ஜூன் 2014
<< | சூன் 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
ஜூன் 2014 (June 2014) , 2014 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் சூன் 15, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, சூலை 15 முடிவடைகிறது. இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் ஷஃபான் மாதம் மே 31 சனிக்கிழமை தொடங்கி சூன் 28 சனிக்கிழமை முடிவடைகின்றது.
சிறப்பு நாட்கள்
தொகுசமயம்
தொகு- சூன் 1 - நம்பியாண்டார் நம்பி குருபூசை
- சூன் 2 - சேக்கிழார் குருபூசை
- சூன் 3 - சோமாசி மாற நாயனார் குருபூசை
- சூன் 11 - வைகாசி விசாகம்
- சூன் 13 - திருஞானசம்பந்தர் குருபூசை
- சூன் 13 - திருநீலகண்டர் குருபூசை
- சூன் 13 - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் குருபூசை
- சூன் 13 - முருக நாயனார் குருபூசை
- சூன் 13 - ஷபேஃபராத்
- சூன் 15 - திரித்துவ ஞாயிறு
- சூன் 21 - கலிக்காம நாயனார் குருபூசை
- சூன் 26 - சர்வ அமாவாசை
- சூன் 29 - ரம்சான் நோன்பு துவக்கம்
- சூன் 29 - ரத யாத்திரை துவக்கம் புரி [1]
விடுதலை நாள் கொண்டாடும் நாடுகள்
தொகு- சூன் 4 - டோங்கா
- சூன் 10 - போர்த்துகல்
- சூன் 12 - பிலிப்பைன்ஸ்
- சூன் 17 - ஐஸ்லாந்து
- சூன் 19 - குவைத்
- சூன் 25 - மொசாம்பிக்
- சூன் 26 - மடகாஸ்கர்
- சூன் 29 - பிலிப்பைன்ஸ்
பன்னாட்டு சிறப்பு நாட்கள்
தொகு- சூன் 2 - பன்னாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாள்
- சூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாள்
- சூன் 8 - உலக பெருங்கடல்கள் நாள்[2]
- சூன் 12 - குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்[3]
- சூன் 14 - உலக இரத்த தானம் செய்வோர் நாள் [4]
- சூன் 15 - உலக முதியோர் மீதான கொடுமைக்கு எதிரான நாள்[5]
- சூன் 16 - தந்தையர் தினம் [6]
- சூன் 17 - உலக பாலைவனம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் தினம் [7]
- சூன் 20 - உலக அகதிகள் நாள்[8]
- சூன் 23 - உலக பொதுச் சேவை தினம்.[9]
- சூன் 23 - உலக ஒலிம்பிக் தினம்.[10]
- சூன் 26 - தடை செய்யப்பட்ட போதை மருந்துகளுக்கு எதிர்ப்பு தினம் [11]
- சூன் 27 - உலக நீரிழிவு நோய் தினம்
பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்
தொகு- சூன் 3 - மு. கருணாநிதி
- சூன் 5 - காயிதே மில்லத்
- சூன் 11 - லாலு பிரசாத் யாதவ்
- சூன் 12 - நேசமணி
- சூன் 16 - டி. ஆர். மகாலிங்கம்
- சூன் 18 - கக்கன்
- சூன் 19 - சல்மான் ருஷ்டி
- சூன் 19 - ராகுல் காந்தி
- சூன் 24 - கண்ணதாசன்
- சூன் 25 - வி.பி. சிங்
- சூன் 26 - ம.பொ. சிவஞானம்
- சூன் 27 - ஹெலன் கெல்லர்
நினைவு நாட்கள்
தொகு- சூன் 1 - ஹெலன் கெல்லர்
- சூன் 2 - ராஜ் கபூர்
- சூன் 3 - வில்லியம் ஹார்வி
- சூன் 17 - வாஞ்சிநாதன்
- சூன் 21 - கனகசபை பிள்ளை, தமிழ் ஆராய்ச்சியாளர்
- சூன் 23 - சஞ்சய் காந்தி
- சூன் 26 - சாமுவேல் கிராம்டன்
- சூன் 28 - தண்டபாணி தேசிகர்
- சூன் 30 - விந்தன்
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- சூன் 30:
- உருசியாவில் 14 பேருடன் சென்ற உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியது (சேனல் நியூஸ் ஆசியா)
- தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இலங்கையின் ரஜரட்டைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அறிவித்தனர். (தமிழ்மிரர்(
- தாய்லாந்தில் பட்டாணி மாகாணத்தில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி8ச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். (ஏபி)
- உக்ரைனின் தோனெத்ஸ்க் நகரில் உருசியாவின் சேனல் ஒன்றின் படப்பிடிப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (ஆர்ரி)
- தெற்கு இசுரேல் மீது காசா கரையில் இருந்து 11 ஏவுகணைகள் ஏவப்பட்டதில் ஒரு வீடு சேதமடைந்தது. (எருசலேம் போஸ்ட்)
- கடத்தப்பட்ட இசுரேலிய சிறுவர்கள் மூவர் உட்பட நால்வரின் இறந்த உடல்கள் மேற்குக் கரையில் எப்ரோன் நகரில் கண்டெடுக்கப்பட்டது. (ஏபிசி)
- சூன் 29:
- நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர். (ஏபி)
- பரகுவையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் 200,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- 2014 வட ஈராக் தாக்குதல்:
- இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் பெயர் இசுலாமிய நாடு என மாற்றப்பட்டது. இதன் கலீபாவாக அபூ பக்கர் அல்-பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். (தி இன்டிபென்டன்ட்)
- உக்ரைனின் உருசி-சார்பு பிரிவினைவாதிகள் மே 29 இல் தம்மால் பிடிக்கப்பட்ட ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் கண்காணிப்பாளர்கள் சிலரை விடுவித்தனர். (ராய்ட்டர்சு)
- லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். (சீஎனென்)
