • அண்ணா எலினோர் ரூஸ்வெல்ட் (1906 - 1975)
  • ஜேம்ஸ் ரூஸ்வெல்ட் II (1907 - 1991)
  • ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் (1909 - 1909)
  • எலியட் ரூஸ்வெல்ட் (1910 - 1990)
  • ஃப்ராங்க்ளின் டெலோனோ ரூஸ்வெல்ட் ஜூனியர் (1914 - 1988)
  • ஜான் அஸ்பின்வால்ல் ரூஸ்வெல்ட் II (1916 - 1981)

ஆரம்ப அரசியல் வாழ்க்கை

தொகு

மாநில செனட்டர் மற்றும் (Tammany) ஊழல் அமைப்பின் எதிர்ப்பாளர்

தொகு

1910 ஆம் ஆண்டின் மாநிலத் தேர்தலில் ரூசவெல்ட், நியூயார்க் மாநில செனட் மாவட்டத்தில் உள்ள ஹைடி பார்க் அருகே டச்சு கவுண்டியில் போட்டியிட்டார். இந்தப் பகுதியில் குடியரசுக் கட்சியிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது, 1856 முதல் எந்த ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் இந்த பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. ரூசவெல்ட் அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவராக இருந்தார் மேலும் அவரது உறவுக்காரர் தியோடர் குடியரசுக் கட்சியில் இருந்தார் அதனால் ஜனநாயகக் கட்சி ரூசவெல்ட்டை வேட்பாளராக அறிவித்தது. ரூசவெல்ட் தனது தேர்தல் பிரசாரத்திற்குத் தேவையான செலவுகளை தாமே ஏற்றுக்கொண்டார். அவரது தேர்தல்ப் பிரசாரம் விருவிருப்பாகவும் மற்றும் ஆக்கிரோசத்துடனும் இருந்தது. அதனால் அந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றார். ரூசவெல்ட் பெயர் ஹட்சன் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. [3]

சனவரி 1, 1911 இல் செனட் உறுப்பினராக பதவிப் பிராமானம் எடுத்துக் கொண்ட ரூசவெல்ட், உடனடியாக மாநில ஜனநாயகக் கட்சியை ஆதிக்கம் செலுத்திய (Tammany) தம்மானி முதலாளித்துவத்தை எதிர்த்த "கிளர்ச்சியாளர்களின்" குழுவின் தலைவர் ஆனார். சனவரி 16, 1911 இல் ஜனநாயகக் கட்சித் தலைமையுடன் தொடங்கிய அமெரிக்கா செனட் தேர்தல் 74 நாட்களுக்கு இரு பிரிவுகளின் போராட்டத்தால் முடக்கப்பட்டது, புதிய செனட் உறுப்பினரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் வில்லியம் எஃப். ஷீஹன் இந்த சூழலை "தம்மானியின் முழு வலிமை" என்று விவரித்தார். (அமெரிக்க செனட்டர்களின் பிரபலமான தேர்தல், அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை நடைபெறவில்லை) மார்ச் 31 ஆம் தேதி சமரச வேட்பாளர் ஜேம்ஸ் ஏ.ஓ.கோர்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரி ரூசவெல்ட்டிற்கு தேசிய வெளிப்பாடு மற்றும் அரசியல் தந்திரோபாயங்கள் மற்றும் சில அனுபவ ஆலோசனைகளை வழங்கினார்; தம்மானி குழுவின் தலைவர் ஒருவர் ரூசவெல்ட்டை உடனடியாக ஜனநாயகக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் ஏனென்றால் ரூசவெல்ட் உறவுக்காரரால் குடியரசுக் கட்சியில் ஏற்படுத்திய பாதிப்பைப் போல் ரூசவெல்டும் ஏற்படுத்துவார் என்று எச்சரித்தார். நியூயார்க் ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் விரைவில் ரூஸ்வெல்ட் பிரபலமானவராக ஆனார், இருப்பினும் அவர் இதுவரை ஒரு சிறந்த பேச்சாளராக இன்னும் மாறவில்லை. அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் "ரூஸ்வெல்ட்டின் இரண்டாவது வருகையை" சித்தரிக்கத் தொடங்கியது."ரூஸ்வெல்ட் இரண்டாவது வருகை தம்மானி கூட்டத்திற்கு குளிர்க் காய்ச்சல் ஏற்படுவதாக சித்தரித்தது". [4]

