வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜனவரி 2008
- ஜனவரி 27 - இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் சுகார்ட்டோ காலமானார். (பிபிசி)
- ஜனவரி 23 - கொங்கோ சனநாயகக் குடியரசு அரசுக்கும் ஹுரு இனப் போராளிக் குழுவிற்கும் இடையில் அமைதி உடன்படிக்கையொன்று எட்டப்பட்டது. (பிபிசி)
- ஜனவரி 23 - வடக்கு போலந்தில் மிரொசிலாவியெச் என்ற இடத்தில் விமானப்படை விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் உயர் வான்படை அதிகாரிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜனவரி 23 - காசாவில் எல்லைச் சுவர் உடைக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்க்கணக்கான பாலஸ்தீனர்கள் தமது அத்தியாவசியத் தேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக எகிப்தினுள் நுழைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 22 - இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ஏழு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. (ராய்ட்டர்ஸ்)
- ஜனவரி 17 - லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பீஜிங்கில் இருந்து வந்த பிரித்தானிய ஏர்வேசின் 777 போயிங் விமானம் அவசரமாகப் புற்றரையில் தரையிரங்கியதில் 19 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 16 - டஹினா ஸ்பெக்டாபிலிஸ் (Tahina spectabilis) என்ற பூத்தவுடனே இறக்கும் ஒரு தென்னை போன்ற தாவரம் வடக்கு மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- ஜனவரி 15 - இஸ்ரேலியரின் தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 55 பேர் படுகாயமடைந்தனர். ஹமாஸ் இயக்கத் தலைவர் மஹ்மூட் சஹாரின் மகனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். (வாஷிங்டன் போஸ்ட்)
- ஜனவரி 14 - நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளை அண்மித்தது. புதனை அண்மித்த இரண்டாவது விண்கலம் இதுவாகும். (பிபிசி)
- ஜனவரி 11 - முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறிய நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி காலமானார். (பிபிசி)
- ஜனவரி 9 - இந்தியாவின் டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த டாட்டா நனோ என்ற தானுந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.(பிபிசி)
- ஜனவரி 8 - மாலைதீவு அதிபர் மௌமூன் அப்துல் கையூம் கத்திக்குத்து தாக்குதலொன்றிலிருந்து உயிர் தப்பினார். (பிபிசி)
- ஜனவரி 7 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு பகுதியில் 20 ஆண்டுகளின் பின்னர் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. (பிபிசி)
- ஜனவரி 3 - ஐக்கிய அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்ய அயோவா மாநிலத்தில் நிகழ்ந்த தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். (பிபிசி)
- ஜனவரி 1 - மேற்கு கென்யாவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கலவரங்களின் போது இடம்பெயர்ந்திருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். (கூகில் நியூஸ்)
- ஜனவரி 1 - சைப்பிரஸ், மால்ட்டா ஆகியன யூரோவை தமது அதிகாரபூர்வ நாணயங்ககளாக ஏற்றுக் கொண்டன. ((பிபிசி)