- இலங்கை கொழும்பு நகரில் பாலத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் இருவர் கொல்லப்பட்டனர். (டெய்லிமிரர்)
- சூன் 28:
- பாக்கித்தான் வடக்கு வரீசித்தானில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 19 போராளிகள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: இசிசு போராளிகள் வசமுள்ள திக்கிரித்து நகரின் மையப் பகுதியில் இருந்து போராளிகளை ஈராக்கிய இராணுவம் வெளியேற்றினர். (நியூயோர்க் டைம்சு)
- முதலாம் உலகப் போருக்கு வழிவகுத்த ஆத்திரிய இளவரசர் பிரான்சிஸ் பேர்டினண்ட்டின் படுகொலையின் 100 ஆம் ஆண்டு நினைவை பொசுனியா எர்செகோவினாவின் சாரயேவோ நகரம் நினைவு கூர்ந்தது. (ராய்ட்டர்சு)
- இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அலாங்கு நகரில் உள்ள உலகின் மிகப் பெரும் கப்பல் உடைப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். (பிகார்பிரபா)
- புது தில்லியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் 11-மாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 50 பேர் இடிபாடுகளிடையே சிக்குண்டனர். (பிபிசி)
- சூன் 27:
- ஈழப்போர்: தமிழ்நாட்டில் இருந்து ஆத்திரேலியா நோக்கிப் புறப்பட்ட 153 இலங்கைத் தமிழ் அகதிகளை கொண்ட படகு ஒன்று கிறிஸ்துமசுத் தீவை நெருங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட www.ulagatamilsangam.org என்ற வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். (விகடன்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: திக்கிரித் நகரில் இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு போராளிகள் இம்மாத ஆரம்பத்தில் குறைந்தது 160 கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. (ஏபி)
- இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உக்ரைன், ஜோர்ஜியா, மல்தோவா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உருசியா இவ்வொப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்துது. (பிபிசி)
- சூன் 26:
- 2014 வட ஈராக் தாக்குதல்: பக்தாத் நகருக்கு வடக்கே உள்ள மன்சூரியாத் ஆல்-ஜபால் நகரை ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் கைப்பற்றினர். இங்கு நான்கு இயற்கை எரிவளி வய்ல்கள் உள்ளன. (ராய்ட்டர்சு)
- ஈராக்கியப் படையினர் இசுலாமியப் போராளிகள் வசமுள்ள திக்கிரித் நகர் மீது வான் தாக்குதல்களை ஆரம்பித்தனர். ஒரு உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. (ராய்ட்டர்சு)
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: அளுத்கமையில் வன்செயல் சம்பவத்தினால் சேதமாக்கப்பட்ட வணிக நிலையங்கள், வீடுகளை மீள் புனரமைக்கும் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, அப்பணிகளை நொறைவேற்றும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. (தினகரன்)
- இலங்கையில் இந்துக் கோயில்களில் நடத்தப்படும் மிருக பலி யாகங்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது என்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் அறிவித்தார். (தமிழ்மிரர்)
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் புதிய தலைவராக நாராயணசாமி சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டார். (டெய்லிமிரர்)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: டி பிரிவு போட்டி ஒன்றின் போது இத்தாலியின் ஜியோர்ஜியோ சிலீனியின் தோற்பட்டையில் கடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட உருகுவாய் அணியின் லூயி சுவாரெசு மீதிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 27 வரை இவர் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது. (பிபிசி)
- சூன் 25:
- ஈழப்போர்: இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிபுணர் குழு உறுப்பினர்களாக பின்லாந்தின் முன்னாள் குடியரசுத்தலைவர் மார்டி அதிசாரி, நியுசிலாந்தின் முன்னாள் ஆளுனர் சில்வியா கார்ட்ரைட், பாக்கித்தான் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜகாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐநா அறிவித்துள்ளது. (தமிழ்மிரர்)
- பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உத்-தாவாவை பயங்கரவாத இயக்கமாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. (தினமலர்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் பக்தாதுக்கு வடக்கே 87 கிமீ தூரத்தில் உள்ள யாத்ரிப் நகரை எட்டியதை அடுத்து ஈராக்கியப் பிரதமர் தேசிய ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்தார். (வாசிங்டன் போஸ்ட்)
- நைஜீரியாவின் அபுஜா நகரில் கடைத்தொகுதி ஒன்றில் கெண்டு ஒன்று வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- சூன் 24:
