உருகுவை தேசிய காற்பந்து அணி
உருகுவை தேசிய கால்பந்து அணி பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் உருகுவை சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை உருகுவையில் கால்பந்தாட்டத்தைக் கட்டுப்படுத்தி வரும் உருகுவை கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. தற்போதைய முதன்மை பயிற்றுனராக ஆசுகார் தபரேசு உள்ளார். உருகுவையின் அணி கால்பந்து இரசிகர்களால் La Celeste (வான்வெளி நீலத்தவர்) அல்லது Charrúas எனக் குறிப்பிடப்படுகின்றது.
அடைபெயர் | Los Charrúas La Celeste (வான்வெளி நீலத்தினர்) La Garra Charrúa | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | Asociación Uruguaya de Fútbol (AUF) | |||||||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா) | |||||||
தலைமைப் பயிற்சியாளர் | ஆசுகார் தபரேசு | |||||||
துணைப் பயிற்சியாளர் | செல்சோ ஓடெரோ | |||||||
அணித் தலைவர் | டியாகோ லுகானோ | |||||||
Most caps | டியாகோ போர்லன் (107) | |||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | லூயி சுயாரெசு (39) | |||||||
தன்னக விளையாட்டரங்கம் | எசுடேடியோ சென்டெனரியோ | |||||||
பீஃபா குறியீடு | URU | |||||||
பீஃபா தரவரிசை | 6 1 | |||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 2 (சூன் 2012) | |||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 76 (திசம்பர் 1998) | |||||||
எலோ தரவரிசை | 9 | |||||||
அதிகபட்ச எலோ | 1 (பல்வேறு நாட்கள் 1920–31) | |||||||
குறைந்தபட்ச எலோ | 46 (மார்ச் 1980) | |||||||
| ||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||
உருகுவை 2–3 அர்கெந்தீனா (மோன்டிவிடியோ, உருகுவை; 16 மே 1901) | ||||||||
பெரும் வெற்றி | ||||||||
உருகுவை 9–0 பொலிவியா (லிமா; 9 நவம்பர் 1927) | ||||||||
பெரும் தோல்வி | ||||||||
உருகுவை 0–6 அர்கெந்தீனா (மோன்டிவிடியோ, உருகுவை; 20 சூலை 1902) | ||||||||
உலகக் கோப்பை | ||||||||
பங்கேற்புகள் | 12 (முதற்தடவையாக 1930 இல்) | |||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1930 மற்றும் 1950 | |||||||
கோப்பா அமெரிக்கா | ||||||||
பங்கேற்புகள் | 41 (முதற்தடவையாக தென் அமெரிக்க கால்பந்துப் போட்டி, 1916 இல்) | |||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1916, 1917, 1920, 1923, 1924,1926,1935,1942, 1956, 1959, 1967, 1983,1987, 1995, 2011 | |||||||
கூட்டமைப்புகள் கோப்பை | ||||||||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 1997 இல்) | |||||||
சிறந்த முடிவு | 4வது இடம், 1997, 2013 | |||||||
Honours
|
உருகுவே 2011 அமெரிக்கக் கோப்பையை வென்று தற்போதைய வாகையாளர்களாக விளங்குகின்றனர். கோபா அமெரிக்கா கோப்பையை 15 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். உலகக்கோப்பையை, 1930ஆம் ஆண்டில் போட்டி நடத்தும் நாடாகவும் 1950ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1924ஆம் ஆண்டிலும் 1928ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். மொத்தமாக 20 அலுவல்முறை பன்னாட்டு வெற்றிகளை பெற்றுள்ள உருகுவை மிகுந்த பன்னாட்டு விருதுகளை வென்ற நாடாக சாதனை படைத்துள்ளது. உருகுவை 3.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு என்கையில் இச்சாதனைகளின் பெருமை விரியும்.