கடற்படை துணை செயலாளர்

தொகு

1913 இல் கடற்படை துணைத் தளபதி ஜோசப்ஸ் டேனியல்ஸின் செயலாளராக கடற்படை துணைச் செயலாளராக ரூசவெல்ட் நியமிக்கப்பட்டார். ரூசவெல்ட் கடற்படைக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு கொண்டிருந்தார் - அவர் ஏற்கனவே கிட்டத்தட்ட 10,000 கடற்படை சம்பந்தமான புத்தகங்களை சேகரித்திருந்தார், மேலும் அனைத்தையும் வாசிக்கச் செய்ததாகவும் கூறினார்-மற்றும் அவரது முதலாளி டேனியல்ஸ் ஒரு பெரிய மற்றும் திறமையான கடற்படை சக்தியை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். [5][6] துணை செயலாளராக ரூசவெல்ட் கடற்படை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை செய்தார். இதன் காரணமாக அமெரிக்க கடற்படை ரிசர்வ் படை நிறுவப்பட்டது. அட்மிரல் வில்லியம் பென்சன் போன்ற பிற்போக்குத்தனமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக அவர் "எந்தவொரு பயன்பாட்டையும் கருவியாகக் கருதிக் கொள்ள முடியாது" என்று கூறிய ரூசவெல்ட் - போருக்குப் பின்னர் கடற்படையின் விமானப் பிரிவின் பாதுகாப்பை பலப்படுத்த தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார்.[7] பில்லி மிட்செலின் போர் கப்பல்களை மூழ்கடிக்கும் குண்டுகள் பற்றி வெளிப்படையாக எச்சரிக்கைகள் செய்தாலும்,[8] ரூசவெல்ட் செனட் தலைவர்களுடனும் ஏனைய அரசாங்கத் துறைகளோடும் கடற்படை திட்டங்களுக்கான நிதிப் பெற பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் டெய்லரின் "நிறுத்து-கண்காணிப்பு" முறைமையை எதிர்த்தார், இது கப்பல் கட்டுப்பாட்டு மேலாளர்களால் பாராட்டப்பட்டது, ஆனால் தொழிற்சங்கங்கள் எதிர்த்தது. கடற்படை அலுவலகத்தில் தனது ஏழு ஆண்டுகால அனுபவத்தில் ஒரு தனி தொழிற்சங்க வேலைநிறுத்தம் [9] கூட ஏற்படாமல் பார்த்துக்கொண்டார், இதில் ரூசவெல்ட் தொழிலாளர் பிரச்சினைகள், போர்க்கால, கடற்படை பிரச்சினைகள் மற்றும் தளவாடங்கள், எதிர்கால அலுவலகத்திற்கான அனைத்து மதிப்புமிக்க தகுதிகள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். [10]

துணை ஜனாதிபதிக்கான பிரச்சாரம்

தொகு

1920 ஆம் ஆண்டு ஜனநாயக தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக, ஓஹியோவின் கவர்னர் ஜேம்ஸ் எம். காக்ஸ் உடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக ரூசவெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்வு பெரும்பாலான மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தபோதிலும், ரூசவெல்ட் ஒரு மிதமான, ஒரு வில்சோனியஸம், மற்றும் புகழ் ஆகிய பண்புகளை பெற்றிருந்ததால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சமநிலையை உருவாக்கினார். ரூசவெல்ட், ஜனாதிபதி தேர்தலில் கட்சியால் வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டபோது குடியரசு கட்சியின் தியோடாரைவிட நான்கு வயது இளயவராக இருந்தார். காக்ஸ்-ரூசவெல்ட் ஜோடி குடியரசுக் கட்சியினரின் வேட்பாளர்களான வாரன் ஜி. ஹார்டிங் மற்றும் கால்வின் கூலிட்ஜ் ஆகியோரால் ஜனாதிபதி தேர்தலில் பரந்த வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தொழில்முறை சட்டப் பயிற்சி செய்வதற்கு ரூஸ்வெல்ட் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பினார், புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட நியூயார்க் சிவிடான் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.[11]