- உக்ரைனில் மில் எம்.ஐ.-8 உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (ஸ்கை நியூஸ்)
- பார்செலோனாவில் 40,000 இருக்கைகள் கொண்ட ஐரோப்பாவிலேயே மிகப் பெரும் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு கத்தார் அரசு 2.2 பில்லியன் யூரோக்களை வழங்கியது. (ஆர்ரி)
- சூன் 23:
- ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.(மீடியா ஒன்)
- ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான அலாஸ்காவில் கடற்கரை பகுதியில் 7.9 அளவு ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. (தே வெதர் சன்னல்)
- மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு அறிவித்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- முசுலிம் சகோதரத்துவக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஆத்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் கிறெஸ்ட் உட்பட அல்ஜசீரா தொலைக்காட்சியின் 3 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையை எகிப்து நீதிமன்றம் விதித்தது. (வ்ஹ்த் 7 நியூஸ்)
- பாக்கித்தான் வடக்கு வசீரிஸ்தான் மாகாணத்தில் படையினர் நடத்திய வான் தாக்குதலக்ளில் 25 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிசினெசு ஸ்டான்டர்டு)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியா தன்னிடம் மீதியாக இருந்த 100 தொன் வேதியியல் ஆயுதங்களை ஐநாவின் வேதி ஆயுதத் தடைக்கான அமைப்பிடம் ஒப்படைத்தது. (ராய்ட்டர்சு)
- நைஜீரியாவின் வடக்கே கனோ நகரில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கென்ய வான்படையினர் நடத்திய தாக்குதலில் அல் காயிதாவுடன் தொடர்புடைய அல்-சபாப் போராளிகள் 80 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உக்ரைனிய அரசின் போர்நிறுத்த உடன்பாட்டை உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். (ஏபி)
- டென்மார்க்கின் ஸ்டெவன்சு கிளின்ட் அந்நாட்டின் முதலாவது உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (யுனெஸ்கோ)
- சூன் 22:
- இந்தியாவில் குஜராத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது(பீகார் பிரபா),(கல்ப் நியூஸ்)
- இலங்கையில் பொலன்னறுவை, எலகேர பிரதேசத்தில் பௌத்த விகாராதிபதி அலகொலமட தம்மரத்ன (47) இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். (தமிழ்மிரர்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் சுணி இசுலாமியப் போராளிகள் சிரியா எல்லையில் அல்-வாலிது நகரையும், ஜோர்தான் எல்லையில் துரைபில் நகரையும் கைப்பற்றினர். (அல்ஜசீரா)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரிய எல்லையில் கோலான் குன்றுகள் பகுதியில் சிரிய ஏவுகணை ஒன்றினால் பாரவுந்து தாக்கப்பட்டதில் 15 வயது சிறுவன் உட்பட நான்கு இசுரேலியர்கள் கொல்லப்பட்டனர்., (பிபிசி)
- பியூ பழமை நகரங்கள் மியான்மரின் முதலாவது உலகப் பாரம்பரியக் களமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. (யுனெஸ்கோ)
- சூன் 21:
- 2014 வட ஈராக் தாக்குதல்: மேற்கு ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் அல்-கயீம், அனா, ராவா ஆகிய மூன்று நகரங்களைக் கைப்பற்றினர். (அல்ஜசீரா)
- தென் கொரிய இராணுவவீரர் ஒருவர் தனது சகாக்கள் ஐவரை சுட்டுக் கொன்று விட்டு ஆயுதத்துடன் தப்பி ஓடினார். (பிபிசி)
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: அளுத்கமை பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளை விசாரிக்க உயர்மட்டக் குழு அன்று நியமிக்கப்படும் என அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச அறிவித்துள்ளார். பாணந்துறை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான "நோ லிமிட்" என்ற புடைவை நிலையம் ஒன்று தீக்கிரையானது. (தி ஐலண்டு)
- சீனாவில் கிழக்கில் சின்சியாங்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 13 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். (சேனல் நியூஸ் ஆசியா)
- சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கை: பாக்கித்தானில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (தினகரன்)
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு காங்கிரசு உறுப்பினர்கள் காங்கிரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (தினகரன்)
- சூன் 20:
- எகிப்தில் முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் 180 உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்தது. (ஏபிசி)
- ஈராக், சிரியா எல்லையில் உள்ள பகுதியை ஈராக் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியது. (தினகரன்)
- சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில், 34 பேர் பரிதாபமாக பலியாகினர்.(சன்னெல்4)
- இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை 2013 ஆம் ஆண்டில் தாண்டியதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அறிவித்துள்ளது. (பிபிசி), (யூஎன்எச்சிஆர்)
- சிரிய உள்நாட்டுப் போர்: திமிஷ்கு நகரின் தெற்கேயுள்ள அகதி முகாம் ஒன்றின் மீது இராணுவ உலங்குவானூர்திகள் தாக்கியதில் 9 குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். (மிடில் ஈஸ்ட் ஐ)
- 2014 வட ஈராக் தாக்குதல்: அமெரிக்கா 300 இராணுவ ஆலோசகர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. (ராய்ட்டர்சு)
- பல்கேரியாவின் வடகிழக்கே இடம்பெற்ற மழை, மற்றும் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- சூன் 19:
- இலங்கை, மகியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் மிதவாத ஜாதிக பலசேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர் பலத்த தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (தமிழ்மிரர்), (பிபிசி)
- இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. (தினகரன்)
- நைஜீரியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சா தனது ஆட்சிக் காலத்தில் 1990களில் கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியான 227 மில்லியன் டாலர்களை லீக்டன்ஸ்டைன் நைஜீரியாவுக்குக்த் திரும்பத் தர ஒப்புதல் அளித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- உலகின் மிகப்பெரிய ஒளியியல், அகச்சிவப்பு தொலைநோக்கி ஒன்றை அமைக்கும் நோக்கில் சிலியில் உள்ள 3,000 மீட்டர் உயர மலை உச்சி தகர்க்கப்பட்டது. (பிபிசி)
- சூன் 18:
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கைச் சோனகர் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இலங்கையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்பட்டது. (பிபிசி)
- இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐநா சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (தினகரன்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: மோசுல் நகரில் பணியாற்றிய 40 இந்தியக் கட்டிடத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டனர். (ஐஏஎன்எஸ்)
- ஈராக்கின் பைஜி நகரில் உள்ள மிகப்பெரிய பாறைநெய் தூய்விப்பாலையை இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு போராளிகள் கைப்பற்றினர். (ஏபி)
- 97 இந்தோனேசியரைக் கொண்ட படகு ஒன்று கவிழ்ந்ததில் 66 பேர் காணாமல் போயினர். (ஏபி)
- லைபீரியாவின் மொன்ரோவியாவில் எபோலா தீநுண்ம நோய் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- துருக்கியில் 1980 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குகொண்ட முன்னாள் அரசுத்தலைவர் கேனன் எவ்ரென், 96, ஆயுள் தண்டனை பெற்றார். (யூரோநியூஸ்
- சூன் 17:
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கையில் முஸ்லிம் இனத்தவர் மீது கடும்போக்கு பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். (எஸ்பிஎஸ்)
- வடகொரியா உருசியாவின் கேஎச்-35 ஐ ஒத்த சீர்வேக ஏவுகணை ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)
- அல் சபாப் போராளிகள் கென்யாவின் பொரொமோக்கோ கிராமத்தைத் தாக்கி 15 பேரைக் கொன்றனர். வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டன. (ராய்ட்டர்சு)
- ஈராக்கின் அமெரிக்கத் தூதரகத்தின் மேலதிக பாதுகாப்புக்காக அங்கு 275 அமெரிக்கப் படையினர் அனுப்பப்பட்டனர். (ஸ்கை நியூஸ்)
- தென்னாப்பிரிக்காவில் காட்டுத்தீ பரவியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். (எஸ்ஏபிசி)
- பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரும் கடல் சரணாலயம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா வெளியிட்டார். (வாசிங்டன் போஸ்ட்)
- சூன் 16:
- ஆப்கானித்தானில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தலிபான் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை மீறி வாக்களித்த 11 பேரின் விரல்களை தலிபான்கள் துண்டித்தனர். (தினத்தந்தி)
- ஈராக்கின் டால் அஃபார் நகரை சுணி இசுலாமிய இசில் போராளிகள் கைப்பற்றினர். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- கென்யாவில் பெக்கெடோனி நகரில் இசுலாம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாததால் 48 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். (ஏபி)
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கையின் தெற்கே பேருவளையில் வெல்லிப்பிட்டி பள்ளிவாசல் அருகே முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் நடந்த வன்முறைகளின் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல்கள், மற்றும் கடைகள் எரியூட்டப்பட்டன. (நியூயோர்க் டைம்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: அலெப்போ நகரில் உலங்கு வானூர்தியில் இருந்து கொத்துக் குண்டு வீசப்பட்டதில் 25 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- செருமனியின் முன்னாள் பார்முலா 1 வாகையாளர் மைக்கேல் சூமாக்கர் ஆழ்மயக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். (ஏபிசி)