நியூயார்க் மாநில ஆளுநர்

தொகு

1920 களில், குறிப்பாக நியூயார்க்கில், ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புபட்டிருந்த மற்றும் தொடர்புடையவர்களை ரூசவெல்ட் பலப்படுத்துவதற்கான வேலைகளை செய்தார். அவர் ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தின் (Tammany) தம்மானி அமைப்பிற்கு ஒரு எதிராளியாக இருந்த போதிலும், அந்த குழுவினரின் தனக்கு எதிரான நிலைப்பாட்டை ரூசவெல்ட் முறியடித்தார். 1922 ஆம் ஆண்டில் நியூயார்க் ஆளுநராக ஆல்ஃபிரட் ஈ. ஸ்மித் தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் 1924 ஆம் ஆண்டில் அவரது உறவினர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தியோடர் ஜூனியர் ஆகியோருக்கு எதிராகவும் ஸ்மித்தின் ஆதரவாளராகவும் இருந்தார். [12] 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ரூசவெல்ட் ஸ்மித்திற்கு ஆதரவாக உரையாற்றினார் மேலும் ஸ்மித்திற்கு ஆதரவாக வேட்பு மனுக்களை வழங்கினார்; 1924 தேர்தலில் நடந்த பிராச்சாரத்தின் மூலம் ரூசவெல்ட் பொது வாழ்விற்குத் திரும்பினார். [13]

1928 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்மித் அறிவிக்கப்பட்டதால், ஸ்மித் ரூசவெல்ட்டை மாநிலத் தேர்தலில் ஆளுநராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஜனநாயகக் கட்சியின் சார்பாக ரூசவெல்ட்டை நியூயார்க் மாநில ஆளுநராக நியமித்தனர். ஸ்மித் ஜனாதிபதி தேர்தலில், அவரது சொந்த மாநிலத்தில் தோற்கடிக்கப்பட்டாலும், ரூசவெல்ட் தேர்தலில் ஒரு சதவிகிதம் வித்தியாசத்தில் நியூயார்க் மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14] ஒரு சீர்திருத்த ஆளுநராக, அவர் பல புதிய சமூக திட்டங்களை நிறுவினார், மேலும் பிரான்சஸ் பெர்கின்ஸ் மற்றும் ஹாரி ஹாப்கின்ஸ் ஆகியோரின் அறிவுறைகளை பெற்றார். [15]

மேற்கோள்கள்

தொகு
  1. "President Roosevelt Gives The Bride Away; His Niece Weds His Cousin, Franklin Delano Roosevelt. Ceremony At Parish Home: The Bride, Miss Eleanor Roosevelt, the Daughter of President's Only Brother". The New York Times. March 18, 1905. http://select.nytimes.com/gst/abstract.html?res=F20717F8385E12738DDDA10994DB405B858CF1D3. பார்த்த நாள்: March 2, 2013. 
  2. McJimsey, George T. (2001). Documentary History of the Franklin D. Roosevelt Presidency: The bank holiday and the emergency banking act, March 1933. University Publications of America. p. xxviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55655-780-4.
  3. Burns 1956, ப. 34.
  4. Gunther 1950, ப. 205–206.
  5. Burns 1956, ப. 51.
  6. Gunther 1950, ப. 209.
  7. Underwood, Jeffery S. (1991). The Wings of Democracy: The Influence of Air Power on the Roosevelt Administration, 1933-1941. Texas A&M University Press. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89096-388-3.
  8. Hurley, Alfred F. (1975). Billy Mitchell, Crusader for Air Power. Indiana University Press. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-20180-2.
  9. Burns 1956, ப. 52.
  10. Gunther 1950, ப. 212.
  11. "Civitans Organize Here". The New York Times. June 16, 1922. http://query.nytimes.com/gst/abstract.html?res=9A06E7DC1231EF33A25755C1A9609C946395D6CF. பார்த்த நாள்: January 21, 2009. 
  12. Burns 1956, ப. 91–96.
  13. Morgan 1985, ப. 267, 269–72, 286–87.
  14. Burns 1956, ப. 101.
  15. Smith 2007, ப. 238–42.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்ளின்_ரூசவெல்ட்&oldid=3652790" இலிருந்து மீள்விக்கப்பட்டது