- சூன் 15:
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கையின் தெற்கே அளுத்கமை, மற்றும் பேருவளையில் பொது பல சேனா அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடுத்து அங்கு பௌத்த, முசுலிம் இனத்தவரிடையே கலவரம் மூண்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. (ஐலண்டு)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் வட்மேற்கேயுள்ள கெசாப் நகரை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். (ராய்ட்டர்சு)
- ஆப்கானித்தானின் வடமேற்கு பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர். நனாய்மோ டெய்லி நியூஸ்)
- கராச்சி விமான நிலையத் தாக்குதலுக்கு திட்டமிட்ட முக்கிய நபர் வான்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். (பிகார்பிரபா)
- வடக்கு வரீசித்தானில் பாக்கித்தானியப் படையினர் படை நடவடிக்கையை ஆரம்பித்தனர். (துன்யா நியூஸ்)
- 2014 வட ஈராக் தாக்குதல்: இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தாக்குதல்களை அடுத்து பக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சூன் 14:
- உக்ரைனிய இராணுவ விமானம் ஒன்றை உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர். (சீஎனென்)
- ஆப்கானித்தானில் அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. (அல்ஜசீரா)
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. (தமிழ்வின்)
- சூன் 13:
- மரியூபோல் துறைமுக நகரைத் தாம் மீளக் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- தாய்லாந்தில் ஊரடங்கு சட்டத்தை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டு இராணுவ அரசு அறிவித்தது. (ஏபிசி)
- மூன்று மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானப் பயணிகளின் குடும்பங்களுக்கு ஆரம்பக் கட்ட கொடுப்பனவாக தலா $50,000 வழங்கப்பட்டது. (பிபிசி)
- பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நாடாளுமன்றத் தடையை நாடாளுமன்றக் குழு அங்கீகரித்தது. (பிபிசி)
- சூன் 12:
- பக்தாதுக்கு எதிராக இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு தொடங்கியிருக்கும் தாக்குதல்கள் தொடர்பாக ஐநா விவாதித்தது. (எஸ்பிஎஸ்)
- ஈராக்கிய குர்துகள் கிர்க்குக் நகரைக் கைப்பற்றினர். இராணுவத்தினர் வெளியேறினர். (பிபிசி)
- மூன்று உருசியத் தாங்கிகள் கிழக்கு உக்ரைனுக்குள் ஊடுருவியதாக உக்ரைனிய உட்துறை அமைச்சர் கூறினார். (டெலிகிராப்)
- இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பிலாய் நகரில் பிலாய் உருக்காலையில் இடம்பெற்ற வாயு வெளியேற்றத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் காயமடைந்தனர். (என்டிரிவி)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: ஆரம்ப நிகழ்வுகள் பிரேசிலில் நடைபெற்றன. முதல் நாள் போட்டியில் பிரேசில் குரோவாசியாவை 3-1 கணக்கில் வென்றது. (நியூஸ்), (ஏபி)
- சூன் 11:
- 2014 வட ஈராக் தாக்குதல்: ஈராக்கின் திக்கிரித் நகரைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் துருக்கிய தூதரகத்தைத் தாக்கித் தூதுவர் உட்பட 48 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். நகரில் இருந்து 500,000 மக்கள் வெளியேறி ஈராக்கிய குர்திஸ்தான் பக்கம் சென்றனர்.(அல்ஜசீரா)
- யெமனில் தீவிரவாதிகள் மின் நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. (அல்ஜசீரா)
- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றம் முடிவு செய்யும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார். (தினமலர்)
- சூன் 10:
- ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் இசுலாமியத் தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. காவல்துறையினரும், இராணுவத்தினரும் நகரை விட்டுத் தப்பி ஓடினர். (வாசிங்டன் போஸ்ட்)
- கராச்சியில் ஜின்னா விமான நிலையம் அருகேயிருந்த இராணுவப் பயிற்சி நிலையம் ஒன்றைத் தாலிபான்கள் தாக்கினர். (ஏபி)
- இசுரேலின் அடுத்த சனாதிபதியாக ரூவென் ரிவ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
- இலங்கையில் தீவிரவாதத்தாலும், பிரச்சினைகளாலும் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். (தி இந்து)
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றினை தேசிய சுதந்திர முன்னணி எனும் கட்சி கொழும்பில் நடத்தியது. (தி இந்து), (பிபிசி தமிழோசை), (தினமணி)
- சூன் 9:
- 2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்: பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் தாக்குதலுக்கு உரிமை கோரியது. (வால் ஸ்ட்ரீட் ஜர்னல்)
- சிரிய உள்நாட்டுப் போர்: அனைத்துக் குடிமக்களுக்கும் பொது மன்னிப்பை சிரிய அரசு அறிவித்தது. (ஏபி)
- ஆப்கானித்தானில் இடம்பெற்ற மோதலில் ஐந்து நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். " (பிபிசி)
- சூன் 8:
- அப்துல் பத்தா அல்-சிசி எகிப்தின் புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்றார். (சீஎனென்)
- ஈராக்கிய குர்திஸ்தானில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- கராச்சியின் ஜின்னா விமானநிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கொசோவோ நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. (புளூம்பேர்க்)
- சுவீடனில் நடைபெற்ற 2014 கொனிஃபா உலகக் காற்பந்து கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் நீசு கவுண்டி அணி வெற்றி பெற்றது. தமிழீழத் தேசிய காற்பந்து அணி அணி 11வதாக வந்தது. (கொனிஃபா)
- ஆண்களுக்கான 2014 பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் எசுப்பானியாவின் ரஃபேல் நடால் செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 9வது தடவையாக வெற்றிக்கிண்ணத்தைப் பெற்று சாதனை படைத்தார். (டெலிகிராப்)
- சூன் 7:
- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சோமாலியக் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர் உட்பட 11 பேர் விடுவிக்கப்பட்டனர். (டெய்லிமிரர்)
- ஐநா மனித உரிமைகள் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் செப்டம்பர் 1 இல் நிறைவடைவதை அடுத்து புதிய ஆணையராக ஜோர்டான் நாட்டுத் தூதர் இளவரசர் செயித் அல் உசைன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். (வாய்ஸ் ஒப் அமெரிக்கா)
- உக்ரைனின் புதிய அரசுத்தலைவராக பெத்ரோ பொரொசென்கோ பதவியேற்றார். (பிபிசி)
- இலங்கையில், அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேர், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியப் போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. (ஒன் இந்தியா), (மாலைமலர்)
- பக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- காங்கோவில் தெற்கு கீவு மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 16 பெண்கள், 8 சிறுவர்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். (ஸ்கை)
- பிரெஞ்சு ஓப்பன் டென்னிசு போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருசியாவின் மரியா சரப்போவா உருமேனியாவின் சிமோனா ஆலப்பை 6-4, 6-7, 6-4 என்ற கணக்கில் வென்று கோப்பையை இரண்டாவது தடவையாகக் கைப்பற்றினார். (டெலிகிராப்)
- சூன் 6:
- கிழக்கு உக்ரைனின் வன்முறைகளுக்கு அமைதி முறையான முடிவை எட்ட வருமாறு உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், மற்றும் உக்ரைன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெத்ரோ பரசென்கோ ஆகியோர் கோரியுள்ளனர். (பிபிசி)
- பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் இயக்கத்தின் மூத்த தளபதி அசிக்குல்லா மெகுசுத் வடக்கு வரிசித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். (சீஎனென்)
- இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்காலத் தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் பொறுப்பேற்றார். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து நாசமாகின. (மாலைசுடர்)(தினமணி)
- கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவுக்கு வெளியே நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்று வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- இரண்டாம் உலகப் போரில் மேற்குலக அணியின் நார்மண்டி படையெடுப்பின் முதலாம் நாள் வெற்றி நாளின் 70-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட உலக நாடுகளின் தலைவர்கல் பிரான்சின் நார்மண்டி நகரில் கூடினர். (வாசிங்டன் போஸ்ட்)
- மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தொற்றுநோயின் தாக்கத்தில் 200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. (ஏபிசி)
- சூன் 5:
- நைஜீரியாவின் வடகிழக்கே மைதுகிரி நகரில் கிராமம் ஒன்றை போகோ அராம் போராளிகள் தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏமனில் இராணுவக் காவலரண் ஒன்றை அல் காயிதா போராளிகள் தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கலிபோர்னியாவின் இம்பீரியல் நகரில் ஜெட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. (பிபிசி)
- மெர்ஸ் தொற்றுநோய் ஒட்டகங்களுக்கும் பரவியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (BBC)
- அயர்லாந்தில் துவாம் என்ற இடத்தில் 796 குழந்தைகளின் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி) (சீஎனென்)
- சூன் 4:
- அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் ஹார்வடு பல்கலைக்கழக நூலகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. (பொஸ்டன் மகசின்)
- இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். (தி இந்து)
- கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க் வட்டாரத்தில் இரண்டு இராணுவ நிலைகளை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர். (பிபிசி)
- சிரியா அரசுத்தலைவர் தேர்தலில் பஷர் அல்-அசாத் மூன்றாவது தடவையாக வெற்றி பெற்றார். (பிபிசி)
- கினியில் எபோலா தீநுண்ம நோய் காரணமாக கடந்த சில நாட்களில் 208 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- இலங்கையின் மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கூறப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். (தி ஐலண்டு)
- ஆப்கானித்தானில் தாலிபான்களால் ஐந்து ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர் விடுவிக்கப்படும் காணொளி வெளியாகியுள்ளது. (பிபிசி)
- சூன் 3:
- தனித் தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பிற்கு ஐநா அவையில் இந்தியா வலியுறுத்த வேண்டுமென இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். (தி இந்து (தமிழ்))
- இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப்பெருக்கினால் இறந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது. (தினகரன்)
- இந்திய நடுவண் அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஐபிஎன் லைவ்
- நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தில் போகோ அராம் போராளிகள் தாக்கியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- எகிப்தின் அரசுத்தலைவராக முன்னாள் இராணுவத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசி தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முதலாவது வெள்ளையரல்லாத தலைவராக அசீம் ஆம்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். (FT)
- சூன் 2:
- இலங்கையில் களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மாவட்டங்களில் அடைமழை பெய்ததால் 15 பேர் உயிரிழந்தனர், 5,000 பேர் இடம்பெயர்ந்தனர். (தினகரன்)
- உத்தரப் பிரதேச குழு வன்புணர்வில் இரண்டு பெண் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் அலுவலகம் முன்னால் எதிர்ப்புத் தெரிவித்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர். (பிபிசி)
- நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மாதி ஆற்றில் வீழ்ந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். (பிகார்பிரபா)
- ஈரான் தலைநகர் தெகரானில் பெரும் புழுதிப் புயல் மற்றும் காறு அடித்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். (எஸ்பிஎஸ்)
- பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் ஃபத்தா, ஹமாஸ் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஒன்றிணைவு அரசை அறிவித்தார். (ராய்ட்டர்சு)
- எசுப்பானியத்தின் அரசர் உவான் கார்லோசு தாம் முடி துறப்பதாக அறிவித்தார். (ஆர்டீஇ)
- ஆப்பிள் நிறுவனம் சுவிஃப்ட் என்ற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தியது. (வயர்டு)
- சூன் 1:
- ஆத்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் ஈழத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்தார். (சிட்னி மோர்னிங் எரால்டு), (டெய்லிமெயில்)
- வடக்கு உருசியாவில் மூர்மன்ஸ்க் வட்டத்தில் 19 பேருடன் சென்ற மில் எம்.ஐ.-8 உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் தப்பினர், ஏனையோர் பற்றிய விபரம் தெரியவில்லை. (இத்தார்-தாஸ்)
- இந்தியாவில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மழையில் சிக்கி 40 பேர் பலியானார்கள்.(ஒன் இந்திய)
- சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு எண்ணெய் கப்பல் காணாமல் போனது. (தினமணி)
- நைஜீரியாவின் வடகிழக்கே கால்பந்துப் போட்டி ஒன்றின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29வது மாநிலமானது. (இந்துத்தான் டைம்சு)
- எல் சல்வடோரின் அரசுத்தலைவராக முன்னாள் போராளிக் குழுத் தலைவர் சல்வடோர் சான்செசு செரேன் பதவியேற்றார். (ஏபி)
- துடுப்பாட்டத்தில், பெங்களூருவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் 2014 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிங்சு இலெவன் பஞ்சாபு அணியை வென்று இரண்டாவது தடவையாக கோப்பையை வென்றது. (ஸ்கை)
- துடுப்பாட்ட செய்திகள்
வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2024
துடுப்பாட்ட செய்திகள் |
- சூன் 29:
- இங்கிலாந்து தொடருக்கான இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்திய துடுப்பாட்ட அணி முன்னால் தலைவர் ராகுல் டிராவிட் ஆலோசனை வழங்குகிறார் (தமிழ் நியூஸ் பிபிசி )
- சூன் 25:
- இங்கிலாந்துகு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. (தினகரன்)
- பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் 20 வயதாகும் ருபாப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன(ற்றிபுனே)
- சூன் 24:
- இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத இந்திய துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்தது.(எண் டிவி தெலுங்கு நியூஸ்),(டைம்ஸ் ஒப் இந்தியா)
- இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை கெளரவப்படுத்தும் வகையில் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனம் அரிதான தங்க நாணயத்தை வெளியிட்டது.(தினமணி)
- சூன் 23:
- மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு எதிரான 2–வது தேர்வுத் துடுப்பாட்ட (டெஸ்ட்) போட்டியின் போது நியூசிலாந்து அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.(கோ கிரிக்கெட்)
- சூன் 22:
- இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் திலகரத்ன டில்சான் வரும் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இவர் இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளார்.(லங்கா ஸ்ரீ )
- தோனி தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை 9ம் தேதி தொடங்குகிறது.(டெக்கான் ஹெரல்ட்)
- தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தின் 84–வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (கோ கிரிக்கெட்)
- இங்கிலாந்து – இலங்கை துடுப்பாட்ட அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார் டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும். (டெலிக்ராப்)
- இங்கிலாந்து – இலங்கை துடுப்பாட்ட அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது(cricbuzz)
- சூன் 21:
- இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். (பிபிசி)
- சூன் 20:
- நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.(இஎஸ்பிஎன் கிரிகின்போ)
- சூன் 19:
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவின் வீரர் விராட் கோலி 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தென் ஆப்பிரிக்கா வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.(ஐசிசி)
- இந்தியா-வங்காளதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.(தினகரன்)
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஷோன் டைட், இந்திய அழகி மஷூம் சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.(தி இந்து)
- சூன் 18:
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கையை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை, ஆஸ்திரேலியத் துடுப்பாட்டவாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. (தினத்தந்தி)
- உள்ளூர் டி20 துடுப்பாட்ட போட்டியில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் மொகமது அஷ்ரஃபுல் வங்கதேச துடுப்பாட்ட வாரியத்தால் 8 ஆண்டுகால தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.(தமிழ்பிபிசி)
சூன் 2014 இறப்புகள்
தொகு- சூன் 2 - துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
- சூன் 3 - கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)
- சூன் 12 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
- சூன் 12 - கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://targetstudy.com/knowledge/day/220/rath-yatra.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/44/world-oceans-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/30/anti-child-labour-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/252/world-blood-donor-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/82/world-elder-abuse-awareness-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/45/fathers-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/103/world-day-to-combat-desertification-and-drought.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/46/world-refugee-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/102/public-service-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/219/international-olympic-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/105/international-day-against-drug-abuse-and-illicit-trafficking.html
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்